எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, September 11, 2025

மிர்தாதின் புத்தகம் -2

உங்கள் இதயத்தில் வெறுப்பிருக்கும் வரை, உங்களால் அன்பின் ஆனந்தத்தை உணர முடியாது. எல்லாமே வாழ்வின் சாரம்தான், ஆனால் ஒரு சின்னப் புழு மட்டுமே குடைகிறது - என்றால், எதை நேசித்தாலும், யாரை நேசித்தாலும் அது, உண்மையில் அந்தச் சின்னப் புழு, உங்கள் வாழ்வையே கசப்பாக்கிவிடும்.

எதை நேசித்தாலும், யாரை நேசித்தாலும் அது, உண்மையில் உங்களையே நேசிப்பதுதான் வெறுப்பும் அப்படித்தான். நீங்கள் எதை, அல்லது யாரை வெறுத்தாலும், அது, உண்மையில் உங்களையே வெறுத்துக் கொள்வதுதான். உமது நேசமும், வெறுப்பும் - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. நீங்கள் உங்களது மனசாட்சிக்கு நேர்மையாக நடந்து கொண்டால் வெறுத்தவர்களையும் உங்களால் நேசிக்க முடியும்! ஒரு வீட்டில் இரண்டுபேர் அமர்ந்திருக்கிறார்கள். ஒருவர் வீட்டுக்காரர். மற்றவர் விருந்தாளி. வீட்டுக்காரர், தமது வீட்டின் விலை மதிப்பையும், பராமரிப்புச் செலவையும், மூடு திரைகளின் மதிப்பையும், அலங்காரத் திரைகளின் விலைகளையும், மற்ற ஆடம்பரப் பொருள்களின் மதிப்பையும் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

அந்தச் சமயத்தில், விருந்தாளி, அந்த வீடுகட்டப் பயன்பட்ட கல்குவாரி உழைப்பாளர் கரங்களையும், கட்டடத் தொழிலாளர் களையும், திரைகளை உருவாக்கிய நெசவாளர்களையும், மரங்கள் வெட்டிக் கதவு, சாளரங்கள் மேசை, நாற்காலிகள் செய்த தச்சர்களையும் உழைப்பாளரையும் மனதில் நினைத்துப் போற்றுகிறார். புகழுக்குரிய படைக்கும் கரங்களை அவர் ஆத்மார்த்தமாக மனதில் போற்றுகிறார்.

அந்த விருந்தாளியே அந்த வீட்டில் நிரந்தரமாக வாழத் தகுந்தவர். ஆனால், அந்த வீட்டின் சொந்தக்காரன், அந்த வீட்டையே முதுகில் சுமந்து கொண்டிருக்கும் பாரம் ஏற்றிய விலங்கு. கன்றுக்குரிய பசுவின் பாலை, இருவர் பகிர்ந்து குடிக்கிறார்கள். ஒருவர் கன்றையே பார்க்கிறார். மென்மையான அதன் உடலை வெட்டி, வரப்போகும் பிறந்தநாள் விழாவில், நண்பர்களுக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறார்.

இன்னொருவர் அந்தக் கன்றைத் தமது உடன் பிறப்பாக நினைக்கிறார். பசுவையும், கன்றையும் பாசத்தோடு நேசிக்கிறார்.

இதில்,பின்னவரே கன்றின் மாமிசத்தால் ஊட்டம் பெற்றவர்.

முன்னவர் அதனால் நஞ்சூட்டப்பட்டவரே ஆவார்.

🎋ஆ! இதயத்தில் போட வேண்டிய பலவற்றை வயிற்றில் கொட்டிக் கொள்கிறார்கள். கண், மூக்கிலும் அடைக்க வேண்டியவற்றை, சட்டைப் பையிலும், சமையலறையிலும் போட்டுநிறைத்து விடுகிறார்கள். மனம் கொண்டு தகர்க்க வேண்டியவற்றைப் பற்களால் கடித்து நொறுக்குகிறார்கள். உடல் தாக்குப் பிடிக்கக் கொஞ்சமே போதும். குறைவாக நீங்கள் கொடுத்தால், அது நிறையத் திருப்பித் தருகிறது. நிறையக் கொடுத்தால், அது குறைவாகவே திருப்பிக் கொடுக்கும்.

இயல்பாகவே, உன் வயிற்றுக்கும், சமையலறைக்கும் வெளியே உள்ளவற்றால்தான் உன் உடல் வளர்கிறது. பொருள்களின் நறுமணம் கொண்டு உன்னால் வாழ முடியவில்லை யென்றால், விசால இதயம் கொண்டு பூமி வழங்குவதைத் தேவைக்கு ஏற்ற அளவு ஏற்றுக் கொள். விழித்துக் கொள்ளுங்கள்!

முடிந்தபோதெல்லாம் கொடுங்கள். முடிந்ததை யெல்லாம் கொடுங்கள்.

ஆனால், கடனாக எதையும் கொடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையே ஒரு கடனாக ஆகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கிற வாழ்வே ஒரு பரிசல்லவா?

கடன் கொடுக்க உங்களிடம் என்ன இருக்கிறது? தான் அருளும் பரிசு களுக்காக இறைவன் வட்டி கேட்கிறானா? கேட்டால் என்ன கொடுப்பீர்கள்?

No comments:

Post a Comment