சுந்தரவதனப் பெருமாள்!
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரவதனப் பெருமாள் இங்கு அருள்புரிகிறார். திருக்கோயில் மிகவும் பழமையானது. சுந்தரவதனன் என்ற பெயருக்கு ஏற்ப பெருமாளின் ரூபம் மிகவும் அழகு வாய்ந்தது. திருக்குளத்தை ஒளவை குளம் என்று அழைக்கிறார்கள். இக்குளத்தில் நீர் வற்றுவதே இல்லை.
சேஷாத்ரி அவதரித்தார்!
இவ்வூரில்தான் மகான் சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்ததாக வரலாறு சொல்கிறது. சேஷாத்ரி சுவாமிகளின் குடும்பத்தார் வழிபட்ட புனிதமான துளசி மாடம் பெருமாள் கோயிலில் இருக்கிறது. அவ்வை குளத்தில் சேஷாத்ரி சுவாமிகள் ஜெபம் செய்து கொண்டிருந்த தருணத்தில் பகவான் கிருஷ்ணன் அவருக்கு காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.
திருத்தலம் நிறைந்த ஊர்!
காமரசவல்லி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளும் திருக்கோயிலும் வழூரில் இருக்கிறது. இங்குள்ள 20 கல்வெட்டுகளில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பொன்னியம்மன் ஆலயம், முத்துநாயகி அம்மன் ஆலயம் ஆகியவையும் பழமையைப் பறைசாற்றுகின்றன.
அமைவிடம்:
காஞ்சிபுரம் - வந்தவாசி இடையே வந்தவாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது வழூர் அகரம் கிராமம்.
No comments:
Post a Comment