எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, August 10, 2018

கருட வழிபாடுகள் - 3



விஷால் கருட கற்சூரத் துதி 🌀கருட வழிபாடுகள் 🔟🌀 -🦅 கருட காயத்ரீ மந்திரம்

 ஓஃம் தத்புருஷாய வித்மஹே சுவர்ண பக்ஷாய தீமஹி
 தந்நோ கருட ப்ரசோதயாத்

கருடகாரகம் காப்புத் துதி

கருடக் குரவேத சாகை
காரொளி விண்டவழி குந்தம்
அருணம் மதிபேணும் வாலம்
ஆழியப் பாலி வடமூலம்
திருவாழி கடற்சயன ரங்கம்
திருப்பாற் கடலுற்ற அமுதம்
கருநீழல் மருந்தாளிக் கோது
க்ஷம்என்ன தருகருட பீஜம்

(கருட விபாகம், கருடமூலி கிரந்தம், விஷால் கருட கற்சூரத் துதி)
🦅தினமும் குரு ஹோரை நேரத்தில் முக்கியமாய் கருட சக்தி தினமான வியாழக்கிழமை தோறும் விஷால் கருட கற்சூரத் துதியை, ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்துடன் சேர்த்து 108, 1008, 10008 முறை குருவருளுடன் ஓதி கருட மூர்த்தியை வணங்கி வர வேண்டும்.

🦅இஃதோடு வானில் கருடனின் தரிசனத்தையும் பெற்றிட மனசுத்தி, அறிவு மேன்மை, உத்தம நோய் நிவாரணியாய்ப் பலனளிக்கும்

🦅வேள்வியிலும், கருட தரிசனத்தின் போதும் விமானப் பயணத்தை மேற்கொள்கையிலும் இம்மந்திரத்தை ஓதுதல் சிறப்பாய்ப் பயனாகிக் காக்கும்.🦅நிதமும் ஓதி வந்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும். தீய வழக்கங்கள் அண்டாத வகையில் நல்ல காப்பு ரட்சா சக்தியும் கிட்டும்,

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், மார்ச் 2015

கருட மூர்த்தி அமுதக் குடத்தை எடுத்துச் சென்ற வைபவம்

🌀கருட வழிபாடுகள் 1⃣1⃣🌀   - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅 அமிர்தம் பாற்கடலில் கிட்டிய போது, மஹாவிஷ்ணுவின் வாகனமான கருட மூர்த்தி, உலக ஜீவன்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டிய அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் சுயநலமாய் சுருட்டிட முயற்சி செய்கின்றார்களே என்று வருந்தி அமிர்தக் குடத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்தார்.


🦅அனைத்துமே இறை லீலையால் நிகழ்வதாய் தன் பணியைத் தொடர்ந்தார்.🦅கருட மூர்த்தி எடுத்துச் சென்ற அமிர்தக் கும்பத்தில் இருந்து அமிர்தத் திவலைகள் வீழ்ந்த புண்யநதித் தலங்கள் நாசிக், உஜ்ஜயினி, ஹரித்வார், பிரயாகை (அலகாபாத்) ஆகிய நான்குமாம்.

🦅அமிர்தச் சாரத்தின் காரணமாய் இந்நான்கு புனித ஆற்றுத் தலங்களிலும் அந்தந்த தலத்தின் புனித நதியில் அமிர்தம் கலந்த காலத்தை ஓட்டி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்கின்றது.

🦅பூலோகத்தின் எலா ஜீவன்களுக்குமே அமிர்தப் பிரசாதம் கிட்டிடுவதற்கு கருட மூர்த்தியின் சேவை துணை ஆயிற்று.

🦅இதற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், வானில் கருடனைக் கண்டால், நாம் தரிசிக்கும் போதெல்லாம் வலது மோதிர விரலால் கன்னத்தில் தட்டி குறித்த மந்திரங்களை ஓதி அனைத்து ஜீவன்களின் சார்பாகவும் கருடனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், பிப்ரவரி 2016
கருடக்கொடி சித்தர் - இமயமலையின் சஞ்சீவி மலை, கொல்லிமலை, சதுரகிரி, பொதியமலை, மஹேந்த்ர மலை போன்ற மாமருந்து மலைகளின் மூலிகை சக்திகளை நம் பூலோகத்தார்க்கு மட்டும் என்றல்லாது, பல லோகங்களுக்கும், எண்ணற்ற பூமிகளுக்கும் அளிப்பவர்

🌀கருட வழிபாடுகள் 1⃣2⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅 கருடக் கொடி சித்தர் நான்கு யுகங்களிலும் பல கோடி பூமிகள், லோகங்கள், கிரஹங்கள், நட்சத்திர மண்டலங்களுக்கு சென்று வருபவர்.
🦅கருடக்கொடி சித்தர் தன் உடலில் தாங்கி இருக்கின்ற மூலிகைக் கொடிகள் மிகவும் அபூர்வமானவை.

🦅இவர் வானில் பறக்கும்போது இவருடைய நிழல் நம்மீது படுவதே பெரும் பாக்யமாகும். இதனால் எத்தனையோ நோய்கள், கர்மவினைகள், பாவங்கள் நிவாரணம் ஆகும்

🦅கருடக்கொடி சித்தர் சுமந்து செல்லும் மூலிகைகள் அந்தந்தக் காலப் பருவத்திற்கு ஏற்ப மாறும்.

🦅கருடக்கொடி சித்தரின் வடிவை சென்னை - பூந்தமல்லி - சித்துக்காடு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் மட்டுமல்லாது ஏனைய ஒரு சில தலங்களிலும் அபூர்வமாய் தரிசித்திடலாம்

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், டிசம்பர் 2016
ஸ்ரீ அமிர்தகலச ஆனந்த கருட பகவான்🌀கருட வழிபாடுகள் 1⃣3⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள் - "ஓஃம் ஓஃம் ஓஃம் உத்கீதம் ஓஃம்"

ஓஃம் நமோ பகவதே ஸ்ரீ மஹாகருடாய பக்ஷீந்த்ராய த்ரைலோக்ய பரிபூஜிதாய விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம

ஆதவ அனுமார் ஆழி மதிவிடை மாதவஜோதி
ஐந்தவர் சக்தி கூடம் ஆகவே கருடக் காப்பு

🦅உத்கீதம் என்றால் ஓஃம் எனும் பிரணவம்

🦅கருடனின் இறக்கைகளில் எப்போதும் ஓஃங்கார பீஜங்கள் தவனித்துக் கொண்டே இருப்பதால், உத்கீத பக்ஷீராஜா என்ற பெயர் கருட மூர்த்திக்கு உண்டு

🦅முழு அமிர்தக் கலசமே தன்னிடம் இருந்த போதும் அமிர்தத்தை அருந்திடும் சுயநலமான எண்ணம் ஒருபோதும் கருடாழ்வாரிடம் தோன்றவில்லை.

🦅இதனால் ஆனந்தித்த மஹாவிஷ்ணு, அமிர்தத்தை அருந்தினால் மட்டுமே கிட்டும் அத்தனைக் கோடி ஒளஷத, ஆத்ம சக்திகளையும் தாமே ஆனந்தித்து கருட மூர்த்திக்கு அளித்திட...

🦅இதில் உற்பவித்தவரே அமிர்தகலச ஆனந்த கருடமூர்த்தி

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், பிப்ரவரி 2017

கருட மூர்த்திக்கு மங்களாலயன்என்ற பேறு கிட்டிய புள்ளமங்கலம்
🌀கருட வழிபாடுகள் 1⃣4⃣🌀  - வாத்தியாரின் அருளுரைகள் -

🦅 பட்சிராஜா (புள்ளரசு), மங்களாலயன், வைனதேயன், சுபர்ணன், பெரிய திருவடி என்றெல்லாம் அழைக்கப் பெறும் கருடாழ்வார், 🦅இவ்வாறான ஒவ்வொரு புனிதமான அடைமொழியையும் ஒவ்வொரு புனிதத் தலத்தில் அருளப்பெற்றார். 🦅புள் என்றால் பறவை

🦅புள்+மங்கலம் என்பதாய், தன் தாயின் நலனுக்காய், மாதர் குலத்தின் மங்கல சுபிட்சத்திற்காய், பட்சிராஜா எனும் புள் அரசான கருடமூர்த்தி வழிபட்ட தலம் புள்ளமங்கலம்

🦅கருடாழ்வாரும் இங்கு எல்லா மாதர்களுக்கும் உத்தமச் சேவைகளை ஆற்றியதோடு, இதற்குமுன் தன் தாயின்பால் உற்றார் கொண்டிருந்த கடுமையான பகை தீர்ந்து, எந்தத் தாய்க்கும் இதே போல் பகை அண்டாது காத்து மங்களகரமான வாழ்வு அமைய வேண்டி வழிபட்ட தலம் புள்ளமங்கலம் ஆகும்

🦅இதனால் புள்ளமங்கலம் தலத்தில் தான் கருடாழ்வாருக்கு மங்களாலயன் என்ற பெயர் சூட்டப் பெற்றது.

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், பிப்ரவரி 2017


அன்னைக்கு அடைக்கலம் புள்ளை 🌀கருட வழிபாடுகள் 1⃣5⃣🌀

🦅 எதையும் தாங்க வல்லவர் என்ற பொருளில், கருடாழ்வாருக்கு கருடன்என்ற பெயரை ஆதிமுதலில் அளித்தவர்கள் அறுபதினாயிரம் வாலகில்ய மஹரிஷிகள ஆவர்

🦅கருடன் வானில் தலை கீழாய் பறந்தால் இது அதற்கு ஆத்மவலம்.

🦅கருடாழ்வார் தன் தாய் வினதை, தந்தை காஸ்யப ரிஷியோடு புள்ளமங்கலத்தில் உய்ந்து நெடுங்காலமாக வழிபட்டமையால், இங்கு வசித்த கருடனின் உத்தம மாதாவை சேவையை அறிந்து, இத்தலத்தில் தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் மனமுவந்து வந்து தங்கி, கருட மூர்த்தி, கருடமாதாவின் ஆசியுடன் வாழலாயினர்.

🦅இதனால் முந்தைய யுகங்களில் புள்ளமங்கலத்தில் மாதர்குல எண்ணிக்கை மிகுந்து இருந்து (உ)வந்தது. மேலும் தாய்க்குலத்திற்கான நல்வளவர, சுபிட்சத் தலமாயும் சிறப்பைப் பெற்றிருந்தது.

🦅 அன்னைக்கு அடைக்கலம் புள்ளை என்ற ஆன்மமொழியானது, இது கருதியே புள்ளமங்கலம் புனிதத் தலத்திற்குப் பொருந்து வந்தது.

🦅இத்தலத்தில் கருட மந்திரங்கள், கர்போஉபநிஷத், கருடோஉபநிஷத் மந்திரங்களை ஓதி வழிபடுதல், வேள்வி ஆற்றுதல் உலகமாதர் குலத்தின் நலவளத்திற்கு உதவுவதாம்

🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், பிப்ரவரி 2017

ஏழு தலைமுறைகளை உய்விக்கும் கருடசக்தித் தலங்கள்🌀கருட வழிபாடுகள் 1⃣6⃣🌀 - வாத்தியாரின் அருளுரைகள் -


🦅கழுகு குலம், கருட குலம் இரண்டையும் ஒன்றாய் வைத்துக் கூறுவதும் உண்டு.🦅சடாயு, சம்பாதி கழுகு வம்சத்தின் ஏழு தலைமுறைகளுக்கும் ஸ்ரீ ராமர் அனுகிரகம் செய்த தலங்களுள் புள்ளபூதங்குடி, புள்ளமங்கலம், வைதீஸ்வரன் கோயில், காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி, பூம்புகார், திருச்சி - லால்குடி - புள்ளம்பாடி அருகே கருடமங்கலம், திருநெல்வேலி - பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு போன்ற ஏழும் உண்டு.🦅இத்தல வழிபாடுகள், இவற்றில் ஆற்றும் தர்ப்பணம் போன்ற பிதுர்காரியங்கள் ஏழேழு தலைமுறைகளையும் உய்விப்பதாகும் 🛐முழுமையான அருளுரைகளுக்கு: ஸ்ரீ அகஸ்திய விஜயம், ஜூலை 2017

கிருஷ்ணார்ப்பணம்

photo courtesy : sadagopan.org pdf files...

No comments:

Post a Comment