இருதினங்கள் திருவையாறு, வெள்ளாம் பெரம்பூர்,கோனேரிராஜபுரம், செந்தலை, கருப்பூர், வரகூர், நடுக்காவேரி, பழமானேரி, நேமம், அகரப்பேட்டை, கச்சமங்கலம், அரங்கனாதன்புரம், கடுவெளி, தில்லைஸ்தானம் மகாராஜபுரம் .,
அன்பர்களே, நம் குழந்தைகள் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக வளரவேண்டும் என ஆசைபடாத பெற்றோர் இருக்கமுடியுமா?இதற்கென்றே ஒரு சிவாலயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வாருங்கள் குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர் திருகோயிலுக்கு.
அகம் குழைந்து வேண்டுவோர்க்கு, நல்வரங்கள் தந்தருள்வாள்
குழந்தைவல்லி . வேறென்ன வேண்டும் நமக்கு?
எங்கேஉள்ளது என்பதையும்கூறிவிடுகிறேன் .
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகில் சிற்றம்பாக்கம்
என்னும் சிற்றூரில் உள்ளது இத்திருகோயில்.பேரம்பாக்கத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு
மங்களீஸ்வரர், ஷெனாய் நகர் சென்னை ,ஊத்துக்கோட்டை: அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், கிராம தேவதை செல்லியம்மன் கோவில், நேரு பஜாரில் உள்ள சர்ப விநாயகர், நாகவல்லி அம்மன் கோவில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில், தொம்பரம்பேடு மகா கால பைரவர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், பென்னலுார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றியுள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

பள்ளிப்பட்டு: ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமுடிவாக்கம் கோதண்டராம சுவாமி கோவில் மற்றும் சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. விஜயராகவபுரம் கொற்றலை ஆற்றங்கரையில், 500 ஆண்டுகள் பழமையான, விஜயராகவ பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுப்ரபாத தரிசனம், தொடர்ந்து கோ பூஜை நடந்தது. பின், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். கும்மிடிப்பூண்டி எஸ்.பி.முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீவாரி பாபா நகரில் உள்ள லட்சுமி கணபதி, தட்சிணாமூர்த்தி கோவிலில், வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பொன்னேரி: பொன்னேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் ஆலயம், தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் ஆலயம், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், பழவேற்காடு சிந்தாமணி ஈஸ்வரர் ஆகிய திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நள்ளிரவு முதல் நடந்த, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிராத்தனைகள் நடந்தன. ஏகாதேசியை முன்னிட்டு, கரிகிருஷ்ண பெருமாள் கோவில், மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவில், தேவதானம் ரங்கநாதர் பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், படவேட்டம்மன் கோவில், மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் வீரராகவர் கோவில், புட்லுார் அங்காள பரமேஸ்வரி, பூங்கா நகர் யோக ஞான தட்சிணாமூர்த்தி மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவான், பெரியகுப்பம் அருணாசலேஸ்வரர் கோவில், மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
***மிகப்புராதனமான புலவநல்லூர் கங்காதீச்வர பெருமான் திருகோயில், திருவாரூர் மாவட்டம். திருவாரூர் குடந்தை சாலையில்அமைந்துள்ள சிற்றூர் இது.பல அற்புத சூட்சுமங்களை கொண்ட இத்திருகோயிலை அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும் .
========================================================================
கும்பகோணத்தின் வடமேற்கில் திருப்புறம்பயத்தில் இருந்து நான்கு கிமி மேற்கிலும் உள்ளது. ராஜ கோபுரம் இல்லை ஒரு வெளி பிரகாரமும், ஒரு முகப்பு மண்டபமும் உடைய கோயில்

அர்ஜுனன் எனும் விஜயன் வழிபட்டு பேறுபெற்ற தலமாகும். கருவறை கோட்டத்தில் தென்முக கடவுள் மட்டுமே உள்ளார். சம்பந்தர், அப்பர் பதிகம் பெற்றது.இறைவன்- விஜயநாதர் இறைவி- மங்கை நாயகிபோதிய வருவாய் இல்லாததால் குருக்கள் ஒருகாலபூசையுடன் சென்றுவிடுகிறார். கும்பகோணத்தின் அருகில் இருந்தும் அதிக மக்கள் வருவதில்லை,அதனால் தொழில் அபிவிருத்தி, நட்சத்திர தலம், ராசி தலம் என மக்களை ஈர்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கோயில் நிர்வாகிகள்... கிராம சிவாலயம் காப்போம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையிலிருந்து காஞ்சிபுரம். அங்கிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 9 ஆவது கி். மீ ல் தூசி கிராமம் உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் – ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.
No comments:
Post a Comment