எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, February 15, 2017

தஞ்சை உலா...,


“யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.”

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். “பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே !நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே ! லட்சுமி நரசிம்மனே!


குறிப்பு : பெரியகோயில் அருகில் உள்ள ..., சங்கர நாராயணர் கோயிலில் கோண லிங்கம்.. கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்...,  அடுத்து அதே தெருவில். கொங்கணேஸ்வரர் ஆலயம்... அதில்... கொங்கண சித்தரின்.. மஹா சாந்நித்யம் .., அன்னபூரணி அம்பாள்..., கொங்கண மஹரிஷியின் பெருமைகள் சொல்ல யுகம் காணா..,, “அந்த சிவனையே தன் ஜடா முடிக்குள்.. கொணர்ந்தவன் அப்பா..., ., என தஞ்சை ஜீவ அருள் நாடியில் வாக்கு உறைப்பார்..அகத்தியெம்பெருமான்., அந் நிகழ்வோடு..... தொடர்புடைய ஸ்தலம்.... இன்னும் இன்னும் அதியற்புத... அபூர்வ ஆனந்தானந்த விளக்கங்கள் உண்டு....,  11 திபம் ஏற்றி...., சிவனை சப்த ரிஷிகள்.. வெளிக் கொணர்வதாக ஸ்தல வரலாறு.  உரைக்கும்... இதிலிருந்து ஏகாதச ருத்ர மூர்த்திகள்.. வந்தனர்..,(வந்திருக்கலாம்...)

இது பற்றிய உத்தம குருவாய் மொழிகள்... ஏகாதசம் என்பது...  பற்றிய விளக்கங்களை இங்கு (பிப்ரவரி 2008 பக்கம் 25-30 ) ஈண்டு கண்டிடுக.....

ஏகாதசித் திதி நாளில் பொதுவாக பத்துப் பாடல்கள் கொண்ட பதிகத்தை பாடி பதினொன்றவதாக - இந்த "() த் துதியை ஓதி ஏகாதசி விரத்தை நிறைவு செய்தல் நலம் .,

ஏகா தசத் துதி ஓதி எழுச்சியுறல் எம்பாவாய் 
 சாகா வர நிலையும் சக்தியமாய் ஆகுதப்பா 
 (ங்கார வதிச் சாரம் ஓத குரு வாய்மொழியாம்
ஏகாதச வாரம் எம் பெருமானைடவாரே !"


அகஸ்தியர் விஜயம் -- பிபரவரி 2008 ., பக்கம் 29. 
 கரூர் தலத்தில் 48 நாட்கள் ஒரு மண்டலகாலம் திங்கட் கிழமையில்     ஸ்ரீபசுபதிஸ்வரரையும் , புதன் கிழமை ஸ்ரீ அபயரங்கநாதரையும்  ,சனிக் கிழமை தான்தோன்றி மலை ஸ்ரீ வெங்கடாஜலப் பெருமானையும் வழிபட்டு வந்திடில் நலம் .

அடுத்து...., அதே தெருவில்.. சிறிது தூரம்.. தள்ளி..., கைலாச நாதர் ஆலயம்  விஜய ராமர் கோயில் , ஸ்வர்ண காமாட்சி , நவநீத கிருஷ்ணபெருமாள்., இதில் ஸவர்ண காமாட்சி பற்றி :-- நஜன் அவர்களின் கருனை காமாட்சி புத்தகத்திலிருந்து...,"*சுவர்ண காமாக்ஷி ஸ்வர்ணாங்கி , சுகஹஸ்னஸ , சூதலிங்க வல்லபை , தர்ம தேவி என்ற பெயர்களும் இவளுக்கு உண்டு . ,இவளே *பங்காரு காமாக்ஷி.,





அதறக்கடுத்து...., மூல ஆஞ்சநேயர் .., குருகுல சஞ்ஜீவ அனுமான் ...,  ராஜா கோபால சுவாமி எனப்படும்   சிவேந்திரர் ஆலயம்... இந்த ஆலயமே அபூர்வம் தான்..., மார்த்தாண்ட பைரவர் .., 8அடிக்கு மேல் சிவதுர்க்கை .. மஹாலக்ஷ்மி .. அபூர்வமாக... கங்கை . யமுனா தேவி மூர்த்திகள்..., பகுளா தேவி....., அற்புதமான முருகன் பலப் பல.... சிலாரூபங்கள்..., இவ்வாறாக பெரிய கோயிலிருந்து ஒரு சுற்றாக... இவ்வாலயங்களை தரிசித்து... பழைய பேருந்து நிலையம் அடைந்து விடலாம்...

தேர் தஞ்சையில் உள்ள 4 வீதிகளிலும் வலம் வரும்தேர் பவனி வரும் 4 வீதிகளிலும்    பக்தர்கள் வசதிக்காகவும்சாமி தரிசனத்திற்காகவும்தேர் நிறுத்தப்படுகிறது.


மேலராஜவீதியில் கொங்கணேஸ்வரர் கோவில்மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும்வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில் (ராணிவாய்க்கால் சந்து எதிரில்), ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்நிறுத்தப்படுகிறது

கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை (மாரியம்மன் கோவில்அருகில்), விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்), மணிகர்ணிகேஸ்வரர் கோவில் (தமிழ்ப்பல்கலைக்கழக அலுவலகம் அருகில்), வரதராஜ பெருமாள் கோவில் (நிக்கல்சன்  வங்கி நிறுத்தப்படுகிறது

தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில்காசி விஸ்வநாதர் கோவில் (இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில் (தங்கசாரதா மருத்துவமனை அருகில்ஆகிய 11 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறதுபின்னர் தேர் மண்டபத்தை வந்தடைகிறது.


No comments:

Post a Comment