அகத்திய மாமுனியின் வழித்தோன்றல்கள் : தகப்பன் மகன் பாதாள சமாதி - கரிவலம் வந்த நல்லூர் – பனையூர்.ஸ்ரீசற்குரு சங்கரநாராயண சுவாமிகள் மற்றும் அவரின் தவப்புதல்வன்ஸ்ரீசற்குரு தெட்சிணா மூர்த்தி சாமிகள் ஜீவசமாதி ஒடுக்கம் - பனையூர் . அகத்திய மாமுனியின் வழிவந்த தவப்பெரும் ஞான சித்த மூர்த்திகள் தந்தையும் - மகனுமாய் ஆதி 108 சித்தர்களின் ஒருவராய் இங்கு - ஜீவசமாதி நிலை வான்பெருஞ்சுடராய் அமைந்துள்ளது. புவிக்கடியில் சமாதி அதிஷ்டானம் புற்றாக அமைந்துள்ளது . அபிசேகம் செய்ய இயலாது. சமாதி சுரங்கத்திற்கு மேலே கற்பகிரகத்தில் ஸ்ரீசற்குரு சங்கரநாராயண சுவாமிகள் சிவலிங்க சொருபமாகவும், ஸ்ரீசற்குரு தெட்சிணா மூர்த்தி சாமிகள் –புற்றிடங்கொண்ட புனிதராகையால் தந்தைக்கு உபதேசம் செய்த முருகபெருமானாய் பன்னிரு கரங்களுடன் மக்களின் மனக்குறைகளை நீக்கி அருள்பாலிக்கும் வண்ணமாய் காட்சி தருகிறார்.
>> திருநெல்வேலி மாவட்டம் – சங்கர நயினார் கோவிலுக்கு அண்மையில் வடமேற்குத் திசையிலுள்ள தென்மலை எனும் ஊரில் சங்கரேஸ்பரர் திருவருளால் சங்கரநாராயண சுவாமிகள் பிறந்தார்.சமாதி அமைவிடம்:

நெல்லை மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ளது பனையூர். சங்கர நயினார் கோவிலுக்கு வடமேற்கில் 12 மைல் தொலைவிலும் , கரிவலம்வந்த நல்லூருக்கு மேற்கே 4 மைல் தொலைவிலும் உள்ளது பனையூர் .பேருந்து வசதி உள்ளது. ஒருமுறை வந்து பாருங்கள் அருமையான அனுபவங்களை பெறுவீர்கள்.. 150 வருடங்கள் முன்பு ஜீவசமாதியான சித்தர் ஒருவரின் ஜீவசமாதி தற்செயலாக திறக்கப்பட்டதில் அவரது உடல் சிறிதும் சேதமடையாமல் அப்படியே இருந்தது. திருநெல்வேலி மாவட்டம் ச
ங்கரன்கோவில் அருகே உள்ள பாரப்பட்டி என்ற சிற்றூரில் விஸ்வகர்ம குலத்தில் பிறந்து கல் சிற்பியாக இருந்து பின்னாளில் ஆன்மயோகியாக மாறி ஜீவசமாதியானவர்தான் இந்த மகான் சிவனைய்யா இவர் ஜீவசமாதி அறியப்படாமல் இருந்து பின் தற்செயலாக திறக்கப்பட்டபோது சிவனைய்யாவின் உடல் சிறிதும் கெடாமல் இருந்தது கண்டு வியந்த கிராம மக்கள் உடனே மீண்டும் அபிசேகம் அலங்காரம் செய்து அதே இடத்தில் ஒரு கோவில் எழுப்பியுள்ளனர் இந்த அதிசயத்தைப் இன்றும் பாரப்பட்டி கிராமத்தில் நாம் காணலாம்
நாரயணவனம் சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம்.. 15.08.2018,புதன் கிழமை அன்று . சுரைக்காய் சுவாமிகள்., வயதை யாரும் அறிந்தவா் கிடையாது சுவாவிகள் வாழையடி வாழையாக ஒரு சித்தா் பரம்பரையையே உருவாக்கினாா் சித்தரின் அருளால் சட்டிப்பரதேசி, குமரகுப்பம் சுவாமிகள்,மடுகு சுவாமிகள், முநதப் பரதேசி, மூடாலம்மா மங்கம்மா,நந்தனாா் சுவாமி போன்ற மகான்கள் உருவாகி மிளிா்ந்தனா் சுரைக்காய் சுவாமிகளை சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகா் பகுதிகளில் தாத்தா என்று செல்லமாகவும் , உரிமையாகவும் அழைக்கப்படுவாா். சுரைக்காய் தாத்தா பயன்படுத்திய சுரைக்குடுவைகள் மற்ற பொருட்கள் இனறும் ஜீவ சமாதியில் உள்ளது. 08.08.1902 ம் ஆண்டு ஆடி மாதம் 24ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்லபஞ்சமி(கருடபஞ்சமி) ஹஸ்த நட்சத்திரம் பகல் 12 மணிக்கு பரிபூரணமடைந்தாா்.முகவரி நாராயணவனம் கிராமம்,புத்தூா் ரயில் நிலையம்,சித்தூா் மாவாட்டம். ஆந்திரமாநிலம். (தகவல் - சித்தர் தேசம்) சுரைக்காய் சுவாமிகளுக்கு தலைப்பாகை செய்து
கொடுத்தவர்.. கேசவ சித்தர்

ஜீவ அமிர்தம் புத்தகம்., எடையூர் சிவமதி அவர்களின் ஜீவசமாதி புத்தகம்., கானமஞ்சரி சம்பத் குமார்
அவர்களின் - தமிழகத்துச் சித்தர்களின் ஜீவசமாதிகள்.. போன்ற நூல்களில் .
ஆயிரக்கணக்கான.. ஞானியர்களின் பீடங்களின் ...sthala விபரங்களை காணலாம்..
No comments:
Post a Comment