எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, September 11, 2025

குரு தத்துவம்!

 திருப்பெருந்துறை கோவிலில் நந்தி இல்லை. கொடிமரம் இல்லை. லிங்கம் இல்லை. அம்பாள் திருவுருவமும் இல்லை. எல்லாம் இல்லையிலேயே ஆரம்பம் வேதமே அது இல்லை இது இல்லை...

"ந - இதி என்றுதானே ஆரம்பிக்கிறது"

இங்குள்ள இறைவன் பெயர் - ஆத்மநாதர் இறைவி யோகாம்பாள்! இங்கு மணிவாசகர் "தத்வமஸி" ஆகிவிட்டதால் (இறைவனாகவே ஆகிவிட்டதால்) எல்லா உற்சவமும் அவருக்குத்தான்.

🌲வியாசர் சுகருக்கு உபதேசித்தது:- "கல்விக்கு நிகரான கண் இல்லை. சத்தியத்திற்கு நிகரான தவமில்லை. ஆசைக்கு சமமான துக்கமில்லை. அஹிம்சையே மேலான தர்மம், பொறுமையே மேலான பலம், தன்னைத்தானே அறிவது மேலான ஞானம். பயனை விரும்பிச் செயல் புரிவதாலேயே அதர்மத்திற்கு செல்கிறோம். பலனில் கருத்தை விட்டால் அதர்மத்தை விடுவோம் . தர்மம் என்பது பட்டுப் புழு தன்னைச் சுற்றி தானே சுற்றிக் கொள்ளும் கூடு. புழுவுக்கு இறக்கை முளைத்ததும் அது கூட்டை பிளந்துக் கொண்டு வெளியேறத்தான் வேண்டும்!"

திருநாராயணபுரத்தில் லோமயாஜி யாண்டாள் என்ற பக்தர் இருந்தார். இவர் நன்றாக பாடுவார். இவர் பாடுவதற்கேற்றார் போல பகவான் பிரஸன்னமாகி ஆடுவார். ஒரு நாள் "எனக்கு மோட்சம் உண்டா?" என்று பக்தர் பகவானைக் கேட்டார். உமக்கு மோக்ஷமில்லை. நீ பாடினதுக்கும் தான் ஆடினதுக்கும் சரியாகப் போய்விட்டது. உமக்கு மோக்ஷம் வேண்டுமானால் ஒரு ஆசாரியனை நாட வேண்டும் என்றாராம்.

🔥தீ எரியும்போது முக்கோணமாகத் தோன்றுகிறது. மேலேயிருந்து காற்று அடித்தால் முக்கோணம் தலைகீழாகி விடுகிறது.

இந்த ஷட்கோணம் காற்று எல்லா திசையிலும் அடிக்கிறது. என்பதையே காட்டுகிறது. கீழ் நோக்கிய முக்கோணம் சக்தி தத்துவத்தையும் மேலே நோக்கிய முக்கோணம் சிவ தத்துவத்தையும் காட்டுகிறது.

இரண்டும் சேர்ந்தால்தான் உற்பத்தி வாழ்க்கை எல்லாம்.!!

- (நூல் நஜனின் குருதத்துவம்),🚩

No comments:

Post a Comment