ஆமென்ற வகஸ்தியரு மொன்றுசொன்னா
ரறிவில்லா மனிதர்களு மயங்கச்சொன்னார்
வேமென்ற வாழ்க்கையைவிட் டுயிர்போம்போது
விண்ணொடுவிண் மண்ணொடுமண் சேர்ந்ததென்றும்
ஓமென்ற வுப்புவினி லப்புவென்று
முயர்வாய்வு வாய்வினிலே யொடுக்கமென்றும்
தேமென்ற தேய்வினிலே தேயுவென்றுந்
தோற்றினா ரந்தவுயிர் பிறவாதென்றே.
பிறவாமற் போவதற்கு வழியேயில்லை
பிசகாத பூதமப்போ போகவில்லை
உறவாக பூதமைந்து நாள்கடோறும்
வொழிந்தொளித்துப் போகுமொரு வுண்மைகேளு
குறைவான ஜலந்தனிலே ஜலமுமாச்சு
இறவாத விந்துவது
தேய்வுமாச்சு
யென்சொல்வேன் வாய்வுமடா கழியலாச்சே.
ஆச்சுதென்ற
மூச்சுமடா வாகாயமாச்சு
வஞ்சடா தினந்தினமுங் கழிவதாலே
காச்சுதென்ற தேகமது தளர்ந்துபோச்சு
சாற்றுவேன் ஜீவாத்மா பரமாத்மாவிரண்டும்
வாச்சுதென்ற சத்திசிவ மிருவராவார்
வல்லவரவ் விருவருக்கோ சாவதில்லை
காச்சுதென்ற பூதமைந்தை வீடாய்க்கட்டிக்
கைலையைப்போ லிருந்தார் பிண்டத்துள்ளேதானே.
நானெற்ற ஜீவனுயி ரிவராச்சு
நானறிந்தால் பிரம்மலபி தப்பிப்போச்சு
நானென்ற பூதமது கழிந்துபோகும்
நலமான வாக்கையது கட்டுவிட்டால்
மானென்ற ஜீவாத்மா தேகமாகும்
மகத்தான பரமாத்மா
வதனட்சேர்ந்து
தானென்ற சூச்சும
தேகமாகி
செனித்த
கெர்ப்பபிண்டத்தி லடையும்பாரே.
பாரப்பா
விவர்களைப்போ யடைந்தபோது
பழுத்தகனி
வீழ்ந்தாப்போற் பிறக்கும்பாரு
நேரப்பா வைந்துமது
சேர்ந்துக்கூடும்
நிலையாகத்
தரித்ததொன்று கிரகவேளை
ஆரப்பா கிரகத்தின்
சமர்த்தைப்போல
வாயுளுமுண்டாச்
சவற்றின் பிலன்றான்பாரே
வேரப்பா
கூட்டிலிரு வருமேசேர்ந்தால்
வெவ்வேறா யிருப்பர்
புத்தி வேறாங்கேளே
கேளப்பா விருவரையு
மொன்றாய்ச்சேர்த்துக்
கெடியான
வுயிரைதைநீ பிடித்துக்கொண்டால்
வாளப்பா
கூட்டைவிட்டும் வரவுமாகும்
வல்லமறு
கூட்டினிலும் புகுதலாகும்
ஆளப்பா தேவதையு
நீயேயாவா
யாச்சரியங்
கடிகையி லாயிரங்காதஞ்செல்வாய்
நீளப்பா
விவ்வுயிர்க்குப் பிரமானாக்கினையில்லை
நிகரிலிங்கத்
தடங்குமுயி ரிப்படிதான் பாரே.
பாரப்பா
வேமமெனன்றும் தூதனென்றும்
பகர்கின்ற
காலனென்றும் பாசக்கயிற்றனென்றும்
ஆரப்பா வறியாமற்
சொல்வதைத்தா
னறிவாகச்
சொல்லுகிறே னொன்றுகேளு
நேரப்பா
நக்ஷத்திரங் காலனாச்சு
நிலையான கிரகந்தா
னேமனாச்சு
சாரப்பா
ராசியாதுந் தூதனாச்சு
சாற்றியதோர்
திதியதுவே கயறுமாச்சே.
ஆச்சுதென்ற தேகம்
வாகனமுமாச்சு
வைந்துபேராற்
கூடது வுண்டாக்கலாச்சு
நீச்சுதென்ற
செனனத்தில் கிரகந்தானும்
நிலையாகத்
தந்தவயது முடிந்ததானால்
காச்சுதென்ற
தேகமது கனிந்துபோகுங்
கருவான விருவிருமே
கூட்டிற்சேர
மாச்சுதென்ற
வாயுதங்க ளொன்றுமில்லை
வலுமில்லை
கதியில்லை யென்றுசொல்லே.
செல்லுமென்ற
வெமனது பிடிப்பதேது
செனிப்பிக்கப்
பிரமாவு மிங்கேயேத
வெல்லுமென்ற
வண்டத்தை திருஷ்டிக்கத்தான்
விதமான
பிண்டத்திற் கவர்கள்பாரு
நல்லுமென்ற
பிண்டத்திற் கிவர்களாகி
நலமான சத்திசிவ
மிவர்களாகும்
அல்லுமென்ற
பிண்டத்திற் சத்திசிவன்தானு
மண்டத்திற்
சத்திசிவ மதைப்பூசித்தாரே.
பூசித்தா
ரிவர்களுமே தவத்தோராச்சுப்
பூர்த்தியாய்
நேசித்தாற் பிறப்பும்போச்சு
நேசித்தா லப்போது
பிரமத்தோட
நெடுநாளும்
வாழ்ந்தங்கே விருக்கலாகும்
யாசிப்பாய்
கைலாசஞ் சொன்ற்கலோக
மடக்கமது பரமத்தி
லடக்கமாகும்
வீசிப்பாய் கூடமது
சமையும்போது
விகற்பமாய்
கிரகமிரண்டு சேர்ந்தாற்கேளே.
கிரகதிசை கூறல்
கேளப்பா
ஒருவன்திசை யுள்ளமட்டுங்
கெடியாக
விருப்பான்வே றொருவர்திசையில்
மாளப்பா
வவமிர்த்தாய்க் கொல்வானப்பா
வல்லதொரு பருவமே
பசாசமாவார்
வாளப்பா வவன்வயசு
வுள்ளமட்டும்
வலுவான சூட்சும
தேகமாவான்
நீளப்பா
விவர்களாகக் கினையினாலே
நிலையாகக்
கூட்டினிலே செல்லொட்டானே.
செல்லொட்டான்
வுயிரெழுத்தை யறிந்தோனானாற்
செயமான முநியாவான்
தேவனாவன்
வல்லொட்டான்
மோகத்தை நினைந்துசெய்தால்
வலுவான பெண்கள்
தனைப் பிடித்துக் கொள்வான்
வெல்லொட்டா
துயிரெழுத்தை யறிந்ததெய்வம்
விதமான மந்திரத்தி
லடங்காதப்பா
சொல்லட்டா
தேவர்களு மனிதராவார்
சுகமான
மனிதர்களுந் தேவர்பாரே
பீஜவாரங் கூறல்
பாரப்பா கிரகமைந்த க்ஷரமேயாகும்
பருவமுள்ள நகாரமது வாதியாகும்
நேரப்பா வகாரமது திங்களாகும்
வேரப்பா சிகாரமது செவ்வாயாகும்
விதமான வகாரமது வெள்ளியாகும்
சீரப்பா யகாரமது வியாழமாகும்
சிவந்ததொரு விவர்களது வந்துபேரே.
பேரானவரி தானுஞ் சனியனாகும்
பெரிதான முக்கோணச் சுழியுமாகும்
கூரான சுழிதானே புதனுமாகுங்
குறியாமற் புருவத்திற் கழியேயப்பா
வாரான வாரமது வேழுபேராம்
வகையான வக்ஷரமே யேழுரூபம்
வீரான வோங்கார மிரண்டக்ஷரமேயாகும்
வீதமுள்ள பரமாச்சே யிரண்டுந்தானே.
தானென்ற வோங்கார மருகேகேது
தனுவாச்சு வுயிராச்சு பேருமாச்சு
வேனென்ற வக்ஷரந்தான் விளங்குமல்லால்
வெல்லுமென்ற பேர்கள்வே றொருவரில்லை
ஊனென்ற மனுதேக மிதனாலாச்சு
வுலகத்தில் யுகமுடிக்க விவர்களாடும்
கானென்ற வுலகத்தி லிராகுகேது
கதிரவனு மதியுமடா விரண்டுங்காணே.
காணப்பா வெழுலோக மேழுவாரங்
கருவான பாம்பிரண்டுங் கீழ்மேலாகும்
கோணப்பா பாம்பிரண்டுங் கீழ்மேற்சுற்றும்
பூணப்பா பீஜநிலை கண்டோரில்லை
பீஜத்திற் கழன்றெழுந்து வலமாய்சுற்றி
ஆணப்பா வண்டபிண்ட கபாலமுட்டி
யதிகருக்காய் வெளியினிலே வந்துபோமே.
போமென்ற வலதுபுர மண்டமுட்டிப்
பின்னுதய மிடதுபுர மார்பிற்குத்தும்
ஆனென்ற பாம்பிரண்டுங் கலையிரண்டாகு
மவைபிடித்து வடக்குமதி ரவியுமாகும்
வானென்ற பாம்படக்கப் பெட்டியப்பா
வல்லதொரு கபாலமடா வடக்குந்தானே
தேனென்ற பாம்பதனை யடக்கிவிட்டால்
தேன்போலே திரேகமது மாறும் பாரே
பார்க்குமென்ற பாம்பதுவு மிடங்கீழாகும்
பரிவான தேய்வதனிற் சுழன்றுநின்று
ஏர்க்குமென்ற பாதாள வாசலாலே
வெளிதாகக் குறைந்தேறுங் கொஞ்சங்கொஞ்சம்
தீர்க்குமென்ற தீபனத்தீ யேழும்பற்றும்
திறமான பீஜத்திற் பின்னுஞ்சுற்றும்
கார்க்குமென்ற பாம்பதுதான் கனலைச்சுற்றக்
கண்டுதட நதியெனவே யுந்திக்கீழே.
கீழ்ப்பாசிவமான வக்னியே சங்கரிக்குங்
கெடிவாய்வென் சத்தியடா வேந்தித்தள்ளும்
வாளப்பா கதிர்மதியும் லோகந்தன்னில்
வளமான சுருட்டுப்போற் சுற்றுங்காணும்
ஆளப்பா கன்னிவல மார்ப்பைச்சுற்றி
யண்டபிண்ட கபாலத்தில் முட்டிவந்து
கேளப்பா விடமார்பிற் சுழன்றுநின்று
கதித்தெழுந் தேயுவிலே சுழன்றுபோமே.
போமடா மார்பிலே சுழன்றதாலே
புகழான பலிபீட மதுவுமாச்சு
வாமடா மநுக்களை திருஷ்டிக்கலாச்சு
வல்லகுட்டி கோலவடத் திருக்கலாச்சு
நாமடா விந்துபோற் சுழன்றதாலே
நலமான சுரோணிதம் பீடத்துள்ளாச்சு
ஆமடா வதுவொளிந்தால் மூர்த்தமாச்சு
வாதியிரு கூறதனை யறிந்துக்காணே..
ஆட்டமுடன் பதினெட்டு சித்தரெல்லா
மஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகீ
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்திற் லிங்கமதாய் முளைத்தார்பாரே.!
அண்டபிண்டமறியாச் சாட்சி கூறல்
ஆடினா ரொவ்வொருவரறு பத்தினாலு
மானதொரு சித்தெல்லா மாடியாடி
நாடினான் பதினேழு சித்தருந்தான்
ஞாலமதிற் சிவதலங்கள நேகமானார்
நாடியதோர் தலத்தி லகஸ்தியருநாமும்
நாமுருவாய்க் கன்னிதிசை யதனில்வாழ்வோம்
நீடியதோர் மூலர் சமாதியாய்நின்று
நிலைத்தனாற் சிவாலயமென் றுலகிலாச்சே.
மவரிருந்த விடமதுவே கோணமாகும்
வாச்சுதென்ற நவகோண வீட்டினாலே
வல்லதொரு வாலயமாய் நிலைத்த்தையோ
பேச்சுதென்ற நவலோக வாட்டமெல்லாம்
பெரிதான வாட்டமொன்று மில்லையப்பா
காச்சுதென்ற நவலோகம் நவலோகந்தான்
கண்டுபார் நவத்வார மொன்பதாமே.
ஆமென்ற நவகோடி தேவராச்சு
வாச்சரிய நவக்ரகமு மிவர்களாச்சு
வாமென்ற மனுதேகம் நவகோணமாகும்
வல்லதொரு விஸ்தார தேசமன்பத்தாறு
வேமென்ற விவர்களெல்லா மிதற்குளுண்டு
விதமான பிண்டத்தி லடக்கங்காணும்
நாமென்ற பிண்டத்திற் காணாரென்று
நலமான வண்டத்திற் காட்டினேனே.
காட்டினே னண்டாண்டஞ் சரியாக்காண
காசினியில் மூலவர்க்க சித்தைகேளு
ஆட்டினதோர் மூலவர்க்க சித்தருக்கு
ளதிகமடா ரீசனுந்தா னயனுமாக
மகிழ்ந்தெனக்குப் பட்டமது வீந்தாரப்பா
மூட்டினேன் நூற்றியெட்டுச் சதுர்யுகந்தான்
முடிவாக திருஷ்டிசெய்து விருந்தேன் காணே.
வென்றதொரு தபஞ்செய்து வரனைக்கேட்க
விதித்தாரே யரனாகுஞ் சாதிமார்க்கம்
அன்றதொரு மோதகங்கள் வகையோடப்ப
மவற்கடலைப் பொரிதேங்காய் சர்க்கரையின்பாகே...!!
பாகான கரும்பிளநீர் முதலதாகப்
படைத்துவைத்து மரனாரு மொன்றுசொல்வார்
வாகாய்நீ யிருந்தவகை ஒன்றாய்ச்சேர்ந்தால்.......
.............
ஸ்தாபித்த கும்பமுனி தலவிபரம்பார்த்து
தேகான தேங்காயைத் தலையாய்வைத்து
தேன்மாவைத் தசையது வாயாக்கினாரே........
ஆக்கினார் கரும்பதனை யெலும்பதாக
வாச்சரிய மவற்கடலை கருவியாக்கி
தாக்கினார் மோதகத்தை ஸ்தனமதாகத்
தப்பாமல் வப்பவடை யீரலாக
நோக்கினா ரவையவ முப்பத்திரெண்டும்
நொடியிலே திருஷ்டிக்க வரனார்கண்டு
வாக்கினால் வல்லையே யென்றுசொல்லி
மகத்தான நாமமது கொடுத்திட்டாரே.
சிந்திக்க்ச் சிந்திக்க அற்புதமான உண்மைகளை ,
தத்துவங்களை அறியத்தக்கதான இந்த நூலை நிதானமாகப் படித்துச் சிந்தியுங்கள்.
மறுபடியும் சிந்தியுங்கள்.., உயிருள்ள வரை சிந்தித்துச் சிந்தித்து மகிழ்ந்து
கொண்டே இருங்கள்.... – எஸ்.பி ராமச்சந்த்திரன் (பதிப்புரை) ... ஆர்.சி மோகன்
பதிப்பாசிரியர்..... வெளியிட்டோர் தாமரை நூலகம்... நூலின் பெயர் – போகர் ஜெனன
சாகரம்
No comments:
Post a Comment