எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 19, 2018

கற்பக மரம் ....

வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் நாகசந்தேஷ்வர் . உஜ்ஜைன் மஹாகாள் கோவில் மூன்றாவது ப்ரகாரத்தில் உள்ளது. ஷரவண மாசம் (நாக) வளர் பிறை பஞ்சமியன்று. . வருடம் முழுவதும் நாகராஜன் தவம் இயற்றி இன்று மட்டும் தரிசனம். மஹாவிஷ்ணு பாம்பின் மேல் இருப்பது அறிவோம். உலகத்தில் இங்கு மட்டுமே சிவன் பார்வதி தசசிரசு நாகரான நாகசந்தேஷ்வர் மடியில்... இங்கு நாகராஜா கடுந்தவம் புரிந்து இறைவனோடு கலந்த தால் இன்றும் மஹாகாளேஷ்வர் முன்பு படமெடுத்து காணப்படுவார். அதனால் வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே இந்த பிரகாரம் திறக்கப்பட்டு தனியாக பூஜிக்கப்படும். அன்று சுமார் 2 லட்சம் பேர் தரிசனம். ஒரு முறை தரிசனம் செய்தால் போதும், ஸர்ப்ப தோஷம் நிவர்த்தி என்று ஐதீகம்.

ஸ்ரீ செட்டி சித்தர், தென்காசி! தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்தவர் "மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்". திருமுருககிருபானந்த வாரியார் திருநெல்வேலி வந்தால், ஸ்ரீசெட்டி சித்தரை சந்திக்காமல் செல்ல மாட்டார். மேலும் தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் சித்தரைப் பற்றி புகழ்ந்து கூறுவார்.


நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!  சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.  இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்.
கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி நமக்குதெரிவித்தார். அவர் கூறியமகத்துவங்கள் இதோ :
- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.  & காஞ்சிபுரத்தில் சுரக ஈஸ்வர ஆலயம் 

புளியறை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோயிலில் தரிசனம்.குரு ஸ்தலம்.சிவபெருமான் சன்னதிக்கு நேர் எதிரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார்.சிவனுக்கு நேர் எதிரில் சன்னதி உள்ளதால் சிவனே தக்ஷிணாமூர்த்தியாக உள்ளார்.அம்பாளும் சுவாமியும் சுயம்புவாக எழுந்தருளி உள்ளனர்.ராகு கேது இணைந்து காணப்படும் சன்னதி உள்ளது.நவக்கிரக சன்னதி கிடையாது.பின்னால் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சன்னதி உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருமையான குரு ஸ்தலம்.நிம்மதியான மன நிறைவான தரிசனம்.

கற்பக மரம் .....`கேட்டதை எல்லாம் கொடுக்குமாம்…... கற்பக நாதர் சிவாலயம்
கற்பக நாதர் குளம் திருத்துறைபூண்டி திருவாரூர் மாவட்டம்
கற்பக மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் ... (think & ask.!!) இம்மரம் இந்திரனை அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது
தெய்வீக மரமான கற்பகத்தை காக்கும், கின்னரர்கள், கின்னரிகள், அரம்பையர்கள் மற்றும் தேவர்கள். இது போன்ற அமைப்பு உடைய சிவலிங்க திருமேனி உள்ள கோவில் இது எட்டு கிளைகளை உடைய கல்ப தரு மரம் போல எட்டு பட்டை உடைய சிவலிங்க திருமேனி வினாயகர் ஞான பழம் பெற்ற தலம் என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது தாங்கள் வேண்டுவன பெற நீங்களும் சுவாமியும் ஏகாந்தமாய் வழிபட சிறந்த தலம்  ... வேதாரண்யம் கற்பநாதர் குளம் இடும்பாவனம் முத்துபேட்டை ஆலயங்கள் ஒரு வழித்தடத்தில் உள்ளது
திருவாரூர் திருத்துறைபூண்டி வழி திருத்துறைபூண்டிலிருந்து 10 km இடும்பாவனம் கற்பக நாதர் குளம் திருகோவில்கள்
நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
தன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
நெஞ்சே! உன் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று கற்பக மரத்தடிக்குச் சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம், உண்டால் சாகும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.
கார்த்திகாசுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் “கற்பகநாதர்” என வழங்கப்படுகிறார்.
ராம பிரான் அகத்தியர் முனிவர்கள் வழிபட்ட தலம்
வந்து அருள் பெற்றவர்கள் அதிகம் தரிசனம் கிடைக்காதவர்களுக்கு மேற் சொன்ன அவ்வை பாடலை மீண்டும் படித்து கொள்ளவும்
sivapeedam whatsapp group 9443390589
கோவில் அர்ச்சகர் siva shanmugam gurukkal cell 9943852180
ஆறகழுர்  .  அஷ்ட பைரவர்கள்  கள்ளகுருச்சி - ஆத்தூர் (  சின்ன சேலம்  v - கூட்டு ரோடிலிருந்து 2 கீ.மீ தூளைவில்......

அகத்தியர்  விவரித்த துவாதசிதலம் - அகரம்அஞ்சேல் பெருமாள்

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால், அகரம் என்ற கிராமத்தை அடையலாம். தாமிரபரணியில், இந்த தசாவதார தீர்த்தக் கட்டத்தில் நீராடி, தங்களின் பத்து அவதாரங் களையும் வழிபடுவோருக்கு பித்ரு சாபம் முதற் கொண்டு சகலவிதமான சாபங்களில் இருந்தும் விமோசனம் அளிக்க வேண்டும்’’ என்று வேண்டி னாள் சந்திரமாலினி. ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று அருளிய பெருமாள், அவளுக்கும் வைகுந்தப் பேறு கிடைக்க வரம் தந்து மறைந்தார். அதன்படி, அதே மாசி துவாதசி திருநாளில் சந்திரமாலினி முக்தி பெற்றாள்.

மாசி மாதத்தின் வளர்பிறை துவாதசி திருநாளில், பிரம்மமுகூர்த்த வேளையில் நதியில் நீராடிவிட்டு வந்த சந்திர மாலினி ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்து, மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம்! வானில் சூரியகோடிப் பிரகாசத்துடன் ஓர் ஒளி தோன்ற, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங் களும் ஒன்றிணைந்த கோலத்தில் அவளுக்குக் காட்சி தந்தார் பகவான். மேலும் அவளிடம், ‘‘வேண்டும் வரம் என்ன?’’ என்றும் வினவினார்.

தாமிரபரணி நதி தீரத்தில், சந்திரமாலினி தசாவதார தரிசனம் பெற்ற இடம், ‘தசாவதார தீர்த்தக்கட்டம்’ என்ற பெயரில் விளங்குகிறது. மேலும், பிரம்மன் நீராடியதால் `பிரம்ம தீர்த்தம்’; சிவனார் எழுந்தருளிய தீர்த்தமாதலால் `சம்பு தீர்த்தம்’ ஆகிய பெயர்களும் இந்த தீர்த்தக் கட்டத்துக்கு உண்டு. இதுகுறித்த மகிமையை வேதவியாசர் அருளிய தாமிரபரணி மகாத்மியம் (60-வது அத்தியாயம்) அழகுற விளக்குகிறது என்கிறார் அகத்தியரும். & Please Note .SHRI HUMAN DASAN NOTE HILL NAME KANAGAGIRI MALAI.ELLUMATHUR.ERODE .அகத்தியர் ஞானம்
லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது.

சித்த மகா புருஷர்களில் பாம்பாட்டி யாரும் பதஞ்சலியாரும் அதிஷ்டாணம் கொண்ட பல இடங்களில் ஒண்றாண கி.பி.5-10 ம் காலத்திய மதுரை அருகே உள்ள சூரியகிரி மலைப்பயணம் .

உப்பிடமங்கலத்தில் உள்ள கிளிசேர் மொழிமங்கை அடியார்க்கு எளியர் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. 

இதேபோல் லிங்கத்தூரில் உள்ள காமாட்சியம்மன் உடனுறை கைலாயநாதர் கோவிலில் 4 கால பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மகாலிங்கம் செய்திருந்தார்.


குளித்தலை-வேலாயுதம்பாளையம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் 1,008 தீபம் ஏற்றி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குளித்தலை பகுதியை சேர்ந்த சிவனடியார்கள், பக்தர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோல் குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இதில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் சிவ பெருமான் பக்தி படங்கள் திரையிடப்பட்டது. இதே போல் வேலாயுதம் பாளையம் அருகே உள்ள நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில் அருகில் உள்ள பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில், மண்மங்கலம் மரகதவள்ளி அம்பிகை மணிகண்டேஸ்வரர் கோவில், நன்னியூர்புதூரில் உள்ள சிந்தாமணி ஈஸ்வரர் சிவாம்பிகை கோவில் ஆகிய கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.-- 

குழல்வாய்மொழி அம்பாள்-விக்கிரபாண்டீசுவரர் ஆலயம் சோழாபுரம்

கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் அக்னி வடிவாக அருள்கிறார். இவரை தரிசிப்பவர்களுக்கு சூரிய மண்டலத்தில் வசிக்கும் மகரிஷிகள், தங்கள் தவத்தின் சிறு பகுதியை அளித்து ஆசி தருவதாக ஐதிகம். இங்கள்ள முருகனுக்கு 108 வெற்றிலைமாலை சூட்டி வழிப்பட்டால் நிலம் தொடர்பான பிரச்னைகள் தீருகின்றன. இத்தலத்தில் சிவன் ஆனந்த நடனம் ஆடிய போது தேவகணங்கள் ஒலித்த இசையை ஏழு ஸ்வரங்களாக மாற்றியவள் இங்குள்ள கர்ணவிதாயினி சரஸ்வதி என்பது நம்பிக்கை.

விழுப்புரம் புதுச்சேரிக்கு இடையில் அமைந்துள்ள வளவனூர் தலத்தில் கலிவரதப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் எழுந்தருளியுள்ளார்கள். சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயில் மகாமண்டபத்தில் சுமார் இரண்டரை அடி சதுரமும் இரண்டடிகனமும் கொண்ட ஒரே கல்லில் மூன்றடுக்குத் தாமரை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே மொட்டுப் பகுதியில் ஒரே கல்லில் நான்கு மூலைகளிலும் நான்கு கிளிகள் தொங்கியவாறு, நெற்கதிரைக் கொத்தும் நிலையில் காணப்படுவதும், அவை சுழலும் தன்மை கொண்டதாக இருப்பதும் வித்தியாசமான அமைப்பு.

ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த்திரு தளம் பற்றி அறிய முடிந்தது. காஞ்சிபுரமஅருகே திருத்தணி செல்லும் பாதையில் என்ற கம்மாவார்ப்பாளையம் ஊரின் கடைசியில் படி நெல்லி எனும் திருத்தளமுள்ளது. இங்கு சிவபெருமான் தீண்டாதிருமேனி (சுயம்பு) ஆக உள்ளார்.அம்பாள்:-ஸ்ரீவடிவாம்பிகை உடனமர் அய்யன்:-சந்திரமௌலீஸ்வரர் எனும் நெல்லிஸ்வரர்
சிறப்பு:  அகத்தியர் லோபமுத்ரா  உள்ள கோயில்  தல புராணம்: பூமிக்கு  துளசி,நெல்லி,அகத்தி சிவன் அருளிய தலம்.  https://www.facebook.com/swaminathan.gopalan.96
சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர்.



காசியில் கால பைரவர், காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் சொர்ணா கர்ஷண பைரவர், சீர்காழியில் சட்டைநாதர், வாஞ்சியத்தில் யோக பைரவர் என்று பல பெயர்களைக் கொண்டு விளங்குகிறார் இவர். இவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது பைரவபுரம்! இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்வர். இங்கு சொர்ணகால பைரவர் கோவில் இருக்கிறது.


இந்த ஆலயத்தில் பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்; கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து, நான் முகனாக ஆக்கினார் பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவ புரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண்ணினராக தரிசனம் அளிக்கிறார் சொர்ணகால பைரவர்!

ஆலய வரலாறு


பழங்காலத்தில் தொண்டை மண்டலம், தொண்டகாருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பவுத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 3-ம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு பயின்றனர். ஹிமசீதன மன்னர் காலத்தில் அசுலங்கர் என்ற சமண அறிஞர், பவுத்தர்களுடன் வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார். பின்னர் இங்கு சமண கல்விக் கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது.



சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி.14-ம் நூற்றாண்டில்) வீர வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஒரு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன், தன் படைகள் நாசமடைவதைக் கண்டு வருந்தினார். அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி ‘நீ வருத்தப்பட வேண்டாம். நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துணையிருப்பேன்’ என்றார். அடுத்தநாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூருக்கு ‘அழிபடைத்தாங்கி’ எனப் பெயரிட்டான். வெற்றியை அருளிய கால பைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினான்.




இக்கோவிலின் மகிமையானது திருவண்ணாமலை மாவட்டம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தல புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.


அமைவிடம்



திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம், மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம். வெம்பாக்கத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

------------------------------------------------
சிவாம்சமான பைரவர் லிங்க மூர்த்தமாக தரிசனம் தரும் ஸ்ரீகாலபைரவர் கோயில் மேற்குத் தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் மிக ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது .
கிருஷ்ணகிரி நகரின் பழைய பேட்டையிலிருந்து குப்பம் செல்லும் சாலையில், சையத் பாஷா எனும் மலைக்கு வலப்புறமாக ஆஞ்சநேயர் மலைக்குச் செல்லும் பாதையில், சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் பைரவர் கோயிலை அடையலாம்.
கோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில் பெரிய பாறையைக் குடைந்து வடிக்கப்பட்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
கிழக்கு மற்றும் வடக்குப்புறங்களில் ஏரியும், மேற்கே ஆஞ்சநேயர் மலையும், பைரவர் மலையும் அமைந்திருக்க, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில், அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாலபைரவர்.
முற்காலத்தில் மேற்சொன்ன இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியாகவே பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்களாம். 17 வருடங்களுக்கு முன்புதான் ஆஞ்சநேயர் மலையை ஒட்டி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.
‘`சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சுயம்புவாகத் தோன்றியதாகவும் அந்தச் சுயம்பு லிங்கமே கால பைரவரின் அம்சமாக விளங்குவ தாகவும் வழிவழியாகச் சொல்லப் பட்டு வருகிறது. கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் போர் வீரர்கள் இந்தக் கோயிலில் போர்க்கருவிகளை வைத்து வழிபட்டதாகவும் செவிவழித் தகவல் ஒன்று இப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகில் ராஜேந்திர சோழர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நந்தீஸ்வரர் சிலை ஒன்றும் உள்ளது. நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவலிங்க மூர்த்தம் தெரிவதுபோல் அமைக் கப்பட்டிருப்பது விசேஷம்!” என்று சிலிர்ப்புடன் விவரித்தவரிடம், கோயிலின் சிறப்பு வழிபாடுகள் குறித்து கேட்டோம்.
‘`ஆத்தி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில், லிங்க வடிவில் காட்சி தரும் ஸ்ரீகாலபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
“காலபைரவர் கோயில்களில் இந்தக் கோயில் வித்தியாசமானது. பொதுவாக காலபைரவரை திகம்பரராக இருக்கும் கோலத்தில்தான் தரிசித்திருப்போம். ஆனால், இங்கே லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் நெற்றிப்பகுதியில் திரிசூலம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கருவறை வாயில் வழியே தரிசித்தால் பஞ்சலோக பைரவ மூர்த்தத்தையும் சிவபார்வதி யரையும்தான் தரிசிக்க முடியும். லிங்க வடிவிலான பைரவரை சுவரில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். இங்கே சிவபெருமான் மீசையுடன் காட்சி தருவது சிறப்பு. நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறு வதுடன் திங்கட்கிழமைகளிலும் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன’’ என்றார்.
பக்தர்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது. நீங்களும் ஒருமுறையேனும் லிங்க சொரூபமான காலபைரவரைத் தரிசித்து வாருங்கள்; அவரருளால் கவலைகள் இல்லாத வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.
சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் சென்னையில் இருந்து சுமார் 256 கி.மீ. தூரத்திலுள்ளது கிருஷ்ணகிரி. இவ்வூரில் `பழைய பேட்டை’ என்ற இடத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. விசேஷ நாள்களில் ஷேர் ஆட்டோக்கள் நிறைய வரும்.
.........................................

Name: அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் 
Temple Type: சிவன் கோயில்
Mulavar: தான்தோன்றீஸ்வரர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: இலுப்பைக்குடி தேவஸ்தானம், அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி- 630 202. அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.
Town: இலுப்பைக்குடி
District: சிவகங்கை [ Sivaganga ]-630 202.


சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் 

நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, 

தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் 

இருக்கிறது.இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் 

வரசித்தி விநாயகர்.நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.  இத்தலத்து 

பைரவர், "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் 
(தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் 
என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. 
சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம்
இருக்கிறது. இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.
இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இத்தலத்து பைரவர், "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது.
ஸ்வர்ணம் தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. 
சங்கு சக்கரம் பொறித்த சுயம்புலிங்கம்
வராஹீஸ்வரர் வந்தது எப்படி?
பிரளய காலத்தில் நீரில் மூழ்கிய பூமி தேவியை ஹிரண்யாக்ஷன் கடத்திக்கொண்டு ஆழ்கடல் நீருக்குள் சென்றுவிட்டான். பூமித் தாயாரைக் காப்பாற்றுவதற்காக ஸ்ரீமன் நாராயணன் வராஹ அவதாரம் எடுத்தார். தனது அகன்ற மூக்கில் உலக உருண்டையைத் தூக்கிக்கொண்டு நீரில் மேல் நோக்கி வராஹம் உந்தி எழுந்தது. பிடிமானம் இல்லாமல், பூமி உருண்டை வடிவம் தள்ளாட, தனது பற்களில் கோரைப் பற்கள் இரண்டை மட்டும் வெளிப்புறமாக நீட்டி வளர்த்தாராம் பெருமாள். அவற்றைப் பற்றுக்கோலாகக் கொண்டாள் தாயார் என்கிறது ஸ்ரீவராஹ புராணம்.
இந்த வராஹப் பெருமாள், பூமியை நீருக்கு மேல் நிலைநாட்டிய பின் தன் உருவைச் சிறியதாகக் குறைத்துக் கொண்டார். அவ்வுருவை வேடனாக வந்த ஈஸ்வரன், வேல் கொண்டு வீழ்த்தி அதன் கோரைப் பற்களை ஆபரணமாக அணிந்து கொண்டார் என்கிறது இத்திருத்தல புராணம், அதனால் இந்த லிங்கரூப சிவனுக்கு வராஹீஸ்வரன் என்பது திருநாமம்.
இந்த சுயம்புலிங்கத் திருமேனியில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளதை விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டு குறிப்பிட்டுச் சொல்கிறது. தமிழ்ப் பெயராக திருப்பன்றீஸ்வரர் எனத் திருநாமம் கொண்டுள்ளார் மூலவர்.
சரபேஸ்வரர் திருமேனியும் இக்கோயிலில் அமைந்துள்ளதால், இத்தலம் ராகு கேது தோஷ நிவிர்த்தி தலமாகக் கருதப்படுகிறது. மூலவர் வராஹீஸ்வரர், பித்ரு தோஷத்தை நீக்கி பக்தர்களுக்கு அருளுபவர் என்பது ஐதீகம்.

தாமல் எங்குள்ளது? 
தாமல் என்ற இந்த ஊர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 



 பவளவண்ணர் திருக்கோயில் , kanchipuram 
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் 
பொய்கைஆழ்வார் அவதரித்த குளம்..
குதிரை முக நந்தி!

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்குப் பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் - முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில்! இங்குள்ள கோயிலில் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி குதிரை முகத்துடன் இருப்பது தனி சிறப்பு. சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். பல திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி பின்பு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோயில் கட்டினான். வல்லாள மகராஜா இத்திருக்கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான்.

No comments:

Post a Comment