புதல்வர்கள் - மாந்தி, குளிகன்
தேவதை - யமன்
அதி தேவதை - பிரஜாபதி, சாஸ்த்தா ஐயனார்
பாலினம் - திருநங்கை
உருவம் - குள்ளம்
ருது - சிசு ருது
திசை - மேற்கு
ஆசன வடிவம் - வில்
கொடி - காகம்
நிறம் - கருப்பு
குணம் - தாமஸம்
வாகனம் - கழுகு, காக்கை, எருமை
மலர் - கருங்குவலை
மரம் - வன்னி
உலோகம் - இரும்பு
இரத்தனம் - நீலக்கல்
நாடி - வாதம்
சுவை - கசப்பு
பஞ்சபூத தத்துவம் - ஆகாயம்
உடல் உறுப்பு - தொடை, கால்கள்
தசா ஆண்டு - 19 ஆண்டுகள்
சனி நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்தரட்டாதி
பூச நட்சத்திர அதிதேவதை - குரு என்ற பிரகஸ்பதி
அனுஷ நட்சத்திர அதிதேவதை - லஷ்மி

உத்தரட்டாதி நட்சத்திர அதிதேவதை - காமதேனு
சனியின் ஆட்சி வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
மூலத்திரி கோண வீடு - கும்பம்
நீச வீடு - மேஷம்
சனியின் பார்வை - 3, 7, 10
சனியின் நடப்பு கிரகங்கள் - புதன், சுக்ரன்
சமக் கிரகங்கள் - குரு, ராகு, கேது
பகைக் கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அனுகூலமான கிழமை - சனி
அனுகூலமன திதி - அமாவாசை
ஆதிபத்ய வலிமை - இரவு நேரம்
பகல் ராசி - கும்பம்
இரவு ராசி - மகரம்
காரகன் - ஆயுள், தொழில், நோய்
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை . அதே தேதி .(Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல.
சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல. ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :

சித்திரை-6, 15, (April 19, 28)
வைகாசி- 7, 16, 17, (May 21, 30, 31)
ஆனி- 1, 6, ( June 15, 20)
ஆடி-2, 10, 20, (July 18, 26, August 5)
ஆவணி-2, 9, 28, (August 18, 25, September -13.)
புரட்டாசி- 16, 29, (October-2, 15)
ஐப்பசி-6, 20, (October-23, November-6)
கார்த்திகை-1, 10, 17, (November-17,26, December-3)
மார்கழி-6, 9, 11, (December-21,24,26)
தை-1, 2, 3, 11, 17, (January 2018- 14,15,16,24, 30)
மாசி-15, 16, 17, (February 2018- 27, 28, March 2018-1)
பங்குனி-6, 15, 19. (March 2018- 20, 29, April 2018-2.)
இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மாறவே மாறாது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வெள்ள பள்ளம் கிராமம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர். ஸ்ரீ காமாட்சி அம்மன் சிவாலயம் 8 பட்டையுடன் கூடிய சிவலிங்க திருமேனி அடைப்பாறு வடக்கிலும் மற்றும் அரிசந்திரா நதி தெற்கிலும் கிழக்கில் வங்க கடலும் மேற்கில் அளங்களும் சூழ நடுவே அமைந்துள்ளது.! தல மரம் இலந்தை மரம் / தீர்த்தம் வங்க கடல் .!
No comments:
Post a Comment