எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, September 26, 2018

ஆலயத்தில் நடக்கும் அதிசயம்!

தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.
தல வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர், மனித ஆன்மாவிற்கு ஏற்படும் வலி மற்றும் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டி விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றி வந்தார். விஷ்ணு தனது வாகனமான கருடனிடம், மனிதனின் ஆன்மா இழிநிலையில் இருந்து மீண்டு நன்னிலை பெறுவதற்கும், ஆன்மா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்குமான வழிமுறைகளைச் சொல்லத் தொடங்கினார்.

உடனே கருடன், இறைவன் சொல்லும் வழிமுறைகளைத் தவமியற்றி வந்த முனிவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முனிவர் தவமியற்றி வந்த இடத்தின் அருகிலிருந்த குளத்தின் கரையில் சென்று அமர்ந்தது. விஷ்ணு, கருடனிடம் சொன்ன வழிமுறைகள் அனைத்தும், முனிவருக்கும் நன்றாகக் கேட்டது. மனித வாழ்வுக்கான நன்னெறிகளை விஷ்ணு வழங்கிய அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் இதனையறிந்த வேட்டாத்து நாட்டு மன்னர், அவ்விடத்தில் கருடனுக்கான கோவில் ஒன்றைக் கட்டுவித்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.
கேரளத்து சிற்பியான பெருந்தச்சன், தான் செய்த கருடன் சிலை ஒன்றை வேட்டாத்து நாட்டு மன்னருக்குப் பரிசாகத் தந்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு மகிழ்ந்த மன்னன், ‘இந்தக் கருடன் சிலை நல்ல உயிரோட்டத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை உண்மையாகப் பறந்து சென்றால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார்.

உடனே சிற்பி, “இந்தக் கருடன் சிலையை கற்புடைய பெண் எவராவது தொட்டு, பறக்கும்படி வேண்டினால், உண்மையாகவே கருடன் பறந்து செல்வார்’ என்றார்.

அதனைக் கேட்ட மன்னன் கோபமடைந்து, ‘சிற்பியே! சிலை எப்படிப் பறந்து செல்லும்? தாங்கள் சொன்னதை இன்னும் சில நாட்களில் நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் உமது உயிரை இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிற்பி, தனது மனைவியிடம் அரசவையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். மறுநாள் அந்தச் சிற்பியின் மனைவி, சிற்பியை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றாள். பின்னர், அங்கிருந்த கருடன் சிலையைத் தொட்டு வணங்கிய அவள், ‘சிலையாக இருக்கும் தாங்கள் உயிர் பெற்றுப் பறந்து சென்று, என் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினாள்.

என்ன ஆச்சரியம்.. கருடன் சிலை உயிர் பெற்றுப் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து பறந்து சென்ற கருடன் குளக்கரை ஒன்றில் போய் அமர்ந்து மீண்டும் சிலையாக மாற்றம் பெற்றது. பறந்து சென்றக் கருடனைப் பின் தொடர் ந்து வந்த மன்னரும், மற்றவர்களும் குளக்கரையில் இருந்த கருடன் சிலையை வணங்கினர். அதன் பிறகு அந்த மன்னன், அங்கு கருட னுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்டினான் என்று மற்றொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு
இக்கோவிலில் இறக்கைகளை விரித்துப் பறப்பதற்குத் தயாராக நின்ற நிலையில், மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கருடன். இவர் பாதி மனிதத் தோற்றத்திலும், பாதி கருடன் தோற்றத்திலுமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உட்பகுதியில் விஷ்ணு, கூர்ம (ஆமை) தோற்றத்தில் இருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணன், சிவபெருமான் ஆகியோருக்கும், மேற்குப் பகுதியில் சாஸ்தா, பகவதி, கணபதி மற்றும் பத்ரகாளி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகப் பகுதியில் ஓரிடத்தில், மேடை ஒன்றில் பல நாகங்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கே பெரிய அளவிலான தீர்த்தக்குளம் ஒன்று இருக்கிறது.

வழிபாடும்.. பலன்களும்..
வெள்ளமச்சேரி கருடன் கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் ‘கருடன் விழா’ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 12 மற்றும் 13-ம் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.

தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.

மஞ்சள் பாயசம் :
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப்படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்க்காரணம் :
கருடன் கோவில் அமைந்திருக்கும் இடம் ‘வெள்ளமச்சேரி’ என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக்குளத் தில் முன்காலத்தில் வெள்ளை ஆமைகள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வெள்ளை ஆமைச் சேரி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் ‘வெள் ளமச்சேரி’ என்று மருவிவிட்டதாக கூறுகிறார்கள்.

நாகதோஷம் நீங்க.. :
நாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர்.
கலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும். இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது.

அமைவிடம் :
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, வெள்ளமச்சேரி. இக்கோவிலுக்குச் செல்லக் கோழிக்கோடு மற்றும் திரூர் நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

"மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே'
என்பது ஐந்தாம் திருமுறைப் பாடல்.

இவ்வூரையடுத்து பத்து கிலோமீட்டர் சுற்றளவில் குரங்குகள் நடமாட்டமே கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரண்டே இரண்டு குரங்குகள் சித்திரை அல்லது தை மாதத்தில் இங்குவரும். இவை எங்கிருந்து வருகின்றன- எப்படி வருகின்றன என்பது யாருக்கும் தெரியாது. 

அந்த இரண்டு குரங்குகளும் இத்தலத்திலேயே இரண்டு நாட்கள் தங்கும். கணபதி நதியில் நீராடியபின் ஒரு குரங்கு வில்வ மரத்தில் ஏறி இலைகளையும் பூக்களையும் பறித்துப்போடும். மற்றொரு குரங்கு அதை சேகரித்துக்கொண்டு கருவறையில் உள்ள ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரர்மீது சாற்றி வழிபாடு செய்யும். இது இன்றளவும் ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசயமாகும்.

சிறப்பம்சங்கள்
சிவபக்தனான இராவணனைக் கொன்ற இராமனுக்கு பாவம் நீங்க அகத்தியர் பரிகாரம் கூறியதால், அதுவே அவருக்கு தோஷமானது. அது நீங்க இத்தலம்வந்து இறைவனை வழிபட்டு தோஷத்தினை நீக்கிக் கொண்டார்.

பிருங்கி மகரிஷி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய தேவியர்களை விட்டுவிட்டு, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மட்டும் வண்டுருவில் வலம்வந்து வணங்கிவந்தார். எனவே மூன்று தேவியர்களின் கோபத்திற்கு ஆளாகி, தபோ பலத்தை இழந்தார். வெண்குஷ்ட நோய் அவரைப் பற்றியது. நாரத மாமுனியின் அறிவுரைப்படி திருக்குரக்காவல் வந்த முனிவர் கணபதி நதியில் நீராடி அனுதினமும் ஸ்ரீஏலாசௌந்தரிஅம்பிகையையும், ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரரையும் வழிபாடு செய்துவந்தார். அவரது பக்திக்கு மெச்சிய அம்பிகை பிருங்கி முனிவருக்கு காட்சியளித்து, அவரின் வெண்குஷ்ட நோய் நீக்கி தபோபலத்தை வழங்கி திருவருள் புரிந்தாள்.

மார்க்கண்டேயர் தனது ஆயுள் பலம் அதிகரித்து எம பயம் நீங்க பஞ்ச "கா' க்ஷேத்திரங்களிலும் இறைவனை வழிபட்டு ஈஸ்வர அனுக்ரகத்தைப் பெற்றார்.
இந்திரன் கௌதம முனிவரின் சாபம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் திருக்குரக்காவும் ஒன்று.

இத்தல இறைவன் ஆஞ்சனேயரால் திருவோண நட்சத்திர நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால்திருவோண நட்சத்திரமுடையவர்களும், மகர ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய இறைவனாக இவர் திகழ்கிறார்.

பன்னிரு ராசி நேயர்களும் ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரரை வழிபடுவதால் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களும் இந்த ஜென்மத்தில் செய்த பிழைகளும் நீங்கும்.

ஸ்ரீஏலாசௌந்தரி அம்பிகையை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிட்டுவதோடு, குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் மேன்மை பெறுவார்கள். பௌர்ணமியன்று அம்பாளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

 ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகம் நற்பலனை வழங்கும்பொழுது அந்த கிரகத்தை வழிபடுவது சிறப்பு. 

அதே கிரகம் தீயபலன்களைச் செய்தால்அதன் அதிதேவதைகளை வழிபடுவதுதான் சிறப்பு. ஒருசமயம் அனுமன் சூரியனை பழம் என நினைத்து விழுங்கச் செல்லும்போது ராகு பகவானிடமும்இராமாயண காலத்தில் தனது வாலைப்பிடித்த சனி பகவானிடமும் சண்டையிட்டுத் தோற்கடித்தார். அந்த இரு கிரகங்களும், "அனுமனேஉங்களை வழிபாடு செய்பவர்களை நாங்கள் துன்பப்படுத்த மாட்டோம்என்று உறுதி கூறின. அதனால்தான் நாம் ஆஞ்சனேயரை வழிபடும்போது சனியின் தானியமான எள்ளை எள்ளுசாதமாகவும்ராகு கிரகத்தின் தானியமான உளுந்தை வடைமாலையாகவும் சாற்றி வழிபாடு செய்கிறோம். அனுமன் ராமாயண காலத்தில் இறுதியாகத் தங்கி வழிபட்ட தலம் திருக்குரக்காவல்.

அமைவிடம்: மயிலாடுதுறை- மணல்மேடுசீர்காழி- மணல்மேடு வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி இளந்தோப்பு ஜி.எச்.எனும் நிறுத்தத்தில் இறங்கி வடக்கே மூன்று கிலோமீட்டர் சென்றால் திருக்குரக்காவலை அடையலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தும்இளந்தோப்பி லிருந்தும் ஆட்டோ வசதி நிறைய உள்ளது.
அகத்தியர் வழிபட்ட மகத்தான திருக்கோயில்
மகான்களாலும் , ரிஷிகளாலும் , மாபெரும் சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்ற லிங்கத்திருமேனிகள் நமக்கு  கிடைக்குமாயின் அதை விட நாம் பெரும் பாக்கியம் வேறென்ன உள்ளது? அன்பர்களே, அப்படி வாராது வந்த மாமணி போல் நமக்கு , நாம் உய்வதற்கு கிடைத்த பொக்கிஷமாக   வந்தவர் தான்  திருவாரூர் ----மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள கமலாபுரம் என்னும் இடத்தில் கோயில் கொண்டருளும் தியான லிங்கேஸ்வர பெருமான் ....கம்பீரமாக கோயில் கொண்டு நம் மனதை கொள்ளை கொள்கிறார் .....இப்பெருமானுக்கு மேற்கூரை வேயப்பட்டுள்ளது ......
அருகில் உள்ள அன்பர்களால் பிரதோஷ பூசையும் நடைபெறுகிறது ..விரைவில்  அவன் அருளாலே அவன் திருக்கோயில் அமைய வேண்டும் ....என்பதே ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பார்ப்பு .... சிவாய நம .....

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அருணகிரிநாதர் தங்கியிருந்து முருகனை வழிபட்டதாகக் கூறப்படும் மலைக் குகை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

முற்காலத்தில் இருந்த வெண்ணீர் அணி இருடியர் (உடல் முழுவதும் திருநீரு பூசிய முனிவர்கள்), அந்தமான் சித்தர்கள் உள்ளிட்ட முனிவர்கள் இந்த மலையில் தங்கி வழிபாடு நடத்தியதற்கான தடயங்கள் இங்கு தென்படுகின்றன. சுமார் 100 அடி தொலைவு வரை செல்லும் இந்தக் குகையில், முற்காலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. குகைப் பாதையின் நடுவேயுள்ள 2 மேடைகளில் சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் குகையின் உள்ளே சிறிது தொலைவுக்குச் சென்றதும், அது இரண்டாகப் பிரிந்து செல்கிறது. இந்தப் பாதைகள் வட்டப் பாறைகளால் மூடப்பட்டுள்ளன. வயலூரில் இருந்த அருணகிரிநாதர் இந்தக் குகையில் தங்கி கோயிலுக்கு வந்து செல்வார் என்ற செவிவழிச் செய்தி உள்ளது.

சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம்:- 


தம்பிரானின் இறை தொண்டு பல ஆண்டுகள் தொடர்ந்தன. தான் விரைவில் இறையோடு ஐக்கியம் ஆகப்போவதை உணர்ந்த தம்பிரான் தன் சகோதரரிடமும் ஊர்பெரியார்களையும் அழைத்துத் தனது உடலைத் தான் நித்தமும் வணங்கிவந்த திருத்தங்கல் பழனி முருகப்பெருமான் சன்னதியைப் பார்த்தவாறு அடக்கம் செய்யக் கூறினார். அனைத்துச் சமூகத்தினரும் அவரது விருப்பத்தை அப்பொழுது ஏற்றுக்கொண்டனர். முருகப்பெருமானின் தைப்பூச விழாவினை நிறைவாக முடித்து, அடுத்த நாள் தம்பிரான் இறையடி அடைந்தார். ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில் தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார்.

 . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதைவேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த, வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ நின்றநாராயணப் பெருமாள் திருத்தலமாகவும், ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது. ( கருநெல்லி சக்திகளை இத்தல வழிபாட்டில் அடைந்து கொள்ளலாம்...)


ஸ்ரீசக்கர கோயில்., பத்ரகாசி என்று அழைக்கப்படும் “ஓசூரில் பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளும் தனித்தனியாக மலை மேல் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சிறப்புடையது.... இடம் :- திரிமூர்த்தி குகை, பிரம்ம மலை இராயக்கோட்டை ரோடு, luk india பின்புறம்., ஓசூர்., கிருஷ்ணகிரி மாவட்டம்.!

Many would be aware of the Navabrindavanam temple in Anegundi while few would be about the one in Vellore.

It is in a place called Shenbakkam near vellore.

The place Shenbakkam is located very close to Vellore in Tamil Nadu. When travelling from Chennai to Vellore, one will come across a railway bridge after getting down from the bridge, take the service lane and take a right turn. The road known as Pillaiyar Koil Street and at the third crossing one can see the sign board, the road will lead to the Navabrindavan.

This place is abetting the river Pallaru and on the banks of the river. The place was once called Swayambakkam since Lord Ganesha appeared hear as Swayambu and later became as Shenbakkam. It is also said that the original name of the village was Shenbagavanam as it was full of fragrant Shenbaga trees.

Shenbakkam is also known for swayambu vinayagar temple.

Sri Madhvacharya has visited this kshetra.

Sri Vyasaraja, the previous incarnation of Sri Raghavendra has installed a Mukyaprana diety here.

Sri Raghavendra, has stayed here and meditated for fourteen days.

Eight saints belonging to Dwitha philosophy found by Sri Madwacharya had chosen to take Jeevabrindhavan [last resting place] here. The ninth one is mirthika Brindhavan of Guru Sri Raghavendra Swamy. Thus in total nine brindavan are housed here and hence named ‘Nava Brindhavan”. Readers may kindly note this ‘Nav Brindhavan” is different from the one which is on the banks of Thungabhatra and is more popular. To distinguish these two places this place is called “Dhakshina Nava Brindhavan”.

Dhakshina Nava Brindhavan

The nine Brindavan of this place are of the following saints: 

1. Sri Vidyapati Tritahru of Sri Uttrati matt
2. Sri Sathyadirajaru of Uttrati mutt
3. Sanyasi shisya Sri Kesava wodeyaru
4. Sanyasi shisya Sri Govinda Madhava wodeyaru
5. Sanyasi shisya Sri Boovaraha wodeyaru
6. Sanyasi shisya Sri Raghunatha wodeyaru
7. Sri Sripathi Tirtharu of Vyasaraja Mutt
8. Sri Kambaluru Ramachachandra Tirtha of Vyasaraja Mutt
9. Mrithika Brindhavan of Guru Sri Raghavendra Swamy.


No comments:

Post a Comment