எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, February 25, 2017

nakshatra varahi...,

அருந்தமிழையும், ஆன்மிகத்தையும் போற்றி வளர்த்திட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சேதுபதி மன்னர்களின் ஆளுகை பூமியாகக் கருதப்படுவது முகவை என்று அழைக்கப்படும் இராமநாதபுரம். இந்த நகரிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி அமைந்துள்ளது. 

இத்தலத்திற்கு அருகில் சேது கடற்கரை செல்லும் வழியில் அகத்தியர் தீர்த்தம் என்றும் சின்னக்கோவில் என்றும் வழங்கப்பெறும் சிற்றூர் உள்ளது. இங்கே வெற்றிவிநாயகர் ஆலயமும், வெள்ளைப் பிள்ளையார் என்று அழைக்கபடும் அகத்திய மாமுனிவர் ஆலயமும் அருகருகே அமைந்துள்ளன.

 வெள்ளைப்பிள்ளையார் என்றழைக்கப்படும் அகத்தியர் சிலை அற்புதமானத் தோற்றம் உடையது. விலைமதிப்பற்ற சலவைக் கல்லினால் ஆனது இந்தச் சிலை. சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கடல் அலையால் அடித்து வரப்பட்டு, மக்களால் கைப்பற்றப்பட்டு, கிராமத்து முன்னோரால் இங்கே நிறுவப்பட்டது என்பது செய்தி.


தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!
திருவையாற்று வடகயிலாயத்தில் திருச்சதயப் பெருவிழா
பூலோகக் கயிலாயம் எனவும் காசிக்குச் சமமான திருத்தலங்களிலே ஒன்றாகவும் குறிப்பிடப் பெறும் திருவையாற்றில் உள்ள ஐயாறப்பர் திருக்கோயிலின் நான்காவது திருச்சுற்றில் தனிக்கோயிலாக "வடயிலாயம்என்று அழைக்கப் பெறும்ஒலோகமாதேவீசுரம்அமைந்துள்ளதுஇத்திருக்கோயில் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி தந்திசத்திவிடங்கியான ஒலோகமாதேவியார் எடுப்பித்த முழுவதும் கருங்கற்களாலான திருக்கோயிலாகும்


ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர் வரலாறு:-
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.

மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.

சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது

----------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு மற்றும் சனி கிரக சிக்கல்களில் இருந்து விடுபட வராஹி வழிபாடு
பொதுவாக ராகு கேது பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி, ஏழரை சனி அல்லது சனி திசை நடப்பவர்கள் கீழ்க்கண்ட வாராஹி அன்னையின் திருநாமங்களை கூறி தினசரி வழிபட்டு வர, குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும். தாய் வராஹி, எமனின் ஆற்றலை பிரதிநிதித்துவம் செய்பவர் ஆவார். அந்தந்த ராசியினர் அந்தந்த மந்திரங்களை கூறி வரலாம். பொதுவாக கீழ்க்கண்ட 12 பெயர்களுடன் சேர்த்து 'ஓம் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே ' என அனைத்தையும் கூறி முடிப்பது சால சிறந்தது. தாயின் மூக்கின் நுனியை கண் திறந்து தியானித்து கீழ்க்கண்ட மந்திரங்கள் கூறி வர துன்பங்கள் பறந்தோடும்.


மேஷம் : ஓம் பஞ்சமி வராஹியை நமஹ்
ரிஷபம் : ஓம் தண்டினி வராஹியை நமஹ்
மிதுனம்: ஓம் சங்கேத வராஹியை நமஹ்
கடகம் : ஓம் சமயேஷ்வரி வராஹியை நமஹ்
சிம்மம் : ஓம் சமய சங்கேத வராஹியை நமஹ்
கன்னி : ஓம் மந்த்ர வராஹியை நமஹ்
துலாம் : ஓம் போத்ரிணி வராஹியை நமஹ்


விருச்சிகம் : ஓம் சிவதூதி வராஹியை நமஹ்
தனுசு : ஓம் வார்த்தாளி வராஹியை நமஹ்
மகரம் : ஓம் மஹாசேனா வராஹியை நமஹ்
கும்பம் : ஓம் ஆக்ன்ய சக்ரேஷ்வரி வராஹியை நமஹ்
மீனம் : ஓம் அரிக்னி வராஹியை நமஹ்
" ஓம் ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே "
-- --------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் தத் புருஷாய வித்மஹே 
லோபாமுத்ரா சமேதாய தீமஹி       
  தந்நோ அகஸ்தீஸ்வர ப்ரசோதயாத்

கடவுள் எப்படி ஜாதி பார்க்கிறார் பாருங்கள்..,
அன்று சிலரால் தாழ்ந்த ஜாதி என கூறப்பட்ட பாணர் குலத்தை சேர்ந்த திருப்பாணர் தினமும் கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு செல்வார். கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால் அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார்.

ஒருமுறை இப்படி பெருமாளை நோக்கி பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி என்பவர் பெருமாளை நீராட்ட பொற்குடத்தில் நீர் எடுத்து சென்றார். அப்போது, 

தான் செல்வதற்காக வழிவிட வேண்டி கைதட்டி திருப்பாணரை விலக கூறினார். பெருமானின் நினைப்பிலேயே இருந்ததால் சாரங்க முனிவர் கூப்பிட்டதை திருப்பாணர் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சாரங்கமுனி திருப்பாணரை கல்லால் எறிந்து அவர் தலையில் ரத்தம் வர செய்தார். அதன்பின் அங்கிருந்து சென்றார் .

இதன் பின் பொற்குடத்தில் இருந்த நீரை எடுத்து திருவரங்கம் சென்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய சாரங்கமுனி முயன்றபோது பெருமாளின் தலையில் ரத்தம் வருவதை பார்த்து துடித்தார். இதற்கான காரணத்தை அறிய முடியாததால், ஏதும் சாப்பிடாமல் உறங்கி விட்டார்.
பெருமாள் சாரங்கமுனி கனவில் தோன்றி ஆற்றின் கரையில் நின்று என்னைப்பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை நீர் கல்லால் தாக்கினாய். என் உள்ளம் உண்மையான பக்தனான திருப்பாணர் மீது இருந்ததால், அவன் மீது எறிந்த கல் என் மீது பட்டது. எனவே திருப்பாணரிடம் சென்று மன்னிப்பு கேட்டு, அவனை தோள்மீது சுமந்து கோயிலுக்கு வந்து என்னை தரிசனம் செய்ய வைப்பாயாக என்று பெருமாள் கூறி மறைந்தார்.
பெருமானின் உத்தரவுப்படி சாரங்கமுனி திருப்பாணரை தோளில் சுமந்து பெருமாளை தரிசனம் செய்ய வைத்தார். இதுநாள் வரை பெருமாளை பார்த்திராத திருப்பாணர் பெருமாளின் பாதம் முதல் உச்சி வரை பார்த்து மகிழ்ந்தார்.
இந்த மகிழ்ச்சியில் தான். "கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென்னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே" என்று பத்துப்பாசுரங்களையும் பாடிமுடித்தார்.திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார் . திருப்பணாழ்வார் அவதார நாள் கார்த்திகை ரோகினி.

No comments:

Post a Comment