எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 5, 2018

ஆத்மாக்களின் சங்கமம் - 3

ஆண்டவன் பிச்சையின் உடம்பு மெள்ள மெள்ள தேறி வந்தது. இந்த அத்தியாயத்தில்  அவர் சந்தித்தது திருப்புகழ் மணியையும் அந்த சந்திப்பில் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்போம்...,

திருப்புகழ் மணி ஆண்டவன் பிச்சையின் பாடல்களை பத்திரிக்கையில் பிரசிரித்து இருந்தார்.., ஆனால் நேரிடையாக இருவரும் பேசியது இல்லை.., எனவே ஒரு சிவராத்திரி அன்று, திருப்புகழ்மணி அவர்களைச் சந்திக்க விருப்பம் கொண்டு ஆண்டவன் பிச்சை, அவரிடத்திற்குச் சென்றார்.., திருப்புகழ் மணிக்கும் ஆண்டவன் பிச்சையைப் பற்றி அதிக விஷயங்கள் தெரியாது.., மேலும் அன்று சிவராத்திரி தினம்.., ஆகவே தனக்கு அதிக வேலைகள் இருக்கிறபடியால் ஒருவரையும் சந்திக்க இயலாது என்று திருப்புகழ் மணி கூறிவிட்டார்.., ஆண்டவன்பிச்சையும் மணியைச் சந்திக்காமல் திரும்பி விட்டார்.., அன்று இரவு திருப்புகழ் மணியின் குருவான பின்னவாசல் பெரியவா கனவில் தோன்றி, கடிந்து கொண்டார்., காரணம் திருப்புகழ் மணி “பின்னவாசல் பெரியவா என்று அழைக்கப்படும் யோகி இராமகிருஷ்ணாவை தனது குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்.., ஒரு சமயம் குருவைக் காணச் சென்றபொழுது.., யோகி கூறினாராம்நான் வேறு உருவில் வந்து தரிசனம் அளிப்பேன் அப்பொழுது என்னை அடையாளம் கண்டு பிடிக்க இயலுமா உன்னால் என்று , இப்பொழுது பின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா சித்தி அடைந்த விபரம் மட்டும்தான் திருப்புகழ் மணிக்குத் தெரியும்., மற்றவிபரங்களை தெரிந்திருக்க ஞாயமில்லை..,, அன்றிரவு கனவில் “நேற்று காலை நான் உன்னைக் காண வந்தேன், ஆனால் நீ என்னை கண்டு கொள்ள வில்லை.., மேலும் உனக்கு பல அலுவல்கள் உள்ளது என்று என்னை அனுப்பி விட்டாய் என்றார்..,

“ஓ! வந்தது நமது குரு.. தெரியாமல் தவறு இழைத்து விட்டேன் என்று திருப்புகழ் மணி மிகவும் வருந்தினார்.., குருமார்களின் நடவடிக்கைகளை எளிதில் நாம் புரிந்து கொள்ளவே முடியாது., நான் மற்றொரு ரூபத்தில் உனக்குத் தரிசனம் அளிப்பேன் என்று கூறியிருந்தார்.., “வந்தது என் குரு என்று தெரிந்து கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டேனே., என்று மணி பலமுறை மனதிற்குள் வருந்தி ஆண்டவன் பிச்சையைக் காண வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டார்.., அவ்வாறே ஆணடவன் பிச்சையைக் கண்டு  தன் குருவே இவர் என்று வணங்கி நின்றார் திருப்புகழ் மணி.., ஆனால் முருகனோ ஆண்டவன் பிச்சையிடம் மற்றொரு திருவிளையாடலை ஆடினான்.,

1949ம் வருடம் ஆண்டவன் பிச்சை சில நண்பர்களுடன் ஸ்ரீசைலத்திற்குச் சென்றிருந்தார்., அங்கு திருப்புகழ் மணியைக் கண்டதும் இருவரும் நன்றாக உரையாடினார்கள்.., அதன் பிறகு திருப்புகழ்மணி, ஆண்டவன் பிச்சைக்கு ஷடாஷரி மந்திரத்தை உபதேசித்தார்.,, சில நாட்கள் சென்றன.,, மறுபடியும் திருப்புகழ் மணியைச் சந்தித்த ஆண்டவன் பிச்சை, “ஞாபகம் இருக்கிறதா எனக்கு ஷடாக்ஷரத்தை உபதேசித்தீர்களே என்று கேட்டார்..,அதற்கு மணி “அம்மா மன்னிக்க வேண்டும்., நான் ஒருநாளும் ஸ்ரீசைலம் சென்றது கிடையாது என்றார்.., அக்கணத்தில் ஆண்டவன் பிச்சைக்குப் புரிந்தது.., ஆஹா வந்தது வேறு யாருமில்லை., முருகப் பெருமானே, திருப்புகழ் மணியின் ரூபத்தில் வந்து தனக்கு ஆறெழுத்து மந்திரமான ஷடாக்ஷரியை உபதேசித்திருக்கிறான் என்று...,  தெரிந்தாலும் அவன் திருப்புகழ் மணியின் உருவில் வந்தான் அல்லவா., எனவே திருப்புகழ் மணியைத் தனது குருவாக ஏற்றாள் ஆண்டவன் பிச்சை.., இதேசமயம் திருப்புகழ் மணிக்கு அவரது குருபின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா,, வந்தது நான் இவள் உருவில் என்றார்..., இதனால் திருப்புகழ் மணி ஆண்டவன் பிச்சையைத் தன் குருவாக ஏற்றார்.., ஆக ஒருவருக்கொருவர் மற்றவரை குருவாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தான்.. அத்திருத்தணி முருகப்பெருமான்.., என்ன அதிசயமான திருவிளையாடல்.., மேலும் ரிஷிகேஷ் சிவானந்த அனுபூதிகளை இங்கு காணும் இரண்டு படங்கள் படித்துய்க.. குருவருளை...!

மணி அடிக்கடி ஆண்டவன் பிச்சையை சந்திப்பதும் அவரது பாடல்களை பிரசுரிப்பதும் சொற்பொழிவு செய்தால் அப்பாடல்களை மேற்கோளாக எடுத்துரைப்பதுமாக இருந்தார்.., இதனால் அம்மாவின் புகழ் நாற்புறமும் பரவியது.., குடும்பத்தில் இருந்து கொண்டும்,, குடும்ப வேலைகளைச் செய்து கொண்டும்,, முருகனைப் பற்றி பாடல்கள் இயற்றியும் ஆண்டவன் பிச்சையின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.., 1951ம் ஆண்டு ஆண்டவன் பிச்சை முற்றத்தில்..., உட்கார்ந்து இருந்தார்.,, திடீரென உனக்கு வெகு சீக்கிரம் இரண்டு பேரப்பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என ரமண மகரிஷியின் குரலில் கேட்டது........ மேலும் அறிய.திருமதி. ராதா விஸ்வநாதன் எழுதிய ஸ்ரீராஜாம்பாள் பப்ளிகேஷன்ஸினின்.., “ஆண்டவன்பிச்சை புத்தகத்தை காண்க...,
ஆண்டவன் பிச்சையின் பாடல்களை அவரின் குரலிலேயே..., இவ்விணைப்பில் காண்க:- அன்னாரின் ஒரு தேனமுது பாடல் இணைப்பு :- https://www.youtube.com/watch?v=I_hG18vRLrE
------------------------------------------------------------------------

“பூர்வம் அபூர்வமாகும், உத்தர பூர்வாங்கத்தில் பபூவ பூர்வபாடம் கேட்கும் – அண்ணாஸ்வாமி சித்தரின் .. அதியற்புத குருவாய்மொழி வாக்யம்.., அண்ணாஸ்வாமி சித்தர் அக்னி தகனத்தை ஏற்று பூலோக சஞ்சாரத்தை நிறைவு செய்திடினும்., இவ்வகைச்  சித்புருஷர்களின்  நீளோபஸ்மம் எனும் பரமஅணுவை, தீபங்களின் முன் வைத்துப் பரஞ்ஜோதிப் பீடமேற்றும் சாங்க்யம் ஒன்றும் உண்டு..., அண்ணாஸ்வாமி சித்தர், துர்க்கா சக்தி பீட லோகத்தைச் சார்ந்த ஞானயோகி ஆதலின், காஞ்சிமாமுனிவர் போன்ற மஹான்களின் ஆக்ஞைக்கு ஏற்ப அக்னி தகனம் ஏற்றுத் தம் பூவுலக  மஹாயோக சரீரத்தை உகுத்தார்.., பின்னர் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தின் துர்க்கா சன்னதியில் ஜீவமுக்த ஜோதிப் பிரவாகச் சாரத்தில் இவர்தம்யோக ஜோதி “விசலவிஸ்வ பூஜிதமா பூரணித்த சாங்க்யானுபூதி ஒன்றும் உண்டு.(,...........................................)

 இதில் அண்ணாஸாமி யோகி துர்க்காக்னி லோகத்தைச் சாந்தவராய் அனந்தயோக முறையில் ஆத்மசாட்சாத்காரம் எனும் யோகசாதகத்தில் துய்த்தவர்.., இதன்படியே இவருக்கு அக்னி தகனமாற்றி, மஹான்களின் ஆக்ஞைப்படி கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் துர்க்கை சன்னிதியில்  மோக்ஷதீப சாட்சாத்காரமாய் பக்தகோடிகள் நிகழ்த்தினர்..,  திருக்குடந்தையின் தீரா தீர்கதரிசி அண்ணாஸ்வாமி சித்தரின் தெய்வத்வத்தை... ப்பிரவரி2018 மாத ஸ்ரீஅகஸதிய விஜய இதழில் காண்க..., & .......ஸ்ரீராமர் இதனைப் பிரதிஷ்டை செய்தபோது, மனிதனாக வாழ்ந்து தன்னலமற்ற இறைத் தொண்டு புரிந்து, மக்களுக்குச் சேவை செய்தமையால் ஞானியரான 1008 ஆத்மாக்களை ஆவாஹனம் செய்து 1008 ஆத்மாக்களின் ஜோதிகளைத் திரட்டி சகஸ்ர ஜோதி லிங்கமாக இங்கு அமைத்தார்.




மகான்கள் எல்லாரும் ஒன்று தான்., மகா சமுத்திரம் போன்றவர்கள்., பலநதிகள் கடலில் சென்று கலந்த பின்னர் தனது தனித்துவத்தை இழந்து விடுவது போல, பிரம்ம நிலையை அடைந்த மகா ஞானிகள் தங்களிடம் வரும் அடியவர்களின் பக்குவநிலையை அறிந்தே ஞானத்தை அருள்கிறார்கள்... இது தான் யோகி ராமகிருஷ்ணாவின் வாழ்வில், ஸ்வாமி சிவானந்தர் நடத்திய அருளாடல்..
 (Read in picture.---> here...! --->

No comments:

Post a Comment