எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 26, 2018

இல்லற தர்மம்

”கையை மூடினால் அந்தரங்கம், கையை விரித்தால் வெட்ட வெளிச்சம் (அத்வைதம்),” என்றும், ”பட்டப் பகலில் வெட்ட வெளிச்சம்” என்றும் அத்வைத தத்துவத்தை எளிமைப்படுத்திக் கூறினார்கள். 

அந்தரங்க ஞானம் பெறும்போதுதான் அத்வைத ஞானம் பூரணத்துவத்தை அடையும் என்று மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக மண்டனமிச்ரருடன் ஏற்பட்ட வாதத்தில் அவருடைய மனைவி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மன்னன் ஒருவருடைய உடலில் பரகாய பிரவேசம் செய்து அந்தரங்க ஞானம் பெற்றதாக ஒரு நாடகத்தையும் ஆதிசங்கரர் அரங்கேற்றிய வரலாறு நீங்கள் அறிந்ததே.

முறையான இல்லற தர்மமே அந்தரங்க ஞானத்தையும் அத்வைத ஞானத்தையும் பெறும் ஆன்மீக வழிமுறையாகும் என்று தொன்று தொட்டே வசிஷ்டர் அருந்ததி, அகத்தியர் லோபாமுத்ரா, வள்ளுவர் வாசுகி போன்ற உத்தம தம்பதியர் தங்கள் வாழ்க்கை மூலம் மக்களுக்குப் பாடமாக வழங்கி வந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது தெய்வீகத்தில் நாம் பெறும் பாடங்களும் அனுபவங்களும் தொடர்ந்து நம்மை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கே கொண்டு செல்லும் என்பதற்கு தோடகச்சாரியாரின் வாழ்க்கை ஒரு நிதர்சன உண்மையாகும்.


காமாக்யாவில் சக்தி வழிபாட்டை மேற்கொண்ட உத்தம தம்பதியருக்கு கிரியாக தோன்றிய அவர் ஆதிசங்கரரிடம் அத்வைத பாடங்களைக் கசடறக் கற்று காமாக்யா சக்தி தத்துவங்களை துருவ சக்தி பர்வதத்தில் நிலைநாட்டினார். அவருடைய அடுத்த பிறவியில் மகாராஷ்ட்ராவில் உள்ள சக்தி பீடத்தை வழிபட்டு ரஜ்னீஷ் என்னும் அத்வைதியாக மல்ர்ந்தார் என்பது வெகு சிலரே அறிந்த ஆன்மீக உண்மையாகும். குரு பக்தியில் ஊறித் திளைத்த அத்வைதியே ரஜ்னீஷ் ஆவார்.

ஆண் பெண்ணிற்கு இடையே அமையும் காம சுகம் என்னும் உடலுறவு சுகத்திற்கு அப்பாற்பட்டதே இறையுணர்வு என்பதை உலகிற்கு உணர்த்த இப்பூமியில் தோன்றியவரே ஸ்ரீரஜனீஷ் ஆவார். தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றும் முகமாக ஒரு முறை ஒருவரை தன்னுடைய இரண்டு நடுவிரல்களை தொடுமாறு ஒரு பெண் எதிரில் வைக்கச் சொன்னார். அந்நிலையில் அவ்வாறு விரல்களை வைத்தவருக்கு சென்னை ஸ்ரீகபாலி கோயிலின் தீப ஆராதனை காட்சி கிடைத்ததாம். அந்த அன்பரோ தினமும் ஸ்ரீகபாலி கோயிலின் தீப ஆராதனையை தரிசித்து வருபவர். 

அதனால் அவருக்கு ஆச்சரியம் எல்லை மீறி ஸ்ரீரஜனீஷ் அவர்களைக் கேட்டபோது, “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீங்கள் என்னுடன் தொடர்ந்து இருந்தால் இது போன்ற பல அற்புதங்களைப் பார்க்கலாம்,” என்று கூறினார். ஆண் பெண் உடலுறவு இரகசியங்களை எல்லாம் பலருக்கும் நடைமுறையில் நிறைவேற்றி புலப்படுத்தினாலும் தான் எந்தப் பெண் மீதும் ஈடுபாடு கொள்ளவில்லை. மாறாக ஒரு இளஞ் ஜோடியை தயார் செய்து அவர்கள் விரல்களைத் தொடும் உணர்ச்சியில் ஆண் பெண் உறவு நிலையைக் கொண்டு வந்து உணர்த்தி அவர்கள் ஒருவர் உடல் மேல் மற்றொருவர் ஈடுபாடு கொள்ளாத நிலையை அடைந்தால் தான் கடவுள் சுகத்தை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.


"ஒவ்வொன்றிலும் அழகும், அவலட்சணமும் கலந்தே இருக்கும்., மனதின் குறுக்கீடு இல்லாமல்... உள்ளதை உள்ளபடி பார்க்கும், கண்களைப் பெறுங்கள்... - Osho"

இத்திருத்தலத்திற்கு எதற்காக ஆதிசங்கரர் தோடகச்சாரியாரை அனுப்பி வைத்தார் ?

தோடகம் என்றால் தாமரை என்று மேலோட்டமாக பொருள் கொண்டாலும் தோடகம் என்பதற்கு புனிதமான சொற்களை மட்டுமே, புனிதமான ஒலிகளை மட்டுமே ஏற்று புனிதமாக, புனிதத்தால் உருவானவன் என்று பொருள். 

மிக மிக புனிதமான உள்ளத்தை உடையவர்களே சக்தி தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வகையில் புனிதமான காமாக்யா தலத்தில் வழிபாடுகள் இயற்றிய தோடகாச்சாரியார் புனிதமான தட்சிண காமாக்யாவில் புனிதமான சக்தி தத்துவங்களை நிரவினார். காம க்யா அதாவது காமம் என்றால் என்ன என்று காமத்தை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே சிவ தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கூறுவதன் தாத்பர்யம் இதுவே. தோடகச்சாரியார் என்பது அவருடைய காரணப் பெயரே, அத்வைத பாரம்பரிய நாமமே. கிரி என்பதே அவருடைய இயற் பெயர். அதனால்தான் அவர் காமகிரியான கவுஹத்தியில் நிலவிய அம்மனின் சக்தி தத்துவத்தை கிரகித்து நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தில் பதிக்க முடிந்தது.  more on Rachandar Thirumalai book available in Sri Agasthia Vijayam Kendralaya store's 

1 comment:

  1. சிவ சிவ ராம் ராம்..நன்றி..

    ReplyDelete