எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 26, 2018

உத்தமர் சங்கம் வரமாய்த் தருக!

நல்லதையே பேசுங்கள்...! விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.
இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது. “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.
எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.
அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.
இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.
வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார் இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.
உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா? நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது. என்றார் ஆதிசேஷன்.
சிவபெருமான் கோயில் கொண்ட 12 சிவ பீடங்கள்.
* தத்புருஷ பீடம்- ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வரர் கோவில், திருநாங்கூர்.
* அகோரபீடம்- அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வரர் கோவில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.
* வாமதேவ பீடம் - திருயோகீஸ்வரம் யோகாம்பாள்சமேத யோகநாதர் ஆலயம், கீழ் சட்டநாதபுரம்
* சத்யோஜாத பீடம்- சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், காத்திருப்பு.
* சோம பீடம்- அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருநாங்கூர்.
* சார்வ பீடம்- நாகநாதர் ஆலயம், அல்லிவிளாகம் செம்பதனிருப்பு.
* மகாதேவ பீடம்- பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் ஆலயம், திருநாங்கூர்.
* பீமபீடம்- கயிலாசநாத சுவாமி ஆலயம், திருநாங்கூர்.
* பவபீடம்- சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில், திருநாங்கூர்.
* பிராண பீடம்- அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வரர் கோவில், அத்தீஸ்வரம் பெருந்தோட்டம்.
* ருத்ரபீடம்- சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம், அன்னப்பன் பேட்டை.
* பாசுபத பீடம்- நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோவில், மேல்நாங்கூர்.

அனைத்து சௌபாக்கியங்களையும் பெற ஸ்லோகம் :
ஸமஸ்த ஸம்பத் ஸுகதாம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஸ்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாஸ்ரியம் !
- ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயம்.
கொல்லுமாங்குடியில் இருந்து திருநீலக்குடி சாலையில் 4வது கிமி ல் உள்ள .கிளியனூரில் இருந்து வடக்கில் செல்லும் சாலையில் ஐந்து கிமி தூரம் சென்றால் கங்காதரபுரம் அடையலாம்.கிழக்கு நோக்கிய அழகிய கோயில் முழுவதும் கருநிற சலவைக்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில். திருநீலக்குடி - கொல்லுமாங்குடிச் சாலையில் எஸ்.புதூர் தாண்டி நல்லாவூர் பேருந்து நிறுத்தம் என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில் வந்து, பாலம் கடந்து நடை தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம்.
இறைவன்- பசுபதீஸ்வரர். இறைவிசௌந்தர நாயகி. தீர்த்தம் -ஈசான்ய தீர்த்தம்.
திருமுறைகளில் திருஅடைவு - திருத்தாண்டகத்தில் நல்லாற்றூர் என வழங்கப்படும் ஊர் இதுவேயாகும். கொள்ளிடத்தை தாண்டி மயிலாடுதுறை வழியாக கடுவங்குடி, அகர கொத்தங்குடி, கொடியலூர், ஆலத்தூர், கிள்ளிக்குடி, சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, சென்றுவிட்டு துளார் வழியாக நக்கம்பாடி கோடிமங்கலம், பழியஞ்சிய நல்லூர் .....  எஸ்.புதூரில் இருந்து கொல்லுமாங்குடி சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது நக்கம்பாடி. இவ்வூரின் ஒரு பகுதி ஸ்ரீகண்டபுரம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. கொல்லுமாங்குடி- திருநீலக்குடி சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் போழக்குடி நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து ஒரு கிமி தூரம் தென்புறம் உள்ள சாலையில் சென்றால் போழக்குடி அடையலாம். more  temple facts in https://www.facebook.com/vijay.kadambur  https://kadamburtemple.blogspot.com/

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் வழியில் பரமந்தூர் எனும் ஊரில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. சுமார் 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.இக் கோவிலில் சிறப்பு ஸ்ரீராமானுஜர் சிலை,லெட்சுமி நரசிம்மர் சிலை,அருள்மிகு ஆஞ்சநேயர் சிலை,பரிமளவள்ளி தாயார் கோவில் உள் பிரகாத்தின் மேற்கு பக்கம்அமைந்துள்ளது.இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை சிறப்பு பெற்றதாக உள்ளது.ஆம் தலைக்கு மேல் வால் நீண்டும் முகத்தில் கிழக்கில் இருந்து பார்த்தால் கோபமாகவும் அதே ஆஞ்சநேயரை மேற்கிலிருந்து பார்த்தால் சிரித்த முகத்துடனும் காட்சி அளிக்கின்றார். அனைவரும் தரிசிக்க வேண்டிய தலமாக காட்சியளிக்கின்றது... ( https://www.facebook.com/prakash.narayanan.98622 )

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில். வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சி மண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப் பெருமான் ஆலயத்திற்கு மேற்கு திசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம். இக்கிராமத்தில் பல்லவர் காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள். திண்டிவனம் கூட்டேரிப்பட்டு அருகில் ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் என்ற நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலம் உள்ளது. 15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோயில் இக்கோயிலில் எமனுக்கு தோஷம் நீக்கிய சிவன் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார் எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார்.
திருசெந்தூர் ஆலயம் கட்டியர்களான ஐவரின் ஜீவ சமாதிகள் இருக்குமிடம்?
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்களுள்
1. மௌன சுவாமி
2. காசி சுவாமி
3. ஆறுமுக சுவாமி
வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி
4. ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி
திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்
5. ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி. 
எனும் இந்த ஐந்து சித்தர்கள் தான்...
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இந்த ஐவரின் ஜீவ சமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...
தரிசனம் செய்ய செல்லும் வழி :-
முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.
நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.
முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. காந்தீச்வரம் கோவில் அர்ச்சகரிடம் கேட்டுப்பாருங்கள். முடிந்தால் அங்கே உள்ளவர்கள் ஜீவசமாதி இருக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார்கள். தரிசித்துவிட்டு வாருங்கள். copied from ( https://www.facebook.com/aagamamm )

Rama thevar siddhar jeva samathi ,Aalgar kovil , Madurai




ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் தவம் செய்த இடம் - ஸ்ரீ கைலாசநாதர் கோவில் வீரசிகாமணி திருநெல்வேலி மாவட்டம்
 These temples Looking for devotees contribution தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டம் சொக்கானாவூர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயம்! Rajamadam's Raja kaasi infoz are in books of Sri Agasthia Vijayam..
திண்டிவனத்திற்கு அருகே இருக்கிறது கரியமலை எனும் மலைப்பகுதி. சுற்றிலும் காடுகளால் சூழப்பட்ட இந்த மலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளாக சித்தர்கள் வழிபட்டு வந்த வனதுர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் இச்சிறிய கோவிலில் ஞாயிற்று கிழமை ராகு கால நேரத்தில் செய்யப்படும் பூஜை மிகவும் விசேஷமானது. அப்போது இங்கு வந்து இந்த வனதுர்கையை வழிபடுவதால் ஒருவருக்கு பல நன்மைகள் ஏற்படும் என கூறுகிறார்கள்.

வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில், சுமார் 1,500 அடி உயர தவளகிரி மலை உள்ளது. இந்த மலை மீது தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment