நாக கன்னி இன்னும் அங்கு உலவுவதாக ஐதீகம். இன்றும் நாகங்கள் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பதாகவும் ஆனால் ஒருவரையும் தீண்டியது இல்லை/தீண்டி யாரும் பலியானது இல்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.கடந்த 20 ஆண்டுகளாக, அனைத்து தெய்வங்களும் சிறிய குடிசையில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது.
இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தப்படியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
இந்த நந்தி சிலையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தபடியே தான் இருந்தது. அந்த ஊர் மக்கள், சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர். அங்கு எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. 
"கோயில் கண்ணாப்பூர் அ/மி. நடுதறிநாதர் திருக்கோயில் இறைவர் திருப்பெயர் : வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர். இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை தல மரம் : கல்பனை (பனை மரத்தில் ஒருவகை - தற்போதில்லை.) தீர்த்தம் : சிவகங்கை. வழிபட்டோர் : இடும்பன். தேவாரப் பாடல்கள் : அப்பர் - மாதினையோர் கூறுகந்தாய். https://santhipriya.com/மணவூர் நந்தீஸ்வரர் link
https://en.wikipedia.org/wiki/Yaganti_temple






No comments:
Post a Comment