எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, August 10, 2018

மகா மக மகிமை - 3



ஓஃம் மாதவ மக தினங்கள்

மாதம்தோறும் மக நட்சத்திர நாட்களில்  மஹாமகத் திருக்குளத்தில் நீராடுதல் / தீர்த்த வலம் வருதல் உத்தம வழிபாடு ஆகும்.

ஹரித்வாரில் நிகழும் "கங்கா ஆர்த்தி" போன்று, மஹாமகத் திருக்குளத்திலும் "நதிதளி" ஆர்த்தி பெளர்ணமி தோறும் மீண்டும் புனரமைத்து நடத்திட ஆவண செய்ய வேண்டும்.

பன்னிரெண்டு ஆண்டுகளின் 144 மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திர மக நட்சத்திர நாளில் மஹாமகத் தீர்த்த நீராடலை கடைப்பிடிப்போர் இன்றும் உண்டு. இவர்கள் "மகசூரிகள்" என்ற பேற்றைப் பெறுவர்.

ஓரே தமிழ் மாதத்தில் இரு மக நட்சத்திர தினங்கள் அமைந்தால் அதற்கு "மாதவ மக தினங்கள்" என்று பெயர்.

சப்தரிஷிகளாய்ப் பல கல்ப காலங்களில் இருக்கும் (7X7) நாற்பத்தொன்பது மஹரிஷிகள் இத்தகைய " மாதவ மக" தினங்களில் குடந்தை மஹாமகத் திருக்குளத்தில் ஸ்தூல வடிவத்தில் நீராடுவதாக ஐதீகம்.


மாதவனாகிய ஸ்ரீ கிருஷ்ணரும்மஹாதவசியாய் வாழ்ந்த ஸ்ரீ ராமரும்,ஸ்ரீ பரத்வாஜ மகரிஷியும் தீர்த்த வாரிப் பூஜையுடன் இத்தகைய மாதவ மக நாட்களில் மஹாமகத் தீர்த்தக்குளத்தில் நீராடினர்.

நன்றி: *ஸ்ரீ அகஸ்திய விஜயம்-- புனிதமான ஆன்மீக மாத இதழ்.


   தீர்த்தேஸ்வரர் ,தீர்த்தபாலேஸ்வரர் , ஜலகண்டேஸ்வரர் , கங்காதரர் , கங்கேஸ்வரர் , நதீஸ்வரர் , போன்ற மூர்த்திகளின் திருநாமங்களை இயன்ற வரையில் கங்கேஸ்வராய  நமஹ அல்லது போற்றி எது எளிமையானதோ அம்முறையில் இடைவிடாது ஓதியவாறு நீராடவும் .பூலோக மானுடர் ஒவ்வோருவருக்கும் பெற்ற தாயார் , கோமாதா(பசு), பூமி மாதா ஆகிய மூன்று புனித மாதாக்கள் உண்டு ., இம்மூவரின் அருள் அனுகிரகம் ,ஆசியை வேண்டி நீராடிடவும் . அம்மையப்பனாம் , இறைவன் , இறைவி , கடவுள் தரிசனத்தைப் பெற்றுத் தரும் குரு- இவர்கள் வாழ்வின் முக்கடாட்ச மூர்த்திகள் ஆவர் .இம்மூவரின் அருட்கடாட்சம் வாழ்வில் நிறைதல் வேண்டி நீராடிடவும். பிதுர்க்கள் , குலமாமுனிகள் (கோத்ர ரிஷிகள்) , நதி , அக்னி தேவதைகளை மறவாமல் சிந்தையில் இருத்தவும் ..,


 வாயுமூர்த்தி (காற்று) ,வீடு ( நிலம்) , நீர் , பரவெளி , அன்னம் ,வெப்பம் ,சூரியன் , சந்திரன் போன்றவை பூலோக வாழ்வுக்கு அவசியம் .இருபத்தைந்து முகங்களைக் கொண்ட சதாசிவ மூர்த்தியின் திரி நாமத்தைசதாசிவாய நமஹ , சதாசிவா போற்றி என்றோ ,அத்தனை விஷ்ணு அவதாரங்களையும் உணர்விக்கும்மஹா நாராயணா நமஹஎன்று ஜபித்து நீராடினால் , அனைத்தையும் பூஜித்து நீராடியதாகும் .மஹாமகத் தீர்த்தக் குளத்தினுள் பக்த்தர்களின் கூட்டத்தின் ஊடே இவற்றை  நினைவு கூர்தலும் , ஓதுதலும் சிரமம் தான் , இப்படியானால் புனித நீராடும் முன்னரோ , பின்னரோ இவற்றைப் பன்முறை ஓதிடவும் ..

 இதில் பிறருக்கும் , பிராணிகள் , தாவரங்களுக்கும் தலா ஒரு பங்குப் பலனை அர்ப்பணிக்கவும் , இவ்வாறு அர்ப்பணித்தால் பூஜையின் , நீராடலின் பயன்கள் பன்மடங்காகும் ., பூசனைக் குறைபாடுகளும் நிவர்த்தி ஆகும்.கீழ்கண்ட சங்கல்ப மந்திரம் : “ஸங்கல்ப சூக்தம் ., என்ற வேதமந்திரத்தில் ஆறு துதிகள் உண்டு .இயன்றோர் இதனை முழுமையாய் ஓதிடவும் .அல்லது ஸங்கல்ப ஸூக்தத்தில் இந்த ஒரு அனுவாகத்தையேனும் ஓதிடவும் ..,

                                            
“யேன கர்மாண்யபஸோ மனீஷிணோ யஜ்ஞே க்ருண்வந்தி விதேஷு தீரா: பூர்வம் யக்ஷமந்த: ப்ரஜானாம் தன்மே மன: சிவஸங்கல்பமஸ்து ”


தமிழில் 
(சங்கல்ப சூக்தம்

ஞானவித்தகர் ஆற்றும் பூசனை வேள்விப் பலமா தவவழிச் சோறு ..., ஆனவிதமாய் அருஞ்சாதகமே ஆவது அருமா பெருஞ் சிறப்பாமே ஊனத்துயிருள் உறைகாண் ஆத்மம் உன்னிய மன்னி ஒளிதருமாப் போல் ....,  மீனமனத்துள் உத்தம கீதை உள்ளிக் கடையாய் வேண்டுவ தூட்டம்..

விளக்கம் :(ஊட்டம் = பிரார்த்தனை ; உள்ளிக்கடை = சங்கல்பம்) .எந்த ஆத்மாவானது உத்தமர்கள் ஆற்றும் நற்சேவைகள் , வேள்விகள் , வழிபாடுகள் , தானதர்மங்கள் , போன்றவற்றை உள்ளிருந்து இயங்கி இயக்கி ஆற்றச் செய்கின்றதோ ..,  எந்த ஆத்மா இவர்களுடைய சுய நலமற்ற வேண்டுதலை இயக்குகிறதோ .., எந்த ஆன்மா இதே போல் எல்லா உயிகளையும் , ஆற்றச் செய்ய வல்லதோ , ஆந்த ஆன்மா அடியேனுக்கு நல்ல சங்கல்பத்தை அருளட்டும் ., அருளட்டும் .)மேற்கூறிய துதிகளை நினைவில் ஏற்றுவது சிரமம் என்றால் கீழே கொடுக்கபட்டுள்ளமூன்று துதிகளில் எத்துதியையும் ஓதியவாறே நீராடிடவும் :
1.   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரெளம் ஹ்ரஹ நம்ஸ்துப்யம் நமோ நமஹ
2.   ஓம் தத்புருஷாய வித்மஹே தீர்த்த பாலீஸ்வராய தீமஹி தந்நோ தீர்த்தேஸ்வர ப்ரசோதயாத்
3.   யாம் ஏத்தும் ஈசன் ஏத்தும் எம் ஆத்ம ஏயனே …,
v  உங்களுடைய மஹாமகப் புனிதத் தீர்த்த நீராடல் ஒராயிரம் பேருக்கு உதவும்...,22.2.2016 மஹாமகத் திருவழாவில் சூக்குமமாய்த் தலமை ஏற்போர் ., சித்தர் குலச் சார்பில் அட்சரககுச்சிச் சித்தர் , மஹரிஷி குலச் சார்பில் ஜான்ஹவி (ஜானவி) மாமுனிவர்.சித்தர்களால் உபமன்யு மண்டலம் என போற்றப் பெறும் ...., மகா மகம் - 22 பிப்ரவரி 2016 முதல் 9 ஏப்ரல் 2016 வரை 48 நாள் வழிபாடு — வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பாக்கியமாகும்.
v  மஹாமகத் திருக்குள வளாகத்தில் கருட தரிசனம் பெறுவது உத்தம நல்பாக்கியம் ., கருட பகவானைப் பற்றிச் சித்தர் விளக்கங்கள் ஒரு சில...,கருடன் இமய மலையையே தூக்கிச் செல்ல வல்லவர்.., இத்தகைய கருடனின் பிரும்மாண்டமான சிறகுகள் . யுகந்தோறும் அபாந்தரதமஸ் எனும் ரிஷியின் தலையில் இறைச் சங்கல்பத்தால் விழும் ., இவற்றைத் தாங்கிக் கொண்டு தவம் புரிவார்...,
v  முனிவர் யோகபலம் கண்டு வியந்தார் கருடர் ., தாமும் இந்த யோகபலத்தை அடைய விழைந்தார்..., அபாந்தரதமஸ் ரிஷி , தாம் மகம் நட்சத்திரம் தோறும் குடந்தை மஹாமகத் தீர்த்தக் குளத்தில் நீராடுவதால் ., இத்தகைய கபால யோகபலம் கிட்டுவதாய் உரைத்தார்..,
v சத்குருவின் வெள்ளை காக்கை தரிசனம் “டேய் அதோபாருடா வெள்ளைகாக்கா பறக்குது” 60வருடங்களுக்கு முன்னால் 1956 மன்மத வருட மகாமகத் திருநாளில் அச்சிறுவனுக்கு          இந்த குருகுலவாச அனுபூதி கனிந்த தவத்தலம் கும்பகோணம் மஹாமகத் திருக்குளம்..!
v WHITE CROW DARSHAN! "Guru Kula Vaasam." Just like it is Manmatha Year (mid April 2015 to mid April 2016) right now in February 2016, it was Manmatha Year 60 years ago in 25th February 1956. The little kid Venkataraman and his Guru, Sri Idiyaappa Eesa Siddhar, at the Maha Maham festival of Feb 1956. What happened at that time?                                      
 To know it visit  agasthiar.org / sriagasthiya vijayam magazine….., guruve saranam …, guruvey thunnai…ohm

No comments:

Post a Comment