எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 5, 2018

ஆத்மாக்களின் சங்கமம் - 2


இதனால் யோகி ராமகிருஷ்ணா ஏமாற்றத்துடன் பின்னவாசலுக்குத் திரும்பி தவத்தை மேற்கொண்டார். தனக்கு குருவாக ஒருவரும் தீக்ஷ்க்ஷை கொடுக்காததால் சதாசிவ பிரம்மேந்திராளை மானசீகமாக குருவாக ஏற்று தவம் செய்து வரலானார். நாட்கள் உருண்டன. வருடங்கைம் வந்து போயின., 1943ம் வருடம் யோகி ராமகிருஷ்ணாவிற்கு தவத்தின் பயனாக, மானிட சரீரத்தை உகுக்கும் நாள் தெரிந்தும் விட்டது., அந்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது., பிரத்தியட்சமாக குருவை குருவாக மானசீகமாக ஏற்றாலும்., குருவின் கருணைக்கு ஈடு இவ்வுலகில் ஒன்றுமே இல்லை., கருணையே உருவான சதாசிவபிரம்மேந்திராள்., தன் சீடன் யோகி ராமகிருஷ்ணாவின் முன் தோன்றினார். “உனக்கு இப்பிறவியில் முக்தி என்பது கிடையாது உனக்கு மற்றொரு பிறவி உள்ளது.. இப்பிறவிக்கு காரணம் உனது மனைவியின் சாபமே என்றார் பிரம்மேந்திரர்.

“குருவே...,! கருணைக் கடலே! போதும் இந்த மானிடப் பிறப்பு: மறுபடியும் ஒரு கர்ப வாசமா என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினார் ராமகிருஷ்ணர்.,, கெஞ்சினார்.., பலனில்லை...,, மேலும் சதாசிவ பிரம்மேந்திராள்.., தன் திருவாய் மலர்ந்து ., “உன் மனைவி பத்தினி ., பத்தினிகளின் வாக்குக்கு அதிக சக்தி உண்டு. அது பலித்தே தீரும்.., இதனால் நீ ஒரு பிறவி பெண்ணாகப் பிறக்க வேண்டியே ஆக வேண்டும் என்றார்., பாவம் யோகி ராமகிருஷ்ணாவிற்கு பிறப்பெடுத்து இவ்வுலகில் உழல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.., பக்தனின் பரிதாபநிலை பரமகுருவை கனிய வைத்தது. பரமகுரு நினைத்து விட்டால் பரமனே செயல் இழந்து விடுகிறான்...,

“ஒரு மாற்று வழி இருக்கிறது.. மறுபடியும் கர்பவாசம் இல்லாமல் ஒரு பெண்ணின் உடலில் சுக்ஷ்ம ரூபத்தில் நுழைந்து உலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்துவிடு.., என்றார் பரமகுரு.., இப்பேற்பட்ட மாற்று வழியைக் காட்டிய பரமகுருவை வணங்கி குரு கூறியதிற்கு  ஒப்புக் கொண்டார் ., இதன்படி 1943ம் ஆண்டு இராமகிருஷ்ணா மகா சமாதி அடைந்தார்.., சமாதிக்கு முன்பே தனது பரமகுருவான சதாசிவ பிரம்மேந்திராள் கூறியபடி தனது சமாதி கோயிலின் மேல் கூரையில் ஒரு துளை வைத்துவிட்டு மேல் பாகத்தை மூடி விடுமாறு உத்தரவு இட்டார்.., யோகி ராமகிருஷ்ணாவின் சீடர்களும் தங்கள் குரு கூறியது போல் சமாதி கோயிலின் மேற்கூரையில் சிறுதுளையிட்டு கட்டியிருந்தனர்., யோகியும், அக்கோயிலில் அமர்ந்து சமாதி நிலையிலேயே இருந்து வந்தார். இந்த துளை துவாரம் மூலமாக யோகி ராமகிருஷ்ணா வெளி உலகுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். இதற்காகத் தான் சதாசிவ பிரம்மேந்திராள் துளை வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.., இப்பொழுது வாசகர்கள் பின்னவாசலிலிருந்து சென்னைக்கு வந்து ஆண்டவன் பிச்சையின் நிலையை அறிய வேண்டும்.


ஆண்டன் பிச்சையின் வாழில் நடந்த அற்புதங்கள்!

1948ம் ஆண்டு மார்ச் மாதம் ஏணிப்படிகளிலிருந்து விழுந்த  ஆண்டவன் பிச்சை படுத்த படுக்கையாகி விட்டார்.., உடல் பலஹீனமாகி விடவே பயந்து விட்டனர்.., உறவினர்கள் என்று பார்த்தோம் அல்லவா! மே மாதம் ஆண்டவன் பிச்சை தன் சுயநினைவையும் இழந்து விட்டார்.., ஒரு முன்னுரவு வேளை, ஆண்டவன் பிச்சையின் இதயத் துடிப்பும், நாடித்துடிப்பும் இரண்டுமே அறவே நின்று விட்டது.., அக்கணத்தில் அந்த நொடியில் சதாசிவ பிரம்மேந்திராள் யோகி ராமகிருஷ்ணாவின் சமாதியில் பிரவேசித்து., யோகியின் சமாதி நிலையைக் கலைத்தார்., அதுமட்டுமல்லாது ஆண்டவன் பிச்சையின் உடலை சுட்டிக் காட்டினார்.., “இதோ பார் ., இதுதான் நல்ல சமயம் ., ஒரு பவித்திரமான உடலுக்குள் நீ பரவேசிப்பாயாக.., இது சாதாரணப் பெண்ணின் உடல் அல்ல., இது முருகப் பெருமான் குடியிருந்த வீடு., ஒரு முருக பக்தரின் உடல். சுமார் 24வருடம் முருகப் பெருமான் இவ்வுடலில் குடிகொண்டு பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான்.. இவ்வுடலுக்கு க்ஷடாக்ஷ்ர மந்திரம் உபதேசிக்கப்பட்டுள்ளது.., பல ஞானியர்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவுடல்., பல முறை சமாதியீல் அழ்ந்துள்ளது.., ஜீவ பிரம்ம ஐக்கியத்தை ருசிபார்த்தவுடல்., இதைப் போன்ற வேறு ஒரு பரிசுத்த உடல் உனக்கு கிடைக்காது என்றார் சதாசிவ பிரம்மேந்திராள்..,

ஆண்டன் பிச்சை என்னும் மரகதவல்லியின் பூத உடலில் உள்ள இருதயத் துடிப்பு நின்று விட்ட நிலையில் யோகி ராமகிருஷ்ணா சூக்ஷ்ம ரூபத்தில் அம்மாவின் உடலில் தம் பரமகுரு சதாசிவ ப்ரம்மேந்திராளின் ஆக்ஞைப்படி புகுந்தார்.., யோகி ராமகிருஷ்ணாவிற்கு, தன் குருவின் அருளால் ஒரு பெண்ணின் உடலில் புகுந்து உலக வாழ்வில் உழன்று ஒரு பெண்ணுக்கு உண்டான உடல் உபாதைகள், குடும்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் அனுபவிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது., அதுவும் ஒரு தாயின் கர்பவாசம் இல்லாமலே.., இதன்படி யோகி இராமகிருஷ்ணாவின் மனைவியின் சாபமும் நிறைவேறியது.., இவை யாவும் அவரின் குருஅருளால் கிட்டியது.., குரு அருள் இருக்க குறையேதுமுண்டோ!!

1943ம் வருடம் முதல் 1948வரை காத்திருந்து பலனை அடைந்தார் யோகி ராமகிருஷ்ணா! யோகி ராமகிருஷ்ணா, ஆண்டவன் பிச்சையின் உடலில் புகுந்ததும், அம்மாவின் உடலில் அசைவுகள் தோன்றின.., மெதுவாக தன் கண்களைத் திறந்தாள்.., சுயநினைவு இல்லாதபோது தனனிச் சுற்றி பலர் சூழ்ந்திருந்ததை இப்பொழுது அவரால் காண முடிந்தது., பார்த்தாரே தவிர., சுற்றி இருந்தவர்கள் அனைவரும் புதுமுகங்களாகத் தெரிந்தனர்.., ஒன்றும் புரியாமல் தன் கண்களை மூடிக் கொண்டார்.., அருகில் இருந்தவர்கள் ஏதோ பேசுவது காதில் விழுந்தன “இவர்கள்  எல்லாரும் யார்? யாரை அம்மா, அம்மா என்று அழைக்கிறார்கள்.., நான் யார்? ஓஹோ! இந்த உடலைக் கண்டு என்னை அம்மா என்று அழைக்கிறார்கள் என்றால்.., நான் இவர்களின் அம்மாவா? அப்போ உள்ளே இருப்பது யார்? இதற்கு முன் எங்கு இருந்தேன்? பல கேள்விகள் எழுந்தன.., இத்தனை கேள்விகளை.., அந்த பஹீனமான உடல் தாங்காமல் மறுபடியும் சுயநினைவை இழந்தார்..,
இவ்விதமாக ஆண்டவன் பிச்சை ஆறுமாதங்கள் படுக்கையிலே கிடந்திருந்தாள்.., உடலில் பலமே இல்லாத நிலை.., எது சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை.., எனவே நீராகாரமாக உணவு கொடுக்கப்பட்டது..,

ஒருநாள் ஒருவர் வந்துஎன்னைத் தெரியவில்லையா அம்மா! நான் உனது பிள்ளை என்பார்.., மறுநாள் “உன் பெண் வந்திருக்கிகேன் பார் அம்மா என்பாள்.., படுக்கையில் கிடக்கும் மரகதவல்லில் என்ற ஆண்டவன் பிச்சையின் உடலுக்குள் புகுந்து இருக்கும் யோகி இராமகிருஷ்ணவிற்கு ஒன்றுமே புரியவில்லை..., இதனைக் கவனித்த உறவினரும்.., வீட்டில் இருந்தவர்களும் ஏன் அம்மா இப்படி வித்தியாசமாகப் பார்க்கிறாள் என்று கவலைப்பட்டனர். பாவம் உடலில் உட்புகுந்த சூக்ஷ்ம ரூப யோகிக்கு எப்படி இந்த உறவுகளைப் பற்றித் தெரியும்.., 

இதே நிலை தொடர்ந்து சில தினங்களும் ஆகி விட்டன. புதிதாக குடி கொண்ட யோகி ராமகிருஷ்ணாவிற்கு உள் இருந்து ஒரு குரல் சொன்னது.., 

நேரம் வரும் பொழுது எல்லாமே புரியவரும்.., “இந்த சூக்ஷ்ம ஆதமா எதைத் தேடி வந்துள்ளது? என்ன செய்ய வேண்டி உள்ளது எல்லாமே தெரியவரும்..., உனக்கு எல்லாமே சித்தியாகும்., எதைத் தேடி அலைந்தாயோ, எல்லாமே உன்னை வந்தடையும்., உன் எதிரில் வரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்., இந்த உடல் முருகன் குடிகொண்ட கோயில்., இங்கு அனுதினமும் பிரார்த்தனைகளும் பூஜைகளும் , முருகனுக்கு நடைபெற்று வந்தன., நீ மீண்டும் ஒரு கர்ப்பத்தில் நுழைந்து பிறவி எடுப்பதை விரும்பவில்லை., இப்பொழுது கடவுளின் எல்லையற்ற கருணையினால் இந்த உடலை நீ பெற்று இருக்கிறாய்., இவ்வுடல் மூலம் நீ பல யோகிகளையும், பிரம்மஞானிகளையும் தரிசிக்கப் போகிறாய், அதைத் தொடர்ந்து பல திருக்கோவில்களுக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று வருவாய்! என்று குரல் கூறியது.., 

(ஞானநிலைகள் ... தொடரும்....)

No comments:

Post a Comment