எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, April 26, 2018

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் – ராமேஸ்வரம் கோயிலில் செய்த சொற்பொழிவு
விவேகானந்தர் 27.1.1897 அன்று ராமேஸ்வரம் மண்ணில் ஆற்றிய சொற்பொழிவு இது. இதைக் கல்லில் வடித்து குடகோபுர வாசலில் பதித்திருக்கின்றனர்.. 

‘அன்பே சமயம், தூய உள்ளன்பில்லாமல் வேறு வெளிச் சடங்குகளில் சமயம் நிலைப்பதில்லை. உடல் சுத்தமும், உள்ளத்தூய்மையுமின்றிச் சிவபெருமானை வழிபடுதலில் பயனில்லை, சுத்தமான உடலுடனும், தூய்மையான உள்ளத்தோடும் சிவபெருமானை வழிபடுவோருடைய பிரார்த்தனைகளே செவிசாய்க்கப் படுகின்றன. இந்த உண்மையை நீங்கள் யாவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனத் தூய்மையின்றி ஒருவன் கோவிலுக்குள் சென்றால், அவன் ஏற்கனவே செய்துள்ள பாவங்களோடு மற்றொரு பாவத்தையும் செய்தவனாகின்றான். ஆகவே, அவன் தன் வீட்டை விட்டுக் கோயிலுக்குப் புறப்படும் போது இருந்ததை விட இன்னும் இழிந்த நிலையில் தான் ஆலயத்தினின்றும் வீட்டுக்குத் திரும்புகிறான் . தீர்த்தமாடும் க்ஷேத்திரத்தில் அநேக புனித வஸ்துக்களும் பரிசுத்தமான மக்களும் உறைகின்றனர். சாதாரணமான ஓர் இடத்தில் புரிந்த பாவத்தை எளிதில் போக்கிக் கொள்ள முடியும். ஆனால் தீர்த்த ஸ்தலம் ஆகிய புனித க்ஷேத்திரத்தில் புரியும் பாவத்தைப் போக்க வழியேதுமில்லை. எல்லாவித வழிபாட்டின் சாரமாவது, தூய உள்ளத்துடன் பிறருக்கு நன்மை புரிவது தான். ஏழை எளிய மக்கள், நோயுற்ற மக்கள், இவர்களிலே சிவத்தைக் காண்பது தான் உண்மையான சிவ வழிபாடு.

விக்ரகங்களில் மட்டும் சிவனைக் காண முயற்ச்சிப்பது வழிபாட்டின் ஆரம்பக் கட்டமே. கோயிலில் மட்டும் சிவத்தைக் காண நினைப்பவனை விட, ஜாதி , மதம், மற்ற யாதொரு பேதமுமின்றி ஏழை மனிதனிடம் கடவுளைக் கண்டு அனைத்து, சேவைகள் செய்து உதவி புரிகின்றவன் தான் சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரமாகிறான் சிவபெருமானுக்கு சேவை செய்ய விரும்புகிறவன் அவனுடைய படைப்புகளாகிய உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் சேவை செய்ய முற்ப்பட வேண்டும். சிவனடியார்களுக்குச் செய்யும் சேவை தான் சிவபெருமானுக்குச் செய்யும் சிறந்த சேவையென சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உண்மையை நீங்கள் தெளிவாய் உணர வேண்டும்

இந்தக் குணத்தினால் தான் உங்கள் உள்ளம் தூய்மையடைந்து ‘சித்த சுத்தி‘ அடைய முடியும். சிவபெருமான் எங்கும் நீக்கமற நிறைந்தவராவார். அவர் எப்பொழுதும் யாவருடைய உள்ளத்திலும் குடிகொண்டுள்ளார். சுயநலமின்மையே உண்மையான சமயப் பற்றுக்குச் சான்று, ஒருவன் எவ்வளவுக்கு தன்னலமின்றிப் பிறருக்கென வாழ்கிறானோ; அந்த அளவுக்கு அவன் ஆன்மீக ஞானம் பெற்றுச் சிவபெருமான் அருகே சென்று விடுவான். சுயநலவாதி சிறுத்தையுடல் போலத் தன்னுடம்பு எல்லாம் நீறு பூசித் திலகம் தீட்டித் திரியினும், அவன் சிவபெருமானை விட்டு வெகுதூரம் விலகியுள்ளவன் ஆகிறான்...
                        ஓம் ஸ்ரீகுருவே சரணம்.


images from site : www.singaithirumurai.org
content from book : தெய்வம் வாழும் தீவு



No comments:

Post a Comment