எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 5, 2018

ஆத்மாக்களின் சங்கமம் ..1

ஒரே உடலில் பல ஆத்மாக்கள் உறைந்து வாழும் ‘அனந்தஜ ரிஷித்வம் பின்னவாசல் ஆன்மதளத்தில் ஆத்மாக்களின் சங்கமம் “ –  ஆத்ம்சாட்சாக்தாகார விளக்கங்களுக்கு .., ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்..., பின்னவாசல் புண்ய கிராமத்தில் உள்ள அபூர்வமான ஜீவசமாதி பற்றியும், இங்கு நித்திய விஜயம் செய்யும் ஆனந்தஜ ரிஷிக்கான விளக்கமும் தந்தார்.., ஆண்டவனின் பிச்சி எனும் உத்தம முருக பக்தை, சமீப காலத்தில் ஆனந்தஜ ரிஷிபோல், தன் புனிதமான மானுடத் திருமேனியில் இரு பவித்ரமான ஆத்மாக்கள் உய்யும்படியாய்ப் பிரகாசித்தார்...., தொழுநோயாளி வடிவில் வந்த அனுமாரை முதலில் காண இயலாது போன மஹான் துளஸிதாஸர், இவ்வாறாய் அவ்யபிசாரிணி எனும் பக்தி மூலமாகவே ஆஞ்சநேரயைக் கண்டறிந்து தரிசித்தார்.., இதற்கு அவருடைய குருநாதராம் நரஹரிதாஸரின் குருவருள் துணை நின்றது.., நரஹரிதாஸருக்கு இந்த அரிய பக்தியோகத்தை ஆனந்தஜ ரிஷி சூக்குமாய்ப் புகட்டிய தலமும் முழையூர்...,, முழையூரில் கனியும்.., அவ்யபிசாரிணியின்.. அச்சாணி முழை, சித்புச்சப் புழை.... விளக்கங்களை... -  ..... 2017 மற்றும் செப்டம்பர் 2017 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் காண்க.....

ஆண்டவன் பிச்சை புத்தகத்திலிருந்து .........

சென்னை தம்புச் செட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அக்கோவிலில் முருகனுக்கும் வள்ளிக்கும் ஒரு சிறு சந்நிதானம் கட்டித் திறப்பு விழா நடத்தினார்கள். அன்று திரளாக பக்தர்கள் வந்திருந்தனர். நிற்க கூட இடம் இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டவன் பிச்சையும் வந்து இருந்தார்கள்.. கூட்டம் அதிகமானதால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ஆண்டவன் பிச்சைக்கு ஒரு அபூர்வ காட்சி தோன்றியது. அங்கு இருந்த முருகனின் சிலை தகதகவென்று மின்னுவதும் அதில் ஜோதி பிரகாசமாய் முருகன் அற்புத அழகுடன் நிற்பதும் தெரிய, அதிலேயே லயித்துப் போனாள். அந்த மனலயத்தில் பாட்டு வெளிப்பட்டது. அந்தப் பாட்டுதான் இன்றளவும் பட்டித் தொட்டிகளிலும் பாமர மக்களிடமும் பாடப்பட்டு வருகிறது. அந்தபாட்டு தான்  ..... உள்ளம் உருகுதடா..... முருகா உன்னடி காண்கையிலே....  சில சமயம் முருகனின் தரிசனம் நீடிக்காதா என்றும் ஏங்குவார் அந்த நேரத்தில் அவருக்கு உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. ஆமாம் , இது முருகனின் குரல் என்று உணர்ந்தாள்.., நீ எதற்காக என்னை வெளியில் தேடுகிறாய்? நான் உனக்குள் இல்லை? நன்றாக உன்னுள்ளே பார் என்றான்.., மனம் குவிந்தது சுற்றுப்புறத்தை மறந்தது.., முருகனிடம்..மீண்டும் மூழ்கி விட்டாள் ஆண்டவன் பிச்சை.., சிறிது நேரத்திற்குப் பின்னர் சுயநிலையில் வந்தவுடன் தான் கண்ட காட்சியானது. “எவ்விதம் யசோதைக்கு தன் வாயில் அண்ட சராசரங்கள் கிருஷ்ணர் காட்டினாரோ அப்படி இருந்தது நான் கண்ட காட்சி என்று கூறினார்.


1948ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டவன் பிச்சையின் உறவினர் ஒருவருடன் ஸ்ரீசைலம் சென்று வர விரும்பினார். அங்கு சென்று விட்டு திரும்பிய ஆண்டவன் பிச்சையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல வாரங்கள் நோயால் வாடினார். இதன் காரணமாக உடல் பலஹீனம் அடைந்திருந்தது. ஒரு நாள் அவருடைய பேரக் குழந்தையைத் தூக்கியவாறு மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்க கால் தடுமாறி கீழே விழுந்து மூர்ச்சை ஆகி விட்டார்.., வீட்டில் உள்ளவர்கள் அவரைப் படுக்கையில் கிடத்தி டாக்டரை அழைத்தனர். டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, அம்மாவிற்கு (ஹார்ட் அட்டாக்) இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். அம்மாவின் இருபிள்ளைகள் டாக்டர்களாக இருந்தனர். அவர்களே சிகிச்சையும் அளித்து வந்தனர். அம்மாவின் மயக்கம் தெளிவில்லை. நாடித்துடிப்பு மிக பலவீனமாக இருந்தது. மேலும் உடல் நிலையும் மோசமாகிக் கொண்டே வந்தது. இதைக் கண்ட உறவினர்கள் அம்மாவின் (ஆண்டவன் பிச்சையின்) உயிருக்கே ஆபத்து வந்து விட்டதாக பயந்தனர். எந்த நிமிடம் என்ன நேருமோ என்ற கவலை எல்லோர் முகத்திலும் கவ்வி இருந்தது.

இனி மேலே ஆண்டவன் பிச்சையின் சரித்திரத்தை தொடருமுன், வாசகர்கள் ஒரு திடீர் திருப்புமுனையை எதிர் கொள்ள நேரிடுகிறது. வாசகர்கள் சென்னையை விட்டு உள்ள பின்னவாசல் என்ற ஊருக்குப் பயணப் பட வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. இந்த பின்னவாசல் பயணத்திற்கும், ஆண்டவன் பிச்சைக்கும் என்ன தொடர்பு, ஏன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற வினாக்கள் மனதிலே எழும். அவ்வினாக்களுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமானால், இப்பயணம் மிகமிக அவசியமாகிறது..., வாருங்கள்... பின்னவாசலை நோக்கிப் பயணத்தை மேற்கொள்வோம்.

பின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா
தமிழகத்தில் பின்னவாசல் என்றொரு ஊர் உள்ளது. அவ்வூரில் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். சிறு வயதிலேயே ஆன்மீகம், வேதம், சாஸ்திரம் இவைகளில் மிக்க ஆர்வம் கொண்டு, சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். நாளடைவில் ஜபத்தில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. இந்த நாட்டத்தினால் பாண்டிய நாட்டிலுள்ள ஆவுடையார் கோவிலில் அமர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தேவியின் பீஜ மந்திரங்களை ஜபித்து தேவியை உபாசனை செய்து வந்தார்., “யோகி ஸ்ரீராம கிருஷ்ணா, என்ற திருபெயரால் அழைக்கப்பட்டார் மெள்ள மெள்ள யோக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தன் மகனைக் கண்ட இவர் பெற்றோர்கள். இவருக்கு நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இவருக்கு மணவாழ்க்கையில் சிறிது கூட நாட்டம் இல்லை., ஒரு நாள் கூட இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் இத்திருமணம் நடந்தேறியது. இந்நிலையில் இவரது மனைவி தான் மணந்த கணவனே கண் கண்ட தெய்வம் என யோகி ராமகிருஷ்ணாவை பூஜித்து  பணிவிடை செய்து வரலானாள்.

 சில தினங்களிலேயே தானும், தன் கணவன் யோகி ராமகிருஷ்ணாவும் மற்றவர்களைப் போல, கணவன் மனைவியாக வாழ மாட்டோம் என புரிந்து கொண்டாள். இருந்தும் குறைந்த பட்சம் அவருக்குப் பணிவிடையாவது செய்து வரலாமே என்று தீர்மானித்து, நேர்மையான பணியாள் போல பணிவிடை செய்து வரலானாள். இதிலும் இப்பெண்மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்பொழுதாவது யோகி ராமகிருஷ்ணாவின் அருகில் இவரது மனைவி வர நேர்ந்தால்,, வெறுப்பும் எரிச்சலும் கலந்த சொற்களால் நீ இனிமேல் இங்கே வரக் கூடாது என்பாராம். தொடர்ச்சியாக இவ்விதம் தன் கணவர் தன்னை வெறுத்து ஒதுக்குவதைக் கண்ட இவரது மனைவி மனம் வெதும்பி “என்னைப் போல் நீங்களும் ஒரு பெண்ணாகப் பிறந்த தான் அனுபவிக்கும் வேதனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாபமிட்டு விட்டார்.

அவரது மனைவியின் வேதனை நியாயமானது தானே.. ,அந்நாட்களில் பெண்கள் படித்து, வெளியில் சென்று வேலை பார்ப்பது என்பது துர்லபம். திருமணத்திற்குப் பிறகு பெண் தனது கணவனைச் சார்ந்தே வாழவேண்டும்.,, பின்னர் தன் பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டும். ஆனால் யோகி ராமகிருஷ்ணாவின் மனைவிக்கு கணவனும் வெறுத்து பிள்ளைகளுமில்லாமல் போனால்ல் அவள் வாழ்வு என்னாவது? இந்த பயத்தினால் அவ்வாறு சாபம் இட்டு விட்டாள்.., ஆனால் ராமகிருஷ்ணா இதைப் பற்றிக் கவலையே கொள்ளவில்லை. இவருக்கு வடமொழியில் நல்ல புலமை., சாஸ்த்திரத்தில் தேர்ச்சி, இக்காரணங்களால் பலர், மாணாக்கர்களாகி, பின்னர் பக்தர்களாகி அடியார்களாகி விட்டனர்.


இந்த அடியார்களுடன் இந்தியாவில் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரலானார். ஒரு குருவைப் போல் பல அடியார்களுடன் இவர் இருக்கவும், இவரை அவ்வடியார்கள் சீடர்களைப் போல் பின்பற்றி வந்தாலும்., இவர் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே வந்தது. தான் குருவாக பலருக்கு புத்திமதி கூறி வந்தாலும், தனக்கு இன்னும் ஒரு குரு கிடைத்து சன்னியாச தீக்ஷ்க்ஷைப் பெறவில்லையே என்ற தவிப்பு இருந்து வந்தது..,, இந்த ஆசை மேலோங்க, யோகி இராமகிருஷ்ணா 1942ல் ரிஷிகேஷ்க்கு வந்தார். அங்கு சுவாமி சிவானந்தாவைத் தரிசித்து தனக்கு சன்னியாச தீக்ஷ்க்ஷை அருளுமாறு வேண்டலானார். சுவாமி சிவானந்தா பெரிய ஞானி., ராமகிருஷ்ணாவின் வேண்டுகோளை ஏற்கவில்லை...,
(ஞான நிலைகள்... தொடரும்.......)

No comments:

Post a Comment