எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 21, 2018

கால சர்ப்ப / நாக தோஷம்

கால சர்ப்ப தோசம் / நாக தோஷம்தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு கேதுக்கள் எந்த நக்ஷத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்வாதி, சதயம், திருவாதிரை நக்ஷத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் உடலில் உள்ள ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறலாம். ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றியது துவிதநாக பந்தம் ஆகும். இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் படத்தில் காணும் தோற்றம் ஆகும். நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.
நீக்கும் துவிதநாக பந்தம் - பரிகார பூஜை 
***************
நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது. அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, கீழ்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். கீழ்கண்ட துதியை துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும்.முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.
அதனை முருகனாக பாவித்து கீழ்கண்ட துதியை பாராயணம் செய்யவும். வேலானது ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும்,பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும்.முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும்.பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்.
பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய தௌத்தியம் (திருவடித் துதி):
அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரிபுர சததள பாத நமஸ்தே

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே

இந்துள அம்பக இங்கித மங்கல
சுந்தர ரூப துவாதச கரதல
சந்திர சேகர தடதா கிடதடப்
பந்திகொள் நிர்த்தன பாத நமஸ்தே

ஈசுர நந்தன ஈசுர புங்கவ
தேசுற குண்டல சித்திர பந்தன
ஆசறு சஸ்திர ஹஸ்த சரோருக
பாச விமோசன பாத நமஸ்தே

உச்சித மஞ்ஞையில் ஊர்அதி மோகன
நிச்சய உத்தர நித்ய மனோலய
சற்சனர் மித்திர சத்துரு கண்டன
பச்சைஅம் புஷ்கர பாத நமஸ்தே

ஊர்த்துவ நாடகர்க் கோதிய தேசிக
ஆர்த்த தயித்தியர் அடல்தெறு காதக
கூர்த்திகை வீரிய குக்குட கேதன
பார்க்க அரும்குக பாத நமஸ்தே

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
கண்இல கும்சிவ கந்த கிருபாசன
பண்ணவர் பூஜித பாத நமஸ்தே

ஏரக நாயக என்குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதிதரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இகபர சாதக
பங்கயன் மால்பணி பாத நமஸ்தே

ஒகரம ஹாரத ஒளிர்புய அமுதர்கள்
புகழ்உப வீதவி பூதிகொள் முண்டக
ரகித விதூன லலாட விலோசன
பககுஹ பாவக பாத நமஸ்தே

ஓம்அர ஹரசிவ ஓம்சர வணபவ
ரீம்அர ஹரசிவ நிகழ்பரி புரபவ
ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
பாமகள் புகழ்அருள் பாத நமஸ்தே

 ---------------------------------------------------------------------------------------------------
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
நாகதோஷம் என்பது எல்லாவிதமான பாபங்களின் மொத்த குவியல். "நாக தோஷம்" என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள். ஒன்று ஆன்மீக வழியில் துர்கை, கணபதி, ராகு, கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன், இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது, பசுக்களை தானமாக தருவது (வசதி உள்ளவர்கள்), பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும், ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவை செய்யலாம். வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை செய்து வைத்து, ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி, அதன் தலையில் சில மலர்களை இட்டு, சில துளி பாலையும் இட்டு, அதை ஆழியிலோ, நதியிலோ கரைத்துவிட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் எளிதாக எல்லோருமே இந்த முறையை பின்பற்றலாம்! இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு, இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால், ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டுவிடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை, அந்த வெள்ளியை உபயோகமாக, தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாகதோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
In Sri Agasthia vijayam magazine u can do whichever suits to your situation eg கதிரானிருப்பு,  செம்பதனிருப்பு in july2018,page: 29  and then பேரையூர் நாக தீர்த்தம் , திருபாம்புரம், திருநாகேஸ்வரம் , like .. Lots there . circling navahragha 96times in Saturday


No comments:

Post a Comment