சித்தர்கள்
அருளும் எளிய கருடபட்சி தரிசன முறை✡
🌀கருட வழிபாடுகள் 4⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள்
🦅கருட பட்சியை அறிந்து கொள்ளும் முறையில் நன்கு
பயிற்சி பெற வேண்டும் 🦅 கீழ்க் கழுத்து வெண்மையாக உள்ள பட்சியே கருடன்
ஆகும்.
🦅கருடனை கண்டவுடன் வலதுகை மோதிரவிரலால் இடது
கன்னம், வலது கன்னம், இரண்டையும் மாறி மாறி
மூன்று முறை (மொத்தம் 6 முறை) “நாராயணா” என்று இறைநாமம் ஓதி
தரிசிக்க வேண்டும்.
🦅இத் தரிசனத்துடன் சிறிய அளவிலேனும் அன்னதானம்
செய்தால் கருட பகவானின் பரிபூரண அனுக்கிரஹம் கிட்டுவதோடு, கருட தரிசனத்தின் பலன்களும் பூரணமடையும்.
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஆகஸ்ட் 1995
✡கருட பட்சி தரிசன கிழமையும் அதற்குரிய அன்னதானமும்✡🌀கருட வழிபாடுகள் 5⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள் -
🦅கருட பட்சி தரிசனத்துடன் சிறிய அளவிலேனும்
அன்னதானம் செய்தால் கருடபகவானின் பரிபூரண அனுக்கிரஹம் கிட்டுவதோடு, கருட தரிசனத்தின் பலன்களும் பூரணமடையும்.
( கிழமை /
அன்னதானம் எத்தனை பேருக்கு / பலன்)
🗓ஞாயிறு / ஒருவருக்கு அன்னதானம் /நோய் தீரும்
🗓திங்கள் / இருவருக்கு அன்னதானம் /
குடும்பத்தில் நிம்மதி
🗓செவ்வாய் /நால்வருக்கு அன்னதானம் /எதிரியால்
வரும் துன்பம் தீரும்
🗓புதன் /ஐவருக்கு அன்னதானம் /எதிரிகளிடமிருந்து
காக்கப்படுவர்.
🗓வியாழன்/ மூவருக்கு அன்னதானம் /தீர்க்க ஆயுள்
🗓வெள்ளி / அறுவருக்கு அன்னதானம் /பணவரவு
🗓சனி / எழுவருக்கு அன்னதானம் /எவ்விதத்
தொல்லைகளும் தீரும்
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஆகஸ்ட் 1995
✡டாக்டர்களுக்குரிய சிறப்பான வழிபாடு!✡ 🌀கருட வழிபாடுகள் 6⃣🌀 - வாத்தியாரின்
அருளுரைகள் -
🦅டாக்டர் லஷ்மண சுவாமி முதலியார், டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் ரெங்காச்சாரியார் போன்ற நமக்கு முந்தைய
காலப் பிரபல டாக்டர்கள் அனைவரும் ஸ்ரீ கருட பஞ்சகம், ஸ்ரீ கருட துதிகளை ஓதி
மற்றும் அரசு, வேம்பு மரங்களை அடிக்கடி அடிப் பிரதக்ஷிணம் செய்து
தங்களுடைய தெய்வீக மருத்துவ குணங்களை விருத்தி செய்து கொண்டார்கள்.
🦅ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்தை எப்பொழுதும் ஓதி
வந்தால் அற்புத மூலிகைகளின் சக்தியானது மருத்துவர்களுடைய தேகத்தில் குடிகொண்டு
மிகச் சிறந்த நோய் தீர்க்கும் சக்தியாகி, மருத்துவர்களுக்கு தெய்வத்
தன்மையைக் கூட்டுகின்றது!
🦅நோய் தீர்க்கும் இடங்களில் மருத்துவர்கள் ஸ்ரீ
அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் படத்தை வைத்து தினந்தோறும் மூன்று வேளையும்
வழிபாடு செய்து வந்தால் அற்புதமான தெய்வீக மருத்துவ குணங்களைப் பெற்றிடலாம்.
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், அக்டோபர் 1998
✡அருணாசலத்தின் கருடமங்கள தரிசனம்.✡ 🌀கருட வழிபாடுகள் 7⃣🌀
- வாத்தியாரின் அருளுரைகள் -
🦅திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் குபேர
லிங்கத்திற்கும், இடுக்குப் பிள்ளையார் சன்னதிக்கும் இடையே, அருணாசல மலையின்பால் - விமான தளம் போல் படர்ந்த தரிசனம் தென்படும். 🦅அருணாசலத்தின்
கருடமங்கள தரிசனமிது.
🦅நோய் நிவாரணத்தோடு, நோய்க்கு காரணமான கர்மவினையையும் நிவர்த்திக்க வல்ல தரிசனம்
🦅வியாழக்கிழமையிலும், ஏனைய தினங்களில் குரு ஹோரை நேரத்திலும் கிரிவலத்தின் போதும் இந்த கருடமங்களம்
பகுதியில் கருட காயத்ரீ மந்திரங்களை ஒதி, கருட தரிசனத்தைப் பெறுவது
நல்ல சகுனமாகும்; விசேஷமான அருளையும் வார்க்கும்.
🦅 திருச்சி - புள்ளம்பாடி அருகில் உள்ள கருடமங்கலம் எனும் தலத்தில் இருந்து
கருடன்கள் தினமும் அருணாசலத்தின் கருடமங்களம் பகுதிக்கு வந்து வழிபட்டுச்
செல்கின்றன.
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், மார்ச் 2015
✡கருட மந்திரங்களில் கரை கண்டவர் பட்சிராஜ சித்தர் ✡
🌀கருட வழிபாடுகள் 8⃣🌀 - வாத்தியாரின்
அருளுரைகள் -
🦅கருடக் கொடி சித்தரின் வழியில் பூமியில் அரிய
கருட மூலிகைகளைக் கொண்டு சீரிய மருத்துவ சேவைகளைப் புரிந்தவர் பட்சிராஜ சித்தர்
🦅கருடன் கிழங்கு, கருடக் கொடி போன்ற
கருடசக்தி மூலிகைகளைக் கொண்டு, பல தலங்களிலும், இறுதியில் திருஅண்ணாமலையிலும்
ஏழை எளியோர்க்கு மூலிகை மருத்துவப் பணி மற்றும் அரிய மூலிகா சக்தி வேள்விகள், பூஜைகளை ஆற்றியதாலும், பட்சிராஜ சித்தர் என்றானார்.
🦅இவர் தயாரிக்கும் மூலிகைகள், வானில் பறக்கும் கருடனின் நிழல் பட்டு, மென்மேலும் மூலிகா
மருத்துவ சக்தி நன்கு விருத்தி பெறுவதற்காய் திருஅண்ணாமலையில் கருடப் பாறை மேல்
வைத்துப் பூஜிக்கப் பெறும்
🦅இன்றும் பூவுலகில் பட்சிராஜ சித்தரை
கருடசக்தித் தலங்களில், கருட சக்தி நாட்களில் கருடன்களின்
கூட்டத்திடையே இருப்பவராய் தரிசிக்கக் கூடும்.
🦅கருடக்கொடி சித்தரோடும் காணப் பெறுபவர். 🛐முழுமையான
அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், மார்ச் 2015
✡ கருட மந்திர உபாசனையில் சித்தி பெற்று சமுதாயப்
பணிகளையும் ஆற்றிய மஹான் சோமநாதன்பட்டினம்
“சடைச்சாமீ”✡ 🌀கருட வழிபாடுகள் 9⃣🌀 -
வாத்தியாரின் அருளுரைகள் -
🦅புதுக்கோட்டை - அறந்தாங்கி - கட்டுமாவடி 3
கி.மீ - சோமநாதன்பட்டினம்
🦅இமயமலையில் கேதார்நாத் செல்லும் தடத்தில்
த்ரியுகி நாராயண் மலையில் கல்லால மரத்தடியில் சித்தர்களை குருவாகக் கொண்டு, தம் பூலோக வாழ்வின் ஆதியில் தவம் பூண்டவர் மஹான் சாது நாரயணகிரி
🦅இவரே சடையை தலை மத்தியில் முடிந்து யோகப்
பிரகாசத்துடன் நிமிர்ந்த நன்னடையுடன், கையில் வலம்புரிச் சங்குடன் துலங்கி, சடைச்சாமீ என்ற காரணப் பெயரை பூண்டு வந்தவர்
🦅நோய்களைத் தீர்க்கும் ஒளஷத மூர்த்தியாகிய
கருடாழ்வாருக்கான அரிய கருட மந்திரங்கள் சித்தி செய்வதற்கு மிகவும் கடினமானவை.
இவற்றில் உன்னதம் பெற்றவர் மஹான் *ஸ்ரீ சாது நாரயணகிரி” 🦅திருக்கழுக்குன்றம், திருத்தங்கல், வெள்ளியங்குடி, திருச்சி - புள்ளம்பாடி அருகே
கருடமங்கலத்திலும், கருட மந்த்ர யோகம் பயின்றவர்.
🦅ஒளஷத சக்திகள நிறைந்தது, கருட மந்தாரதிகள் ஆதலாலும், கருட மூலி எனும் விசேஷமான மூலிகைகள்
இருப்பதாலும், இவற்றால் மக்களின் நோய்ப் பிணிகளையும் சித்த
வைத்திய மூலிகைப் பூர்வமாய்த் தீர்த்து, அளப்பரிய சமூக சேவையை
ஆற்றி வந்த கருட மந்த்ரசக்தி மங்கள யோகி!
🦅இன்றும் சோமநாதன் பட்டினத்தில் இவருடைய ஜீவாலய
வளாகத்திற்கு குறித்த கருடன்கள் நிதமும் காலை ஒன்பது மணி வாக்கில் வ்ந்து
பிரசாதத்தை உண்டு செல்கின்ற அற்புதத்தைத் தரிசிக்க காணலாம்
🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், மே 2014
No comments:
Post a Comment