எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, August 10, 2018

கருட வழிபாடுகள் - 1


அஷ்டமி + சுவாதி கூடும் நாளின் வழிபாடுகள் 🌀
     🙏 வாத்தியார் அருளுரையிலிருந்து தேன் துளிகள் 🛐

அஷ்டமியுடன் சேர்ந்து வரும் சுவாதி நட்சத்திரம் பரிசுத்தத்தைத் தர வல்ல அற்புதமான சுப முகூர்த்த நட்சத்திரங்களுள் ஒன்றாகும்.

💢சுவாதியம்பல ஆமலபோதம்
நிர்மல சுத்தி நிறைவுறலாகும்
அட்டமிச் சுவாதியம் ஆவது ஆகில்
பட்டென ஓதும் அகமதியகமே!💢
என்பதாக சுவாதியும், அஷ்டமியும் சேர்ந்து வரும் நாளில் பட்டுப் போல அகமாகிய உள்ளம் பரிசுத்தமாகப் பிரகாசிக்கும் பூஜைகளுக்கு ஏற்ற நாளாகும்.
எட்டுதல் எட்டா எட்டும் எட்டகம்"

-என்று நம் உடலைச் சித்தர்கள் குறிக்கின்றனர். இதில் எண்ணாயிரத்திற்கும் மேலான உளப்பூர்வமான, ஞானப் பூர்வமான அர்த்தங்கள் உள்ளன.

எட்டுதல் எனில் உள்ளத்தைத் தொடும் யோக சக்திகள், தொடும் எனில் ஞானப் பூர்வமாக அறிதல் எனப் பொருள்!
எட்டுக்குடி வேலவனாகிய முருகப் பெருமான் தன் எட்டடி வேலால் எட்டகத்தில் எழுதி அருணகிரிநாதருக்கு சும்மா இரு சொல்லற!என உரைத்தான் அன்றோ! அட்டகமத்தில் எட்டகம் என்பது நாக்கையும் நாக்குடம் எனப்படும் இருதயத்தையும் குறிப்பதாகும்.
எட்டகம் என்பது நாம் வாழும் உடல் பெட்டகம். கருவில் வளரும் உயிர் அஷ்டமித் திதி தோறும் எட்டு விதமான வளர்ச்சிகளைப் பெறும்.
இது, அட்டகத்தின் அஷ்டாட்சச் சுடர்கள் என்பதாக இருதயத்துள் உறையும் ஆத்மச் சுடரின் எண்திசைச் சுடர்களைக் குறிக்கின்றது.
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ பைரவாஷ்டகம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி அஷ்டகம், ஸ்ரீ சிவாஷ்டகம் என்ற வகையில் எட்டு, எட்டுத் துதிகளாக உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இறைத் துதிகள் உண்டு.

இவற்றை அஷ்டமித் திதி தோறும் ஓதி வருதல் மிகவும் விசேஷமானது.
இவை யாவும் அஷ்டமித் துதியில் இயற்றப் பெற்றவை!
எண்கண், எட்டுக்குடி போன்ற எண் எட்டு சம்பந்தப்பட்ட தலங்கள் எட்டாத் துறை ஆன்ம சக்திகளை, ஆத்மச் சுடர்ப் பொலிவை உணர்த்துபவை ஆகும்.
அஷ்டமி கூடும் சுவாதியில், எண் எட்டின் சக்திகள் பொலியும் ஓஃம் நமோ நாராயணாய அட்ட மந்திரங்களை ஓதி, பெருமாள் ஆலயத்தில் அஷ்டாங்க நமஸ்காரமாகிய எட்டுப் பகுதிகள் தரையில் தோயுமாறு வீழ்ந்து வணங்குதல்,
எட்டு முழத்திற்குப் புஷ்பங்கள் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி வழிபடுதல்,
எட்டு உழக்கு நவதான்யத்தை,
எட்டு உழக்குக் கோலமாவில் கலந்து ஆலயப் பிரகாரங்களில் கோலமிடுதல்,
எட்டு ஆழாக்குப் பாலபிஷேகம்,
எட்டு உழக்கு சாதப் படையல்
-போன்று எட்டின் மடங்காய் வழிபடுதலால்,

மனவேறுபாடுகளால் தம்பதியர் மற்றும் பெற்றோர் -பிள்ளைகள் மனந் திறந்து பேசாதிருக்கும் நிலை மாறி
அகமகிழப் பேசும் நிலை வந்திட,
அஷ்மியில் விரதம் இருந்து, மேற்கண்ட பூஜைகளை நிகழ்த்தி,
எண்கண், எட்டுக்குடி முருகன் தலம் மற்றும்
ஸ்ரீகிருஷ்ணனின் அமர்ந்த கோலத் தலங்களில் வழிபட்டு வர வேண்டும்.
கிருஷ்ணார்ப்பணம்

கருடரின் கருடோத்பத்தி நிகழ்ந்த விளம்பி தமிழ் வருடம்

🌀கருட வழிபாடுகள் 1⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅ஒருமுறை தேவேந்திர மூர்த்தியின் துணையுடன் எண்ணற்ற ரிஷிகளைக் கொண்டு ப்ரஜாபதி ரிஷியான கஸ்யப முனிவர் துவக்கிய யாகத்திற்கு
🦅 க்ரது, க்ரியா ரிஷி தம்பதிகளின் புதல்வர்களான அறுபதாயிரம் வாலகில்ய மஹரிஷிகளும் மஹா வில்வ தளக்குச்சியை வேள்விக்கான சமித்தாய் சுமந்து வருகையில்... இந்திரன் கேலி செய்ததால், அறுபதினாயிரம் வாலகில்ய மஹரிஷிகளும்
🦅உன்னை நிகர்த்த இந்திரரை நாங்கள் இப்பிரபஞ்சத்தில் படைப்போம்என்று அறுதியிட்டு இந்திரனுக்குச் சாபமிட...
🦅பின்னர் கஸ்யப முனிவருடன் அவர்தம் ரிஷிபத்நீ, இந்திரர் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் வாலகில்ய மஹரிஷிகளிடம் சென்று மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரிட

🦅எல்லா விதத்திலும் இந்திரருக்கு நிகராக மற்றொரு இந்திர சக்தியுள்ளவர் தோன்றினாலும், அவர் பட்சி லோகத்திற்கான இந்திர அந்தஸ்தில் திகழ்வார் என்று சூரிய பகவான் முன்னிலையில் அறுபதினாயிரம் வாலகில்ய ரிஷிகள் தம் வாக்கை சற்றே மாற்றி அமைத்து அருளிச் செய்தனர்.
🦅இவ்வகையில் கருட மூர்த்தி, பட்சிராஜ மூர்த்தியாக, மஹாவிஷ்ணுவின் வாஹனமாக பண்டைய யுகத்தின் விளம்பி தமிழ் ஆண்டில் உற்பவித்தார்

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஏப்ரல் 2018
திருக்கணித பஞ்சாங்கப்படி 20.7.2018 அன்று கருட ஜெயந்தித் திருநாள்
🌀கருட வழிபாடுகள் 2⃣🌀  - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅பட்சிகளின் அழிவிற்குத் தற்போதையக் கலியுக மனித குலம் பெரிதும் காரணமாகி வருவதால்,
🦅பிரபஞ்சத்தில் சர்வ பட்சிகளின் தலைமை மூர்த்தியான கருடரின் கருடோத்பத்தி நிகழ்ந்த விளம்பி தமிழ் வருடத்தில் கருட வழிபாட்டினை நிறைய நிகழ்த்தி வருதல் வேண்டும்.
🦅 கருட தண்டகம்,
கருட பஞ்சகம்,
கருட காயத்ரீ மந்திரம்,
கருட அஷ்டோத்திரத் துதி போன்ற கருட துதிகளை ஓதுதல்
🦅கருடாழ்வாருக்குத் தைலக்காப்பு, அரைத்த மஞ்சள் காப்பு, அரைத்த சந்தனக்காப்பு இடுவது
🦅கருடன் சன்னிதியை கருடக் கிழங்கு எனும் மூலிகைக் கிழங்குகளால் அலங்கரிப்பது விசேஷமானது
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஏப்ரல் 2018

நோய் நிவர்த்திக்கு உதவும் ஓளஷத மூர்த்தியுமே கருட பகவான்
🌀கருட வழிபாடுகள் 3⃣🌀
   - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅எவ்வாறு பிரதோஷ நாளில் சிவவாகனரான நந்தி மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றனவோ  இதே போல்
🦅விஷ்ணு வாஹனராகவும், (வைத்திய சக்தி) ஒளஷத மூர்த்தியாகவும் அருள்கின்ற கருட மூர்த்திக்கு மருத்துவ சக்தி நாட்களான செவ்வாய், ஆயில்யம், அஸ்வினி, நீராடல் சக்தி நாட்களான சனிக்கிழமை, பஞ்சமித் திதி, திருவோணம், புதன் போன்ற நாட்களில்

🦅மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, தைலக்காப்பு, வெண்ணெய்க் காப்பு இட்டு வழிபடுவது நோய்களுக்கு நல்ல நிவாரணத்தைத் தரும். குடும்பத்தார்க்கு மனசாந்தமும் கிட்டும்

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஏப்ரல் 2018

கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment