திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது.
விசிறு, என்றார்.பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு “
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!
பாளையங்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலை ஓரத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது வெங்கடாசலபதி திருக்கோவில்.
நெடுங்குணம், பாலாம்பிகா சமேத தீர்காஜலேஸ்வரர் திருகோயில்......வந்தவாசி அருகே, திருவண்ணாமலை மாவட்டம்.....
சுகபிரம்ம மகரிஷி வழிபட்ட மிகபுராதனமான திருகோயில் இது....
பூம்புகாருக்கு ஒரு கிமி முன்னாள் தருமகுளம் முக்குட்டு என்ற இடத்தில் இருந்து சற்று வடக்கு நோக்கிய தெருவில் சென்றால் அப்பகுதி கீழையூர் என அழைக்கப்படுகிறது. பூம்புகார்-மயிலாடுதுறை அருகில் மூன்று கீழையயூர்கள் உள்ளன. இது 3.கீழையூர் எனப்படுகிறது. சிறிய அரியேக்கர் பரப்புடைய கோயில் கிழக்கு நோக்கியது, எனினும் பலசிறப்புகளை கொண்டது. மூலவர்
இறைவன்-சங்கமுகேஸ்வரர் இறைவி- சங்கமுகநாயகி
இக்கருவறை தெற்கில் தனி சன்னதியாக காசி விசுவநாதரும் சர்வலோக நாயகியும் உள்ளனர். இந்த சன்னதி வினாயகராக வரசித்தி விநாயகர் உள்ளார்.
தனியாக ஸ்தல விநாயகர் உள்ளார். பின் புறம் மேற்கு நோக்கிய தான்தோன்றிஸ்வரர் , அருணாச்சலேஸ்வரர் ஆகியோர் தனி சிற்றாலயங்களில் உள்ளனர். முருகன் வள்ளி தெய்வானை சகிதமாய் தனி சிற்றாலயத்தில் கிழக்கு நோக்கி உள்ளார். ஒன்பது கொள்சன்னதியும் வடகிழக்கில் உள்ளது. பார்க்க வேண்டிய கோயில்
மேற்கு திருமாளபத்தியில் யோகா நரசிம்மரும், லட்சுமி நரசிம்மரும் உமாமகேஸ்வரியும் உள்ளனர்
இரண்யேஸ்வரர், சர்வதீர்த்தகரை காஞ்சி......
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், கணக்கப்பிள்ளை வலசை என்ற கிராமத்தில், குத்துக்கல்வலசை-பண்பொழி-திருமலைக்கோவில் நெடுஞ்சாலையில் மேற்குதிசையில் அமைந்துள்ளது "வேல்மலை'. இங்கு முருகன், பாலமுருகன் வடிவில் அருள்கிறார். இக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டியதற்கு ஆதாரமாக கோயிலின் முன் மண்டபத்தில் மீன் சின்னம் உள்ளது. இம்மலை முற்காலத்தில் ஆதிதிருமலை என்று அழைக்கப்பட்டது. இந்த மலை வேல் போன்று அமைந்துள்ளதால் "வேல்மலை' என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் ஆதிநாதர் என்ற சித்தர் முருகனை நோக்கி வேல்மலையின் உச்சியில் தவம் செய்தார். தனது தலை மீது குமரன் திருவடி தீண்டுமின்பம் கிடைக்க வேண்டுமென்பது சித்தரின் விருப்பம். அவருடைய தவத்துக்கு இரங்கிய முருகன் அவருக்கு காட்சியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். மேலும் ஆதிநாதசித்தர் தவம் செய்த இடத்திலேயே முருகன் கோயிலும் அமைந்துள்ளது. அவருடைய ஜீவசமாதி மேல்தான் பாலமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் சிறப்பம்சம் பாலமுருகன் நேர் கீழ்முகமாக காட்சியளிக்கிறார். அவருடைய இடது கை கீழ் நோக்கியும் வலது கை மேல் நோக்கியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனமாகிய மயில் தெற்கு முகமாகக் காட்சியளிக்கும் கோலமும் இத்தலத்திற்கே உரிய சிறப்பு. செவ்வாய் தோஷமுடைய பெண்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலின் வலப்புறம் கன்னிவிநாயகர் கோயில் அமைந்துள்ளது. இடப்புறம் பைரவர் கோயில் உள்ளது. கோயிலின் பின்புறம் உள்ள சுனை தீர்த்தம் தீராத நோயும் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடை திறந்திருக்கும் இக்கோயிலில் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன. தற்போது இக்கோயிலின் முன் மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன.
தகவலுக்கு 99423 05520. - எஸ்.வேம்புபிள்ளை
ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் வழி, பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர்.
கும்பகோணம்-சுவாமிமலை-அண்டகுடி- திருமண்டங்குடி என செல்லவேண்டும் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிமி தூரத்தில் உள்ளது.
திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபுவனேஸ்வரர் திருக்கோயில் இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. சிறிய கோயில் என்றாலும் பல சிறப்புகள் கொண்ட தலம், கல்வெட்டுக்கள் நிரந்த கோயில், சோழர்களின் பெருமை சொல்லும் கோயில்.
பாபநாசம்-ஆவூர் சாலையில் பாபநாசத்தில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ளது கோபுராஜபுரம் . அன்னுகுடி,கோபுராஜபுரம்,மாலாபுரம் இவை மூன்று கோயில்களும் அடுத்தடுத்து உள்ளன. மேற்கு நோக்கிய அழகிய கருங்கல் தளி சோழர் பெருமை காட்டி நிற்கிறது. பராமரிப்பு இல்லாமை எனும் ஆமை புகுந்ததால் விரிசல் விழுந்து விழுந்து இன்னும் சில காலத்தில் கருவறையும் விழும் அபாயத்தில் உள்ள http://mooligaivazam-kuppusamy.blogspot.in/
கொக்காலடி அருள்மிகு சிவா விஷ்ணு ஆலயம் கொக்காலடி திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி யில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் இ.சி. ஆர் சாலையில் அமைந்துள்ளது .கூத்தாநல்லூர் ஸ்ரீ சுந்தரேஸ்வர பெருமானின் அழகிய தோற்றம்.... கூத்தாநல்லூர் , கொரடாச்சேரி வட்டம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.....இங்கு மேலும் இரு சிவஸ்தலங்கள் உள்ளன....
வைதீஸ்வரன் கோயில்- மயிலாடுதுறை சாலையில் ஐந்து கிமி சென்றால் வெட்டாறு பாலம் வரும் அதன் கரையில் கிழக்கு நோக்கி ஐந்து கிமி சென்றால் சேமங்கலம் அடையலாம்.
சோலையின் மத்தியில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க, இறைவி தெற்கு நோக்கி உள்ளார், விநாயகர் தென்மேற்கில் சிறிதாய் அழகிய திருவாசியுடன் கல்லிலே வடிக்கப்பட்டுள்ளார். அருகில் சுப்பிரமணியர் தனிமையில் மயிலோ, துணைவியர்கள் யாருமின்றி உள்ளார். அடுத்து வேதபுரீஸ்வரர் சன்னதி சிறு நந்தி அம்பிகையுடன் உள்ளார். மகாலட்சுமி இல்லை. ஒரு மரத்தடியில் கையில் மழுவுடன் அய்யனார் உள்ளார்.
சேயிழை என்றால் சர்வலங்கார பூஷணி , சேயிழை மங்கலம் என்றால் சர்வ அலங்காரி குடியிருக்கும் இடம் என பொருள் இப்படிப்பட்டவள் குடியிருக்கும் இடத்தினை நீங்களும் கண்டுகளிக்க வேண்டாமா? பிரதான சாலையில் இருந்து அஞ்சே அஞ்சு கிலோமீட்டர் தான்.இறைவன்-அகத்தீச்வரர் இறைவி- பார்வதி
வைதீஸ்வரன் கோயில்- திருப்புன்கூர் சாலையில் திருபுன்கூரில் இருந்து வடக்கில் இரண்டு கிமி சென்றால் பெருமங்கலம் உள்ளது, வலது புறம் சிறிய சந்து ஒன்றில் புகுந்து சென்றால் அரை ஏக்கர் பரப்புடைய சிவன் கோயிலை அடையலாம்.
ஏயர்கோன் கலிகாமர் நாயனார் முக்தியடைந்த தலம். அதனால கலிக்காமர் கோயில் என்று கேட்டால் மட்டுமே தெரியும். ஏயர்கோன் கலிக்காம நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். "ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகை கூறுகிறது.
No comments:
Post a Comment