எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, July 8, 2026

Ramanujar-1

 ராமானுஜரின் பிற பெயர்கள்

1. இளையாழ்வார்- குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம்!

2. ராமானுஜர்- ஸ்வாமியின் மாமா பெரிய திருமலை நம்பியால் குழந்தைக்கு இடப்பட்ட திருநாமம் (பெரிய நம்பிகளால் பஞ்ச சமஸ்காரம் செய்தருளியபோது, சாற்றப்பட்ட திருநாமம் என்றும் கூறப்படுகிறது.)

3. யதிராஜர்- பெரிய நம்பிகளால், சதுர்த்தாஸ்ரம ஸ்வீகாரத்தின்போது சாற்றப்பட்ட திருநாமம்.

4. உடையவர்- அரங்கன், ராமானுஜருக்கு உபயவிபூதி பட்டம் அளித்து அருளிய திருநாமம்.

5. லக்ஷ்மணமுநி- திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமொழி, திருவாய் மொழி (மூலம்) சந்தை செய்தருளி மஞ்சள் காப்பு கைங்கர்யத்திற்கு உள்ளம் மகிழ்ந்து வைத்த திருநாமம்.

6. எம்பெருமானார்- திருக்கோட்டியூர் நம்பியால், ராமானுஜரின் பெரும் கருணை உள்ளத்தைக் கண்டு உகந்து இட்ட திருநாமம்.

7. சடகோபன் பொன்னடி- திருமலையாண்டான் பெரிய திருமொழி, திருவாய்மொழி முதலியவற்றிற்கு அர்த்தங்களை கற்றுத் தந்த பின் அளித்த திருநாமம்.

8. கோயிலண்ணன்- ஆண்டாள் விருப்பப்படி திருமாலிருஞ்சோலை அழகர் உகக்கும்படி, நூறு தடாவில் வெண்ணையும் நூறு தடாவில் அக்காரவடிசிலும் ஸமர்ப்பித்து, ஸ்ரீ ஆண்டாளால் அருளப்பட்ட திருநாமம்.

9. பாஷ்யகாரர்- சிறந்த ஸ்ரீபாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம் சாரதாபீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம்.

10. பூதபுரீச்வரர்- ஸ்ரீ ஆதிகேசவப் பெருமானால் சாற்றியது. (ஸ்ரீபெரும்புதூர்)

11. தேசிகேந்தரர்- திருவேங்கடமுடையானால் சாற்றியது.

திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி-1

pdf credit to - gopalavallidasar

text credit to - dinamalar

No comments:

Post a Comment