எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, September 22, 2018

அகஸ்த்தீஸ்வரர்

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,  ஆசிகளும், வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால், நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்; நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று; இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்; அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன; இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும், கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன; இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;


1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை

2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும், அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)

3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர் ,பல்லாவரம் அருகில், சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)

4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை

5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)

6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகிலாண்டபுரம், காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம், சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் ,அகத்தியான்பள்ளி, வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில், ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்.

10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில், ஏம்பல், இரும்பாநாடு அருகில், ஆவுடையார்கோவில்,  புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில் (புதுக்கோட்டை) கேட்டை நட்சத்திர ஸ்தலம்.!

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில், சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிப்பாக்கம் (வில்லிவாக்கம் அல்ல), சென்னை (வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்; அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்; அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது; வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்; அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெமிலிச்சேரி, சென்னை (வழி :குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மேலக்காட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்; (திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)

26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில், நஞ்சுண்டாபுரம் , தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பழைய பாளையம், துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்: செவல்பட்டி, மேலூர்) திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது; 1.9.2018

32. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பரதூர் (முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது) சேத்தியாத்தோப்பு ;கடலூர் மாவட்டம்.

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பென்னலூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வன்னிவேடு,  வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில், பெருங்குடி. திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் ,பாதூர், உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மணப்பாறை (ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்), திருச்சி மாவட்டம்.

38.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் அருகில், சென்னை;

108. அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம், குமரி மாவட்டம்.

"புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்ட ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திய பெருமானின் திருமணகோல படத்தின் சிறப்புக்கள்!"
காசி மகராஜாவின் பெண்ணான லோபமுத்ராவை அகத்தியர் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு வந்த பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சியை தந்து அருளினார். *புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்ட ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திய பெருமானின் திருமணகோல படத்தின் சிறப்புக்கள்!

காசி மகராஜாவின் பெண்ணான லோபமுத்ராவை அகத்தியர் 
 திருமணம்  செய்து கொண்டு பொதிகைக்கு வந்த பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சியை தந்து அருளினார்.

அந்த திருமணக் காட்சியின் தரிசனம் நீங்கள் இங்கு காணும் படம்., மிக அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு 'தேவதாரு மரம்'.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் 'திருத்தோடகன்' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டதாகும்.
3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் 'திரிபூரணம்' என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டதாகும்.
4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும்.
இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான 'பர்வதினி' என்பவர்.


5. லோபமுத்ரா தேவியானவர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி ஆவார்.
6. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி 'லலிதா திரிசதை' யில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் தான் ஸ்ரீ லோபமுத்ரா அன்னைக்கு சிவப்பு நிற பட்டு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
7.ஸ்ரீலோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் 'லோபா' என்று பெயர் வந்தது.

'முத்திரா' என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.

8. ஸ்ரீ லோபமுத்ரா அன்னையின் காலில் அணிந்திருக்கும் மெட்டியானது 'சரளி' எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும்.
இதை லோபமுத்ரா அன்னைக்கு கொடுத்ததே அகத்தியர் தான்.
9.ஸ்ரீலோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான 'சேதத்தரணி' என்பவராவார்.
10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
11.ஸ்ரீலோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது.
ஸ்ரீலோபமுத்ரா அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது 'ஹாதி வித்தை'.
அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான்.
அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் 'மயூஷினி'.
அவரே கிளி உருவத்தில் லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கிறார்.
12. ஸ்ரீலோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது 'அமிர்தக்கலசம்'. இது பரமேஸ்வரனால் ஸ்ரீலோபமுத்ரா அன்னைக்கு கொடுக்கப்பட்டது.
13. ஸ்ரீலோபமுத்ரா அன்னையின் கூந்தலில் 'பொற்காந்தல்' எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் 'பூமண் மேடு' என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது.
இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது

இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சி படத்தை பூர்வஜென்ம பலன்கள் உள்ளவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
இந்த அபூர்வமான ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திய பெருமானின் திருமணக் காட்சி படத்தை பார்த்து வேண்டும் தம்பதியர்களுக்கு ஸ்ரீலோபமுத்ரா அன்னை மற்றும் அகத்திய பெருமானின் பரிபூரண அருளும் கணவன் மனைவியிடையே மிகுந்த மன ஒற்றுமையும் ஏற்படும்.

 ஓஃம் ஸ்ரீ முகூர்த்த பிள்ளையார் துனண
நமசிவாய சிவாயநம  சிவயசிவ  சிவசிவ
ஸ்ரீ சுவந்தி குந்தளாம்பிகை சமேத ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வரர் துனண
           ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா சமேத சர்வஸ்ரீ அகஸ்தியரின்             கல்யாண சுபமுகூர்த்தப் பத்திரிகை

அன்புடையீர் ,

  நிகழும் மங்களகரமான மன்மத தமிழ் வருடம் , தை மாதம் , 3ம் தேதி (17.1.2016) ஞாயிற்றுக்கிழமை , அஷ்டமி திதி , அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் , காலை சுபமங்கள் மூர்த்திகள் நிர்ணயிக்கும் சுபவார , சுபதிதி , சுபமுகூர்த்த , சுபயோக , சுபகரண , சுபயோகாதி யோக , சுபலக்ன நேரத்தில் , காலபைரவ லோகத்தில் கணித்துக் கனிந்து அருளப் பெறும் அமிர்த கடிகை நேரத்தில் மும்மூர்த்திகள் , சர்வ தேவாதிதேவ தெய்வ மூர்த்திகளின் ஆசியோடு சர்வ மங்கள சர்வ முகூர்த்த காலசக்திகள் பரிணமித்திட , 

   ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா சமேத சர்வஸ்ரீ அகஸ்தியரின்
               திருக்கல்யாண வைபோகம்  

குருவருள் சிறக்க சர்வத்திருவருள் பொழியும் 
திவ்யாமிர்த வைபவமாய்ப் புட்பிக்கின்றது..!

கவேர ராஜனின் சத் புத்ரியாய் அவதரித்த  ஸ்வயம் பிரகாசினி ஸ்ர்வ புண்ய தீர்த்த  ரூபிணி காவேரி , லோபாமுத்ரை எனும்  பதிவரதாத்துவத்தின் பவித்திரம் *ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதாவிற்கும்* 
   💗💗💗
ஆதிசிவனின் சிவாக்கினியில் உதித்த சித்தர்களின் தலைமைப் பீடம் 
பொதியமுனி ,கும்பமுனி (எனும்) *சிவத்தின் சிகரம்*
 சர்வஸ்ரீ அகஸ்தியருக்கும்

அண்ட சராசரத்தில் உள்ள அத்தனை கோடிப் பிரபஞ்சங்கள் , பூமிகள் , லோகங்கள் , நட்சத்திர மண்டலங்கள் , கிரகங்கள் , போன்றவற்றில் உறையும் அனைத்துக் கோடி சித்தர்கள், சத்குருமார்கள் , மஹரிஷிகள் , சப்த ரிஷிகள், முமூசஷூக்கள் , பரமஹம்ஸ்ர்கள் , மஹான்கள் ,ஜீவன் முக்தர்கள் ,முனிவர்கள் , ஞானியர் , யோகியர் ,  நால்வர்கள் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் , மோட்சபதிகள் , பூஜ்யஸ்ரீக்கள் , வசு ,ருத்ர ,ஆதித்ய, அர்யமா , தரணிபந்து போன்ற பித்ரு தேவர்கள் , பித்ரு பத்நீயர்கள் ,ரிஷிபத்னிக்கள் , கணங்கள் , கணபத்நீயர்கள் , முப்பத்துமுக்கோடி தேவர்கள் ,கந்தர்வர்கள் ,கிம்புருடர்கள் ,கின்னரர்கள் , சாரணர்கள் , அனனவரது அருட்கடாச்சமும் ஒருங்கே பொழியும் திருகல்யாண வைபோகம்.

தில்லையம்பலம் நடராஜரின் நடன சிருஷ்டி அனுபூதியும்  ,  ஆதிகோலோக ஸ்ரீமஹாகிருஷ்ணரின் ராச நாட்டியத்தின் எல்லையற்ற ஆனந்தமும் ,அருட்பரிணமிக்கும் சொல்லார்ந்த நற்சற்குரு சிவசக்தி ஐக்யஸ்வரூப ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபமாதா சர்வஸ்ரீஅகஸ்தியரின் திருக்கல்யாண வைபவத்தை கவினுற கண்டு ஸ்ரீலோபாமாதாஅகஸ்தியரின்
அருட் பிரசாதத்திற்குப் பாத்திரர்களாகும்படி பணிவன்புடன் வேண்டுகிறோம்..,


......   இப்படிக்கு அகத்தியெம்பிரானின் திருவடி தூசியை அப்பியாசிக்கும் அகத்திய அடிமைகள்...

அகமர்ஷணம்
ஜெய் திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை சற்குரு மஹாதேவா சரணம்...!


ஜெய் திருவேங்கடத்துறை கும்பமுனிப் பரம்பரை சற்குரு  நாராயணா சரணம்...!
   ஓம் தத் புருஷாய வித்மஹே
      லோபாமுத்ரா சமேதாய தீமஹி       
     தந்நோ அகஸ்தீஸ்வர ப்ரசோதயாத்

"திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை ஆதி முதல் பீடம்" 
வைகுண்டப் பேராழ்வான் , பிரம்மபுர பிரகாசப்ரகாசன்  
சக்தி ஸ்ரீபுரந்தான் , ராமசாசனக் கட்டளை குரு"  

Its just not means only these temple we get Agasthiar's darshan .,and his grace, in all temples. all siddhars , maharishi's are present.. Like  God..,they are present everywere.. we can reach them ., any time @ any place. just pure heart we need.., to make our thoughts.. Agam pure.. these agastheeswarar temple will give anugraham more...


நாகம் தோஷம் ..(பிறரை சொற்களால் வதைத்தல்.. அனைத்து தோஷங்கள் குறியீடு..)  ஆபத்சகாயேஸ்வரர் (ஆபத்துகளில் இருந்து காப்பவர்...) இவ்வாறாக .. அந்தந்த நாமம் தாங்கி அருளும் மூர்த்திகள்.. அதற்தற்க்கான ப்ரத்யேக... பலன்களை அருள்வது போல.. இத்தகைய அகஸ்த்தீஸ்வரர் மூர்த்திகள்... அகத்தை  தூய்மை .யாக்கியருளும் . அருள் பொழிபவை...., நாகேஸ்வரர் என்ற பெயர்க கொண்டருளும் மூர்த்திகளும்.., ஆபத்தைகளை காக்கவும்.., அகத்தை தூய்மையாக்கவும் .. அருள்பவர் தாம்.,  இஃதனைத்தும் ஒரு ப்ரத்யேக குறியீடு.. அஃதே... இறை அனைத்திலும் . அனைத்துமாக... உள்ளார்... உணர்வோர் உய்வடைவரே...

அகத்தியெம் பிரானின் அருளுரை :-
எல்லாமே இறை செயல், விதி என்றால், சிந்திக்கும் திறன் உள்ள மாந்தனுக்கு எந்த இடத்தில் சுதந்திரம் உள்ளது ?

இறைவன் அருளால், மனிதன் தெளிவாக சிந்தித்தால் இதுபோன்ற குழப்பம் வராது. அதாவது எல்லாம் விதியென்றால் ஒரு மனிதன் செய்கின்ற தவறும் விதியால்தானே ? பிறகு எப்படி அந்தத் தவறுக்கு, குற்றத்துக்கு அவன் பொறுப்பேற்க முடியும் ? என்பது உன் வினாவின் அடிப்படைக் கருத்து.

அதாவது, அ என்பவன் இ என்பவனை கொலை செய்வதாக விதி. அது அ என்பவனின் ஜாதகத்தில் இருக்கிறது. பிறகு எப்படி அ என்பவன் குற்றவாளியாவான் ? என்றால் அப்படியொரு தவறு செய்து அதன் மூலம் பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவன் விதி. எனவே விதியை மதியைக்கொண்டு ஆய்வு செய்யலாமே தவிர ஆட்சி செய்ய முடியாது. இறைவன் கொடுத்த சிந்தனையை எப்படி பயன்படுத்த வேண்டும் ? என்றால் அளவற்ற ஆத்திரமும், தன்முனைப்பும்தான் ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது. அடுத்ததாக கொடும் வறுமை தவறு செய்ய தூண்டுகிறது. இதுபோன்ற தருணங்களில் எல்லாம் இறைவனே எப்படி மனிதனுக்கு விதியிலிருந்து தப்பித்துக்கொள்ள நேர்மை, சத்தியத்தை, தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவ்வப்போது நீதி நூல் வாயிலாகவும், சில மகான்களை அனுப்பியும் போதனை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இவற்றையெல்லாம் மனிதன் கேட்பதே இல்லை. சிந்தனை என்று வரும்பொழுது மட்டும் தன் அறிவு, தன் உழைப்பு, தன் செல்வம், தன் வெற்றி என்று முயற்சி செய்ததாகக் கூறுகிறான். ஆனால் துன்பம் வந்துவிட்டால் மட்டும் அதற்கு பிறர்தான் காரணம், விதிதான் காரணம், இறைதான் காரணம் என்று கூறுகிறான்.

இறை இந்த இடத்தில் ஒரு தீபம்போல் இருக்கிறார் என்று வைத்துக்கொள். அந்த ஒளியிலே ஒருவன் நல்லவிதமான தர்மகாரியங்களை செய்கிறான். ஒருவன் ஒரு உயிரினத்தைக் கொன்று தின்க முயற்சி செய்கிறான். இன்னொருவனோ ஒருவனின் செல்வத்தை கொள்ளையடிக்க முயல்கிறான். அனைத்திற்கும் காரணம் அந்த தீபம்தான், எனவே அந்த தீபத்தை நிறுத்திவிட்டால் என்ன ? என்று ஒருவன் வினவினால் அது எப்படி அறிவுடைமை ஆகாதோ அதைப்போல் அனைத்திற்கும் இறைதான் காரணம் என்று கூறுவதும் அறிவுடைமை ஆகாது. எனவே இறைவன் படைக்கும்பொழுதே விஷத்தையும் படைத்திருக்கிறார், அமிர்தத்தையும் படைத்திருக்கிறார். விஷம் யாருக்கு வேண்டுமோ எடுத்துக்கொள்ளட்டும், அமிர்தம் யாருக்கு வேண்டுமோ எடுத்துக் கொள்ளட்டும்.

ஒரு மனிதன் எந்த இடத்தில் சிந்திக்க வேண்டும் தெரியுமா ? தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடிந்தும் அதை செய்ய முடியாமல் போகிறதே ? என்று அப்பொழுது சிந்தனையை பயன்படுத்த வேண்டும். அதீத தீய உணர்வுகள் தலையெடுத்து, தலையெடுத்து தலையெடுத்து ஆடும்பொழுது அதை அறிவு எனும் அங்குசம் கொண்டு அடக்க முயலவேண்டும். நல்ல நீதி நூல்களை தொடர்ந்து ஓதுவதும், தொடர்ந்து தர்மத்தை செய்வதுமாக இருந்தால் மனித மனம் ஒரு நிலையில் பக்குவப்பட்டு விதியே அவனை தவறு செய்ய தூண்டினாலும் அவன் அந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வான். அதற்குதான் நல்ல விஷயங்களும் மனிதன் முன் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதன் என்ன எண்ணுகிறான் ? தவறான விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டு  என்னை விதி இவ்வாறு செய்ய வைக்கிறது  என்று கூறி தப்பித்துக் கொள்கிறான்.


ஒத்துக்கொள்கிறோம். ஒன்று விதி என்று வந்துவிட்டால் எல்லாம் விதிதான். ஒரு மனிதனை விதிதான் தவறு செய்யத் தூண்டுகிறது. அதே விதிதான் அந்தத் தவறுக்கு தண்டனையும் வாங்கித் தருகிறது. விதிதானே தவறு செய்ய வைக்கிறது. எனக்கு எதற்கு தண்டனை ? என்று கூறக்கூடாது. மதி என்று வந்துவிட்டால் எல்லாம் சரியாக செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கு வந்துவிடவேண்டும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

1 comment:

  1. மேருதமிழ் மாமறையுள் பிரம்மமதை விண்டு
    பாருஇடி யாப்பஒளி சித்தமதைக் கொண்டு
    தேறுவழி காட்டுதலே தெள்ளமுத மாகி
    வீறுதிரு அருணமலை வில்வலமே காழி
    சோறுகண தானமதி ஆதவமா ஜோதி
    சீறுபுல போதிநவ நாதசித்த வீழி
    கூறுசிவ பாதமதை நன்னியநுண் ணியனே
    பேறுதிரு வேங்கடனே ராமகுரு வாழி!

    ReplyDelete