எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, February 15, 2017

ஆலயங்களின் அற்புதம்


திருவள்ளூர் மாவட்டம் பல அரிய  புராதனமான திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .....அவற்றுள் பல பக்தர்கள் வருகையின்மையால் வெளிச்சத்திறகு வராமலே உள்ளன......அவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஈக்காடு என்னும் கிராமம் ...இங்குள்ள சிவன் கோவிலில் மூலவரான பெருமான் இன்னதென்று அறிய முடியாத வகையில் தாமரை தண்டு போன்ற பாண   வடிவம் கொண்டு  அருள் பாலிக்கிறார்.


தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்று ,இவர் நிறம் மாறுவது பேரதிசயம் .....சிதிலமடைந்து பூசை புனஸ்காரங்கள் நின்று போயிருந்த இத்திருக்கோயிலைகிராம மக்கள் அரும்பாடு பட்டு புனரமைத்து , தற்போது 2 காலங்கள் நித்திய பூசைகள் நடைபெற்று வருகிறது ....இங்கு உறையும் பெருமான் தன்னை நாடுவோர்களுக்கு , இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் , அனைத்து நலன்களையும் அள்ளி  தர தயாராக உள்ளார் ....பெற்று வர நீங்கள் தயாரா



INFO TAKEN FROM : shivabelievers.blogspot.com



ü  திண்டுக்கல் to பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் . வத்தலக்குண்டு ஓணான் கரட்டின் பின்புறமுள்ள குகையில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகவும் ...., உயிருடன் நாகமும் தற்போது உள்ளது 

Ø  ஸ்ரீ அகஸ்திய மகரிஷி வடநாட்டு யாத்திரை கிளம்புமுன் இப்பெருமானை வைத்து   பூஜித்ததாக வரலாறு.16 பட்டை லிங்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்அம்பாள் ஸ்ரீ காளீஸ்வரிகோயில் முற்றிலும் காணாமல் போய் தற்போது சிறிய கொட்டகையில் வைத்துள்ளனர்அருகில் குளம் காணப்படுகிறதுவில்வம் தல விருட்சமாக இருந்து தற்போது இல்லைஇரண்டு வேளை பூஜை நடைபெறுகிறதுதொடர்புக்கு திரு கோவிந்தன்-9750804192, மற்றும் ரங்கசாமி -9566171479. இக்கோயில் கிளார் என்ற கிராமத்தில் உள்ளதுபேருந்து வசதி காஞ்சி-களத்தூர் 87, மற்றும் தனியார் பேருந்துகள்.

v  அங்கயற்கன்னி உடனமர் சொக்கநாதர் திருக்கோயில்
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி என்னும் சிற்றூர் .திருமலை நாயக்கர் காலத்தில் கட்டபட்டதாக தகவல் பெருமானே.


v  கீரமங்கலத்தில் மெய்நின்றநாதசுவாமி கோயில் :- 900 ஆண்டுக்கு பிறகு பிரமாண்டம் :புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள மெய்நின்றநாத சுவாமி சமேத ஒப்பிலாமணியம்மன் ஆலயம் உள்ளதுஇந்த ஆலயத்தில் உள்ள மெய்நின்றநாதரிடம் தமைலைப் புலவர் நக்கீரன் தான் தர்க்கம் செய்ததில் தவறுகள் உண்டா என்று உண்மையை கேட்டறிந்த இடம் என்றும் உண்மையை உரைத்தாய் என்று சிவன் சொன்னதால் மெய்நின்றநாதர் என்றும் கூறப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டை வட்டம் அத்திவெட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீசௌந்திர நாயகி உடனுறை ஸ்ரீ சௌந்திர நாதர் சுவாமி திருக்கோவில் 100 ஆண்டுகளாக இப்படி தான் உள்ளது ...,

அன்னுகுடி ஆலயம் .......ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன் திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய இத்தகைய பெயர் மிக அரிது ......இறைவி அபிராமி .....இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் உள்ள தலங்கள் வெகு குறைவு ...அபூர்வம் .......இத்தகைய திருகோயில்கள் மிகசிறந்த பரிகார தலங்கள் ஆகும் ..,


கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் சுந்தரபெருமாள் கோயில்-ராஜகிரி அடுத்து உள்ளதுபிரதான சாலையில் இருந்து தெற்கில் உள்ளது கோயில் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து இறைவனை வழிபட்ட தலம்இதனால் மீன ராசிக்காரகளுக்கு ஏற்ற தலம்.சேக்கிழார் தன பெரியபுராணத்தில் சேலூர் என இத் தலத்தினை குறிப்பிட்டுள்ளார்பாபாஜி சித்தர் வழிபட்ட திருக்கோயில்.
ஆதித்த சோழனால் கட்டப்பெற்ற கோயில் வழியெங்கும் பிற மதத்தவர் குடியேற்றம் அதிகரித்து உள்ளது அதனால் போதிய வருமானம் இன்றி உள்ளதுஇதனை கண்ணுறும் அன்பர்கள் இச்சாலை வழி பயணிக்கும்போது இக்கோயில் இறைவனை வழிபாட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இறைவன்-மச்சபுரீஸ்வரர் இறைவி-சுகந்த குந்தளாம்பிகை


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்தநாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல் விட்டு விட்டு சாலை அமைத்தனர்.


திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

No comments:

Post a Comment