எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, February 15, 2017

சக்கரங்கள்

1.சிதம்பரம்-இரகசியம் இடம்-'திருவம்பலச்சக்கரம்'-எனும்'சிதாகாச சக்கரம்',
2.திருக்கடையூர்-காலசம்ஹார மூர்த்தி சன்னதி-'மிருத்யுஞ்ஜய யந்திரம்',
3.திருவானைகாவல்-அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள்-ஸ்ரீசக்கரம்,
       4.மாங்காடு-மூலக்காமாட்சி-'மூலிகைகளான அர்த்தமேரு',
          5.விழுப்புரம்-அனந்தபுரம் தண்டாயுதபாணி-ஸ்ரீசக்கரம்,
6.காஞ்சிபுரம்-காமாட்சியம்மன்-'ஸ்ரீசக்கரம்',
7.திருத்தணி-முருகன்பாதம்-'சடாட்சரச்சக்கரம்',
8.திருப்போரூர்-கந்தசாமி-'ஸ்ரீசக்கரம்',
 9.கங்கைகொண்ட சோழபுரம்-8கோள்கள்-12ராசிகள்-  கமலயந்திரம்-சூரியசக்கரம்',
                10.திருச்செந்தூர்-முருகன் மார்பில்-'ஷ்டாட்சரம்',
             11.திருவாரூர்-தியாகராஜர்மார்பு-'ஸ்ரீசக்கரம்',
             12.சிதம்பரம்-அன்னாகர்ஷண யந்திரம்.
       13.மூகாம்பிகை-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
   14.திருவிடைமருதூர்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
 15.திருவொற்றியூர்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
 16.விழுப்புரம்-ஸ்ரீஸ்ரீசக்கரம்,
   17.காருகுடி-திடசிந்தனை-காலசக்கரம்.

ஒரு ஜீவன் முக்தியடைய விரும்புவது என்பதே எத்தனை அரிதான விஷயம்! உரோமச முனிவர் அதை விரும்புகிறாரே என்று ஆச்சரியத்தோடு வெகுநேரம் தீர்க்கமாக முனிவரை பார்த்தபடியே இருந்தார். உரோமச முனிவர் ஏற்கனவே நன்கு பக்குவப்பட்டவர்தான். ஆனாலும், குரு ரத்னமாக விளங்கும் அகஸ்தியரின் வாயிலாக உபதேசத்தையும், முக்திக்கான மார்க்கத்தையும் அறிந்து கொள்ளவே விரும்பினார். அதாவது என்னால் முடிந்த அத்தனை ஆன்மிக சாதனைகளையும் செய்து விட்டேன். இனி தன் முயற்சியில் ஒன்றுமில்லை எனும் தெளிவை அவர் பெற்றிருந்தார். 

அகத்தியர் மெதுவாக பேச ஆரம்பிக்க, உரோமச முனிவர் மிகக் கூர்மையாக கேட்கத் தொடங்கினார். ‘‘பொருநையாற்றில் (தற்போது தாமிரபரணி) யாம் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுகிறோம். அந்த மலர்கள் நதியினூடே பயணித்து எங்கெங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அந்தப் புனித இடங்களிலெல்லாம் சிவலிங்கத்தை நிறுவி வழிபடும். பின்னர், பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தியை பெறுவீர். உம்மால் நிறுவப்படும் இறைவனுக்கு கைலாசநாதர் என்றும், இறைவியின் திருநாமம் சிவகாமி என்றும் அழைக்கப்படுவர்’’ என்று அருளுரையாகக் கூறினார். 


இவை எல்லாமும் வெளிப்பார்வைக்கு சொன்ன விஷயங்கள் என்றாலும் அகஸ்தியர் சொன்ன யாவும் உள்நோக்கிய பயணமே ஆகும். உள்ளுக்குள் அமைந்துள்ள சக்திகளின் பிரதிபிம்பங்களாகவே வெளியே இந்த தலங்கள் அமைந்துள்ளன. வெளியே உள்ள இத்தலங்களை நோக்கி பயணப்படும்போது தாமாக அத்தலத்திலுள்ள சக்திகள் நம்மை உள்ளுக்குள் செலுத்தும். இவ்வாறாக முதல் தாமரை மலர் பாபநாசத்தில் தொடங்கி சேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூ மங்கலம் ஆகிய ஒன்பது தலங்களில் ஒதுங்கி நின்றன. 


மேலும், அகத்திய முனிவரின் ஆணைப்படி அத்தலங்களில் சூரியன், சந்திரன், குரு, ராகு, புதன், சுக்கிரன், கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கான சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். இப்படி நிறுவிய பின்னர், தாமிரபரணி நதி கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தியை அடைந்தார். இவ்வாறு உரோமச முனிவர் வழிபட்ட தலங்களை நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்பட்டன.

No comments:

Post a Comment