முறையான இல்லற தர்மமே அந்தரங்க ஞானத்தையும் அத்வைத ஞானத்தையும் பெறும் ஆன்மீக வழிமுறையாகும் என்று தொன்று தொட்டே வசிஷ்டர் அருந்ததி, அகத்தியர் லோபாமுத்ரா, வள்ளுவர் வாசுகி போன்ற உத்தம தம்பதியர் தங்கள் வாழ்க்கை மூலம் மக்களுக்குப் பாடமாக வழங்கி வந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது தெய்வீகத்தில் நாம் பெறும் பாடங்களும் அனுபவங்களும் தொடர்ந்து நம்மை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கே கொண்டு செல்லும் என்பதற்கு தோடகச்சாரியாரின் வாழ்க்கை ஒரு நிதர்சன உண்மையாகும்.
காமாக்யாவில் சக்தி வழிபாட்டை மேற்கொண்ட உத்தம தம்பதியருக்கு கிரியாக தோன்றிய அவர் ஆதிசங்கரரிடம் அத்வைத பாடங்களைக் கசடறக் கற்று காமாக்யா சக்தி தத்துவங்களை துருவ சக்தி பர்வதத்தில் நிலைநாட்டினார். அவருடைய அடுத்த பிறவியில் மகாராஷ்ட்ராவில் உள்ள சக்தி பீடத்தை வழிபட்டு ரஜ்னீஷ் என்னும் அத்வைதியாக மல்ர்ந்தார் என்பது வெகு சிலரே அறிந்த ஆன்மீக உண்மையாகும். குரு பக்தியில் ஊறித் திளைத்த அத்வைதியே ரஜ்னீஷ் ஆவார்.

அதனால் அவருக்கு ஆச்சரியம் எல்லை மீறி ஸ்ரீரஜனீஷ் அவர்களைக் கேட்டபோது, “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீங்கள் என்னுடன் தொடர்ந்து இருந்தால் இது போன்ற பல அற்புதங்களைப் பார்க்கலாம்,” என்று கூறினார். ஆண் பெண் உடலுறவு இரகசியங்களை எல்லாம் பலருக்கும் நடைமுறையில் நிறைவேற்றி புலப்படுத்தினாலும் தான் எந்தப் பெண் மீதும் ஈடுபாடு கொள்ளவில்லை. மாறாக ஒரு இளஞ் ஜோடியை தயார் செய்து அவர்கள் விரல்களைத் தொடும் உணர்ச்சியில் ஆண் பெண் உறவு நிலையைக் கொண்டு வந்து உணர்த்தி அவர்கள் ஒருவர் உடல் மேல் மற்றொருவர் ஈடுபாடு கொள்ளாத நிலையை அடைந்தால் தான் கடவுள் சுகத்தை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

சிவ சிவ ராம் ராம்..நன்றி..
ReplyDelete