எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, September 11, 2025

மிர்தாதின் புத்தகம்

  உங்கள் கண்கள், எண்ணற்ற திரைகளால் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை நீங்கள் பார்க்கும் போதும், உங்கள் திரையைத்தான் பார்க்கிறீர்கள்.

🌺 உமது உதடுகள் எண்ணற்ற முத்திரைகளால் மூடி மறைக்கப்பட்டுக் கிடக்கையில், நீங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு முத்திரைதான்.
🔐 பொருள்கள் என்ன வடிவத்தில், என்ன பண்பில் இருந்தாலும், அவை திரைகளே; துணிபொதிந்த கட்டுகளே, அதன் காரணமாக வாழ்க்கையே ஒரு திரை; துணிபொதிந்த கட்டு, உங்கள் கண்ணே திரையாகவும், துணி பொதிந்த கட்டாகவும் இருக்கும்போது, சிறிதளவேனும் அதைப் புரிந்துகொள்ள உங்களால் எப்படி முடியும்? அப்புறம், சொற்கள்.,
எழுத்துகளாலும், அசை சீர்களாலும், முத்திரை இடப்பட்டவைதாமே சொற்கள்? உங்கள் உதடே ஒரு மூடப்பட்ட முத்திரையாக இருக்கும்போது, முத்திரையை மட்டுமே வெளிப்படுத்துவதன்றி, உங்கள் சொற்களுக்குச் சிறிதளவேனும் பொருள் உண்டா? 👁️ திரையைக் கிழித்துப் பார்க்க, உங்களுக்கு வேறு கண் வேண்டும். புருவத்தாலும், இமைகளாலும், இமைப் பீலிகளாலும் மறைக்கப் படாத கண் வேண்டும்! உதடுகள் மீதுள்ள முத்திரைகளைத் தகர்க்க, உங்களுக்கு வேறு உதடுகள் வேண்டும். மூக்கின் கீழ் சதையாக இல்லாத உதடுகள் வேண்டும்! 💐 முதலில், கண், தன்னையே சரியாகப் பார்த்துக் கொள்ளும் போது, அது எல்லாப் பொருட்களையும் சரியாகப் பார்க்கும் வல்லமை பெறும்.

உதடுகளாலும் நாக்காலும் பேசாமல், அவற்றின் மூலமாகப் பேசக் கூடுமானால், எல்லாச் சொற்களையும் கடந்து பேச முடியும்; அவற்றிற்கு அப்பாலும் பேசமுடியும்! 🕵️‍♀️ சரியாகப் பார்த்து, சரியாகப் பேசினால், நீங்கள் உங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள்; உங்களைத்தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்!!! 📰விஷயங்களை அவற்றின் இயல்புப்படி விட்டுவிடுங்கள். மாற்றுவதற்குச் சிரமப்பட வேண்டாம். நீங்கள் அவற்றை எப்படிப் பார்க்கிறீர்களோ, அவை அப்படியே இருப்பதால்தான், அவை எப்படிக் காணப்படுகின்றனவோ, அப்படியே காணப்படுகின்றன. 🔅அவை பார்ப்பதும் இல்லை; பேசுவதும் இல்லை. பார்வையையும், பேச்சையும், அவற்றிற்கு நீங்களே வழங்குகிறீர்கள். அவற்றின் பேச்சு கடுமையாக இருந்தால், உங்கள் நாக்கைக் கவனியுங்கள். அவை அருவருப்பாகத் தோன்றினால், முதலும் முடிவுமாக உங்கள் கண்களைக் கவனியுங்கள். திரைகளை விலக்கும்படிப் பொருள்களிடம் கேட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் திரையை நீங்கள் விலக்குங்கள்.  🐚 பொருள்களின் திரைகள் தாமாக விலகிவிடும். முத்திரைகளை உடைத்து விடும்படிப் பொருள்களிடம் கேட்டுக் கொள்ளாதீர்கள்.
உங்களையே, நீங்கள் முத்திரைகள் தகர்த்து வெளிப்படுத்துங்கள், பிறகு எல்லாவற்றின் முத்திரைகளும் தாமாகத் தகர்ந்துவிடும்.! 🌲 படைப்பாளி எப்படியோ, அப்படித்தான் அவனது படைப்பும். எவனாவது தன்னை அதிகப்படியாகப் படைத்துக் கொள்ள முடியுமா? எவனாவது தன்னைக் குறைவாகப் படைத்துக் கொள்வானா?       இறைவன் நிறையும் - குறையும் இல்லாமல் - படைப்பாளியைப் படைக்கச் செய்கிறான்.

'நான்'- என்பது ஒரு மந்திரக்கோல். அது மந்திரவாதிக்குள் இருக்கும் பூஜ்யத்தையே பெற்றெடுக்கும்.  🎋 மந்திரவாதி எப்படிப்பட்டவனோ, அப்படியே அவனது மந்திரக்கோலின் படைப்புகளும்! அது நிலையாக, தாக்குப் பிடிப்பதாக அமைந்தால், உங்கள் உலகமும் நிலையானதாக, தாக்குப் பிடிப்பதாக அமையும். அப்போது நீங்கள் காலத்தைவிட வலிமை பெற்றுவிடுவீர்கள்!வெளியைவிடப் பெருவெளியாக மாறிவிடுவீர்கள். அது, கடந்து போவதாக, நிலையற்றதாக இருந்து விட்டால், உங்கள் உலகமும் கடந்து போவதாக நிலையற்றதாக  மாறிவிடும். அப்போது நீங்கள், கதிரவன் விடும் ஒரு மூச்சுப் புகையாக ஆகிவிடுவீர்கள். 🔱கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாளி. "நான்'' என்பதே அவனது படைப்பு. அப்படியிருக்க, அவன் ஏன், கடவுளைப் போலச் சமநிலையில் இல்லை? 👧 பொதிந்து கட்டப்பட்டுள்ள கட்டுக்குள் இருக்கும் கடவுளே மனிதன்.

காலமே, அந்தக் கட்டுப்பொதி.
'வெளி'யே, அந்தக் கட்டுப்பொதி.
தசையே அந்தக் கட்டுப்பொதி.
அதற்குள்தான் எல்லாப் புலன்களும், புலனறிவுகளும் பொதிந்திருக்கின்றன. வெறும் துணிக்கட்டு மட்டுமே குழந்தையாகாது, என்பது தாய்க்குத் தெரியும்; ஆனால், அது, குழந்தைக்குத் தெரியாது. படைப்பது எதுவோ, அது படைக்காமல் செய்யவும் முடியும்! ஒரு பகைவனை நீங்கள் படைப்பது போலவே, அவனை அவ்வாறு படைக்காமலும் இருக்க முடியும். அல்லது, அவனை, நண்பனாக மறுபடைப்புச் செய்யவும் முடியும். அதற்கு, நீங்கள் முதலில் உலையாக வேண்டும்.
அதற்கு உங்களுக்கு, புரிதலின் ஆத்மா துணை வேண்டும்.அதனால், நீங்கள் பிரார்த்தனை என்று ஏதாவது செய்ய விரும்பினால், முதலும் முடிவுமாக புரிதலை வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள்!

No comments:

Post a Comment