பலரும் தங்களுடைய தொழிலையும், அலுவலகப் பணியையும் பல்வேறு காரணங்களுக்காக இழந்து அல்லல்படுகின்றனர். மேலும் சொத்துக்களை இழந்தோர் அவற்றை மீண்டும் பெற இயலாவண்ணம் கோர்ட்டிற்கும், வீட்டிற்குமாகப் பல வருடங்களாக அலைந்து வேதனைப்படுகின்றனர்.. உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சி, சதி வேலை, பில்லி, சூன்யம், ஏவல் காரணமாகவும் சொத்து, சுகம், பதவி, அந்தஸ்து, வியாபாரம், கௌரவம் போன்ற அனைத்தையும் இழந்து வெளியில் தலைகாட்டவே முடியாத வண்ணம் வேதனைப்படுவோரும் பலர் உண்டு.. இதற்கு என் செய்வது? எப்படி நிவர்த்தி பெறுவது? ஆசா தசமி விரத பூஜை இதற்குரிய நல்ல வழியைத் தரும்..
ஸ்ரீகருட பகவான் ஒரு முறை சிறிதே கர்வம் கொண்ட போது, அவர் மூலமாக பிரபஞ்சத்திற்கே பாடம் புகட்டும் வண்ணம் கருட வாகனமின்றி திருமால் தன்னந்தனியாகவே லோக சஞ்சாரம் செய்யலானார். இதனால் ஸ்ரீகருடபகவான் தனது தவறினை உணர்ந்து மனம் வருந்தி, பிராயசித்தமாகப் பல்வேறு பூஜைகளையும், இறை தரிசனங்களையும், விரதங்களையும் தீர்த்த நீராடல்களையும் மேற்கொண்டு இறுதியில் பரம்பொருளாம் ஸ்ரீபெருமாளுக்கே வாகனமாய் அமையும் பெரும் பேற்றினை மீண்டும் பெற்றார்.. இதற்காக ஸ்ரீகருடபகவான் கடைபிடித்த விரதங்களுள் ஒன்றே ஆசாதசமி விரதமாகும்.. ஆசாதசமி விரதமென்பது மிகவும் சிறப்பான தசமி தினத்தின் மஹிமையை உணர்த்துகின்றது.. எத்தனையோ இறை லீலைகளும், பல மகான்களுக்கான உத்தம நிலைகளும் இத்தினத்தில் தான் கூடியுள்ளன. ஸ்ரீகருட பகவான் தமக்குரிய எட்டுவிதமான நாகாபரணங்களை ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடமிருந்து பெற்ற திருநாளே ஆசாதசமி விரதத் திருநாளாம்.
ஆதிசேஷன் முதல் குளிகன் ஈறாக எட்டு நாகங்களையும் எட்டுவித ஆபரணங்களாக ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடம் இருந்து பெற்று பலமலைத் தலங்களிலும் வழிபட்டு கருடவாகனப் பெருமான் தாம் பல உத்தம தெய்வ நிலைகளைப் பெற்ற தினமே ஆசாதசமி விரத நாளாகும்.. எனவே, இந்நாளில் மேற்கண்ட எளிமையான விரதத்தைக் கடைபிடிப்போருக்குத் தாங்கள் இழந்த பதவி, செல்வம் சொத்து போன்றவற்றைத் தார்மீகமான முறையில் மீண்டும் பெறுவதற்கு ஸ்ரீகருட பகவானின் அருளும், ஸ்ரீபரமபத நாதனாகிய ஸ்ரீமன்நாராயணப் பெருமாளின் திருவருளும் நன்கு கூடி வரும். இந்த பத்து நாட்களிலும் வைராக்கியத்துடன் மேற்குறித்த மலைத் தலங்களில் தினந்தோறும் கிரிவலம் வருவோருக்குக் காரிய சித்தி கைகூடுவதுடன் கை மேல் பலனும் வரப் பெறுவர். ஆசாதசமி விரதம் நிறைவு பெறும் அன்றாவது நிச்சயமாக கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.. more on link : http://kulaluravuthiagi.org/Jul1999.htm
-----------------------------------------------------------------------------------------------------------
திருநெல்வேலியில் இருந்து 40 km தொலைவில் நான்குநேரி அருகில் உள்ள செண்பகராமநல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மூலவரும் உற்சவரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜெகநாத பெருமாள்.உற்சவர் மஹாலஷ்மி விக்ரகமும் உள்ளது.மஹாலக்ஷ்மி அவ்வளவு அழகு.ஷேத்ர தாயார் ஸ்ரீ செண்பகவல்லி தாயார்.கேரள மன்னன் உதய மார்த்தாண்ட மன்னனால் கட்டப்பட்ட கோயில்.அவர் பூரி ஜெகநாதரை தரிசித்து அவர் நினைவாக இந்த பெருமாளை எழ பண்ணி இருக்கிறார்.அர்ச்சகர் சொன்ன முக்கிய தகவல் செண்பகவல்லி தாயாருக்கு ஸ்ரீ சக்கரமும் ஜெகநாத பெருமாளுக்கு சுதர்சன சக்கரமும் பிரதிஷ்டை செய்து இருப்பதால் இங்கு வந்து வேண்டுவோருக்கு அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக சொன்னார். விஷ்வக்ஷேனர் ,ராமானுஜர் மற்றும் கருடாழ்வார் சன்னதி உள்ளது.தாயார் சன்னதி தனி பிரகாரத்தில் உள்ளது.மிக பெரிய கோயில்.பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.வயரிங் எல்லாம் சிதைந்து காணப்படுகிறது.எல்லாவற்றையும் மீறி கோயில் மிகுந்த அதிர்வலைகள் உள்ளன.fb post : https://www.facebook.com/vdhanushkodi.das
No comments:
Post a Comment