எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, September 12, 2025

ஸ்வதா, ஸ்வாஹா

 தேவர்களுக்கு ஆஹூதி செலுத்துகையில் "ஸ்வாஹா" என்றும் பித்ருகளுக்கு சிரார்த்தம் முதலியவற்றில் "ஸ்வதா" என்றும் கூறவேண்டும்.

சப்தசதியில் பிருமம்மா அம்பிகையை துதிக்கையில்,
த்வம் ஸ்வதா த்வம் ஸ்வதா த்வம்ஹி
வஷட் காரா: ஸ்வராத்மிகா
என்று குறிப்பிடுகிறார்.

பிரும்மனுக்கு அம்பிகைதானே தாய். ஆகவே "ஸ்வதா" என்றும் கூறினார்.
..... எங்கும் பிரளயம் ஆனதால் வேள்வி செய்ய வசதி இல்லை. எனவே மானஸீகமாக ஸ்வாஹா என்ற சொல்லாலே பிரும்மா யாகம் செய்து விடுகிறார்.

ஸ்வ ஆஹ என்பதே ஸ்வாஹா ஆயிற்று. ஸ்வ ஆஹ என்றால் தானே பேசிய பேச்சு என்று பொருள். அதாவது பராசக்தி தனக்குத்தானே தத்துக்கொண்ட சப்த விளக்கமே இப் பரபஞ்சமாக விரிந்தது. பிரபஞ்ச சிருஷ்டியே ஒரு வேள்விதான். ஸ்வதா என்றால் தன்னியல்பாக ஏற்பட்டது என்று அர்த்தம். தத்துவ ரீதியில் இப்பிரபஞ்ச வாழ்வனைத்துமே பராசக்தி தனக்குத்தானே ஸ்வயமாகத் தத்துக்கொண்ட ஸ்வதாதான்.

முதலில் பிரும்மா மனதையே படைத்தார். ஆதலின் மனதும் யக்ஞமும் பிரும்மாவையே தமக்கு அதிஷ்டான தேவதை களாகக் கொண்டன. மனதினால் யாக தேவதைகளை நன்கு தியானம் செய்து கர்மா செய்ய வேண்டும். இரண்டையும் பிரிக்கக்கூடாது. மனதை வேறு இடத்தில் வைத்துக்கொண்டு எந்த கர்மாவையும் செய்யக்கூடாது.

வைஸ்வாநரன் :-

ஸுஷும்னா நாடிக்குள்ளே ஒரு பெரிய அக்நி இருக்கிறது. அதுநாம் உண்ணும் உணவை முதலில் உட்கொண்டு பிறகு அதைப் பிரித்து அந்தந்த ஸத்துடன் சேர்க்கிறது. எல்லாவற் றையும் ஜீரணம் செய்கின்ற அந்த அக்நி தான் ஜீரணமாவதில்லை.
அது சாதாரண தீயில்லை. ஈஸ்வரன், "வைஸ்வாநரனாக இருந்து ப்ராணிகளின் உடலை அண்டி வசிக்கிறேன் உண்ணும் போது "ப்ராணாய ஸ்வாஹா" என்று என்னை நாடி எனக்கு முன்னே ஹோமம் செய்கிறார்கள் அந்த ஆகாரம் மண்ணாகவும். ஜலமாகவும், அக்நி வடிவமாகவும் இருக்கிறது. அதை நான் பக்குவம் செய்து ஸ்தூலமான மண் அம்சமான ஆகாரத்தை மலத்துடன் சேர்க்கிறேன். மத்யமானதை மாமிஸாகவும் ஸூக்ஷ்மமானதை மனதாகவும் செய்கிறேன்" என்பது பகவான் பகவத்கீதையிலும் உபநிஷத்திலும் கூறுகிறார். அதனால்தான் நாம் உண்ணும்போது பயபக்தியுடன் உண்ண வேண்டும். இறைவன் வைஸ்வாநரன் என்ற அக்னியாக இருக்கிறார்.

நஜனின் தேவி புவனேஸ்வரி - நூல்

No comments:

Post a Comment