எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, April 26, 2018

திருச்சிற்றம்பலமுடையான்

கடவுளை உண்டா இல்லையா என மறுப்பவர்களே இன்னும் சிலர் இருக்கும் போது கடவுளே தன் கைப்பட பக்கம் பக்கமாக எழுதி பின் அடியில் கை சான்றும் ( SIGNATURE ) இட்ட ஒரு பனை ஓலைசுவடிக் கட்டு இன்னும் இருக்கிறது !
Image may contain: 3 peopleஒவ்வரு ஆண்டும் #மகாசிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பேழையை திறந்து பூஜை செய்யப்படுகிறது என்ற செய்தி சற்று வியப்பளிக்கக் கூடும் .
இத்தகைய ஓலை சுவடி இருக்குமிடம் #புதுச்சேரி தான்
அவை இடம் பெற்றிருக்கும் இடம் , அந்த ஓலை சுவடிகளையும் மாணிக்க வாசகரின் உருவசிலையையும் பாதுகாக்கும் பெரும் பேறு பெற்ற #அம்பலத்தடியர் திருமடம் தான் இந்த அரிய பொக்கிஷங்கள் இருக்கும் இடம்
இதைப்பற்றிய பின் புலத்தை காணலாமா ?..

திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வாக்கு.
திருவாசகம் வேறு, சிவன் வேறு என்பது அல்ல ! சிவனையே அவரின் அர்த்தத்தையே கூறும் நூல் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.ஆகும் .சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்
மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது.

சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் "கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க," என்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.
.திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை.....
அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் அடியில்இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதது
என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; ! எவ்வளவுமுறையாக தானே வந்து உயரிய ஒரு நூலுக்கு மத்திப்புரை வழங்கி மாணிக்கவாசகரை சிவன் உலகறிய செய்ய்திருக்கிறார் பாருங்கள் !

திருப்பெருந் துறையில் தனது ஞான ஆசானாக இறைவனையே கண்டு ஆதி யோகியான சிவனையே ஆதிகுருவாகக் கண்டு அரிட இருந்து நேரடியாக யோக நெறியை கற்று அங்கே ஒரு ஞானாலயம் மன்னனின் குதிரைவாங்க கொடுத்த பணத்தில்
கட்டி , பின் அதனால் மன்னனின் கோபத்திற்கு ஆடப்பட்டு சிறைபட்ட மாணிக்க வாசகரை இறைவனே நரியை பரியாக்கி திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரின் பெருமையை இ
வன் உலகறிய செய்த பின் பல பாடல்களைப்பாடி ,பல திருத்தலங்களை தரிசித்து பின் தில்லையை அடைந்தார் .
கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் நடனத்தைத் தரிசித்துவந்தார். .
தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், . கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, . போற்றித் திருவகவல், . திருப்பொற்சுண்ணம், . திருத்தெள்ளேணம், . திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், . திருப்பூவல்லி, . திருப்பொன்னூசல், . அன்னைப் பத்து, , திருக்கோத்தும்பி, . குயில் திருத்தசாங்கம், அச்சோப்பத்து, என பலவாகும் .சிதம்பரம் ஆகாய தலம் ஆகையால் அங்கே பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள் அடங்கிய திருவண்டப் பகுதி, .பாடினார்போலும் .
இவ்வாறு தில்லையில் வாழ்ந்தபோது
அவரை பெருமைபடுத்தி ஆட்கொள்ள
சிவன் ஒரு நாள் அந்தணர் வடிவில் வநது தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், மணிவாசகருக்காகச் சிவன் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது எனக் கூறி மணிவாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக' என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங் கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட திரு கோவையார் என்ற நூலை சொல்லயும் இறைவன் தம் திருக்கரத்தால் அதையும் எழுதி முடித்தார்.
பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார் . அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து' எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.
மறு நாள் பூசை செய்ய வந்த அந்தணர்கள் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு படித்துப் பார்த்து அதில் திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார்.
அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை என்னவென்று விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்' என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மணிவாசகர் மறைந்தருளினார்.
வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார்.

நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண் டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட் கொண்டருளினார்.
பின்பு இறைவன் கை சான்று அளித்த ஓலை சுவடியை யார் வைத்துக் கொள்வது என அந்தனர்களுக்குள் போட்டிவந்த போட்டி வந்த போது அதில் ஒரு ஓலையை இலையில் வைத்து சிவா கங்கை எனும் திருக்குளத்தில் இட்டு அந்த இல்லை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் னவு செய்து குளத்தில் இட்டனர்
அந்த ஓலை அந்தனருள் எளிய ஒரு பக்தரை நோக்கி சென்றது .

அவர் கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில் மடம் ஒன்றை நிறுவி இந்த ஓலைகளை பூஜித்து வந்தார்னர்
பிறகு முகமதியர் படையெடுப்பின் போது அஞ்சி ஓலைகளை புது சேரிக்கு கொண்டுவந்து மடம் ஒன்றை நிருவினர்
ஆனந்த ரங்கம் பிள்ளை டைரியில் இவர்கள்
மடம் விழாக்கள் பற்றிய செய்தி இருக்கிறது
எப்போதாவது நேரம் கை கூடும் போது
இந்த புனித ஓலையை கண்டு போற்றுங்கள் .

இது உண்மையா என ஆராயய்வதை விட நமது பாரம்பரிய
பழக்கவசங்களையும்
நம்பிக்கைகளையும் சற்று மதிப்பது நமக்கே நமைப்பற்றிய ஒரு பெருமித உணர்வை நமக்கு அளிக்கும் .
திருச்சிற்றம்பலம் !

திருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடைய நூல்.
கடவுளே ஒரு முதிய அந்தணர் வடிவில் வநது
Image may contain: one or more people
மாணிக்கவாசகரிடம் அவர்
மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்'ர் சொல்ல சொல்ல திருவாசகத்தையும் ,திருவம்பாவையும் சொல்லி முடித்த பின் பாவை பாடிய வாயால், கோவை பாடுக!",என்று கேட்க்க புதியதாக மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டார் . ...

....எனவும் எழுதி முடித்தவுடன் இறுதியில், மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல 'திருவாசகம் எழுதியது #திருச்சிற்றம்பலமுடையான்' என்று கைச்சாத்துச் சாற்றி தில்லையில் திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.என்ற வரலாறா அல்லது கதையா ,எதோ ஒன்றை கேட்டிருப்போம் .
மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்' என்பது உறுதி உறுதி உறுதி.
மறைக்கப்பட்ட சில உண்மைகள் வெளிவரும் திருவருளால் இத்தொகுப்பின் படைப்பாளர் ஒரு லட்சம் ஓலைச்சுவடிகளை சேகரித்த திரு சுகுமாரன் ஐயாவுடன் தொடரும் இனிவரும் பயணமாய் ......
அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்  
நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க !  SHARED POST FROM FB

No comments:

Post a Comment