எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, August 30, 2018

முதல் மடம்!

மகா ஞானி மஸ்தான் சுவாமிகள்

பகவான் ரமணரின் பெயரில் உலகில் தோன்றிய முதல் மையம் “ரமணானந்த மடாலயம்.” வந்தவாசியை அடுத்த தேசூரில், 1914ல் இந்த மையத்தை தேசூரம்மாள் என்று அழைக்கப்படும் அகிலாண்டம்மாள் என்ற பெண் பக்தருடன் இணைந்து ஆரம்பித்தவர் மஸ்தான் சுவாமிகள். இவர் பிறப்பால் ஓர் இஸ்லாமியர். இளம் வயதிலேயே ஆத்மானுபூதி பெற்றவர். பகவான் ரமணரின் அன்புக்குப் பாத்திரமானவர். பகவானின் பூரண அருளைப் பெற்றவர். பகவானுடனே பல காலம் விருபாக்ஷி குகையில் தங்கியிருந்தவர். அடிக்கடி தனது ஊரான தேசூருக்குச் சென்று பகவானுக்கும் பக்தர்களுக்குமான உணவுப் பொருட்களை தலைமேல் சுமந்து வருவார். கீழே பிற பக்தர்களுடன் சென்று பிக்ஷை எடுத்து வந்து ரமணருக்கு அளிப்பார். தன் கையாலேயே ராட்டையில் நூல் நூற்று பக்தர்களுக்கு ஆடை நெய்து வந்து தருவார். பகவான் ரமணர், குற்றவேல் குஞ்சு ஸ்வாமிகள் என பலருக்கு இவ்வாறு அவர் ஆடை அளித்திருக்கிறார்.
மஸ்தான் சுவாமிகளின் இறுதி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் ஆச்சரியமானது.
படுத்த படுக்கையாக இருந்தார் மஸ்தான் சுவாமிகள். தேசூரம்மாள் உடனிருந்து அவருக்கு உதவிகள் செய்து வந்தார். படுக்கையில் படுத்திருந்தவாறே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் மஸ்தான் சுவாமிகள். திடீரென்று அவர் உரத்த குரலில், “ஆஹா.. ஆஹா.. அதோ நந்தி பகவான் வானிலிருந்து கீழே இறங்கி வருகின்றார். இதோ... என் உடலை அன்போடு தடவிக் கொடுக்கிறார். அடடா.. அடடா... சிவ கணங்கள் ஆடிக் கொண்டு இங்கே வருகின்றனவே. அவர்களுடைய உலகிற்கு என்னை அழைக்கின்றார்கள். நான் செல்லப் போகிறேன்” என்றார்.
தேசூரம்மாள் திடுக்கிட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மஸ்தான் சுவாமிகள் ஜூர வேகத்தில் ஏதோ பிதற்றுவதாக நினைத்தார் தேசூரம்மாள்.
மஸ்தான் சுவாமிகள் திடீரென்று எழுந்து நின்றார். அவர் ஒரு வாரமாகப் படுத்த படுக்கையாக இருந்தவர். அவர் கண்கள் கண்ணீர் சொரிந்தன. இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பினார். தனக்கு முன்னால் யாரோ நின்று கொண்டு தன்னைக் கூப்பிடுவது போலத் தலையை அசைத்தார். பின்னர் உணர்ச்சி மேலிட்டவராய் உரத்த குரலில், “அம்மா... அம்மா... அபீதகுசாம்பாளே... என்னை அழைத்துச் செல்ல நீயே வந்தாயோ” என்றார். கை கூப்பி வணங்கினார். அடுத்த கணம் உயிரற்ற உடலாய்க் கீழே விழுந்தார்.
அன்று நவம்பர் 8, 1934 தீபாவளித் திருநாள். புனித நாளான அன்று தான் தன் உடலை உகுத்தார் மஸ்தான் சுவாமிகள். அவர் காலமான செய்தி அறிந்ததும் திருமந்திர முறைப்படி அவரைச் சமாதி வைப்பதற்கான முறைகளை குற்றவேல் குஞ்சு சுவாமிகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்பொருட்களைத் தன் கையாலேயே அதற்கான தனித் தனிப் பைகளிலிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் பகவான் ரமணர். பகவான் அவ்வாறு தன் கையாலேயே சமாதிக்கான கிரியைகளைச் செய்தது அன்னை அழகம்மை, மஸ்தான் சுவாமிகள், பசு லட்சுமி ஆகிய மூவருக்கு மட்டுமே. இதிலிருந்தே மஸ்தான் சுவாமிகளின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
பின்னர் ஒரு சமயம் பகவான் ரமணரைச் சந்தித்த தேசூரம்மாள் மஸ்தான் சுவாமிகளின் இறுதிக் கணத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்ல, உடனே பகவான், “ஆஹா... அகில உலக அன்னையான அபீதகுசாம்பாளே மஸ்தானை அழைத்துச் செல்லத் தானே வந்திருக்கிறாளே. அவர் கண்டது, சொன்னது அனைத்தும் சிவலோகத்தோடு ஒத்துப் போகின்றது” என்றார்.
“அபீதகுசாம்பாளும் அருணாசலரும் ‘மோட்சம் தருகிறேன் வா, வா’ என்று அழைக்கும் ஒரே இடம் பூமியில் இதுதான்” என்பது சேஷாத்ரி சுவாமிகளின் வாக்கு.. அந்த வாக்கு மஸ்தான் சுவாமிகளின் விஷயத்தில் உண்மையாயிற்று. அகில உலக அன்னையான உண்ணாமுலை அம்மனே நேரில் வந்து மோட்சம் அளிப்பது என்றால் அது எவ்வளவு உயரிய நிலை! மஸ்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்தான் இல்லையா!
மஸ்தான் சுவாமிகளின் சமாதி வந்தவாசியை அடுத்த “மடம்” கிராமத்தில் அமைந்துள்ளது. ரமணர் தன் கையால் ஒரு பிடி விபூதியை அள்ளிக் கொடுத்து, இதை மேலே போடுங்கள் என்று சொல்லி அனுப்பினாராம். அந்த ஊர் சிவன் கோயிலுக்காக செய்த தேரில் மஸ்தான் ஸ்வாமியின் பூத உடலை வைத்து ஊர்வ வந்தார்களாம். 
 A copied post from : https://www.facebook.com/arvindswam

ஓர் அரிய படம்

பகவானின் அருகில் நிற்பவர் கந்தன். இவர் தான் கந்தாச்ரமத்தை தனி ஒருவராக அமைத்தவர். அவருக்கு அருகில் ருத்ராட்ச மாலை உடன் நிற்பவர் “பெருமாள் சாமி” ரமணரை கோர்ட்டுக்கு இழுத்த, அவர் மீதும் ஆச்ரமம் மீதும் வழக்கு போட்ட, ரமணாச்ரமம் என்ற பெயரில் தானும் ஒரு போட்டி ஆச்ரமம் ஆரம்பித்து நடத்தியவர். சிவப்பிரகாசம் பிள்ளை, பகவானின் தாயார் அழகம்மை, மஸ்தான் சாமிகள் என எல்லாரும் இருக்கிறார்கள். கைகட்டி நிற்பவர் குஞ்சு சுவாமிகள் ஆக இருக்கலாம். கால் மீது கால் போட்டுக் கொண்டிருப்பவர் தான் “தான் தான் ரமணரின் குரு” என்று பிறரிடம் சொல்லிக் கொண்டிருந்த சாமியார் என நான் கருதுகிறேன். மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. ரமண பெரியபுராணம் நூலில் விவரங்கள் கிடைக்கக் கூடும்.


ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய! 

No comments:

Post a Comment