எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 6, 2026

Enlightenment!


 🌼 காமத்தைக் கடந்து அன்பு பிறக்கும்பொழுதுதான் பாலுறவு அர்த்தமுள்ளதாகின்றது. அன்பைக் கடந்து வழிபாடு பிறக்கும்பொழுதுதான் அன்பு அர்த்தமுள்ளதாகின்றது!

🌾சத்தியம் என்பது தனிமனித சுதந்திரத்தில் மட்டுமே மலரக்கூடியது. உங்களது இருப்பின் முழுமையான சுதந்திரத்திலேயே மலரக்கூடியது.

- ஓஷோவின் வைரங்கள்!

.....

🍇மன்னுயிரும் தன்னுயிர்போல் எண்ணுவது சரியை ; மனு நீதியும் குரு மொழியும் தப்பா திருப்பது கிரியை; ஒன்றாமே அலையும் மனமொடுங்குவது யோகம்; எப்போதும் தற்பரமாய் நின்றதுவே ஞானம்.

✴️சந்திர சூரியரெனும் சுவாசமான வாசியானது நாளொன்றுக்கு 21,10,600 சுவாசமாய் நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருவது மனமாகவும் வாசியாகவுமிருப்பதில் நாள் ஒன்றுக்கு 12-வட்டமாயும் சந்திர பாகத்திலும், சூரிய பாகத்திலும் ஐம்பூதப் பிரிவாய்ப் பிரிந்து காட்டுகின்றது. 

.... .. .. 

இப்படிக் கலையில் நடக்கும் ஐம் பூதங்கள் அந்தக்கரண வியாபாரத்தால் அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளையும் க்ஷுணப்படுத்தி, நரைதிரை மூப்பை எளிதில் உற்பவம் செய்துவிடுகின்றன!

🌐ஒரு உருண்டையான ரப்பர் அல்லது துணிப்பந்தை மூச்சு நடக்கும் பக்கத்திய அக்குளில் நன்றாக அழுத்தி வைத்து, தலையை மூச்சு நடக்காத பக்கமாக சாய்த்து வைத்திருந்தால் நடக்காத கலையில் சுவாசம் நடக்கத் தொடங்கும்.

தரையில் படுத்து எந்தப்பக்கம் சுவாசம் நடக்கிறதோ அந்த பக்கமாக திரும்பிப்படுத்து, அந்த பக்கத்திய கையை தலைக்கடியில் கொடுத்து வைத்திருக்க மெதுவாக நடக்காத பக்கத்திய மூக்கில் சுவாசம் நடக்கத் தொடங்கும்.

அஷ்ட கர்மமாவன: பிராணாயாமத்தால் வாசியை வசப்படுத்திக் கடவுள் திருவருள்மீது மோகித்து, நித் திரையை நீக்கி கண் பார்வையைப் பகிர்முகப்படுத்தாமல், ஐம்பொறிகளை வித்துவேஷித்து, நானெனும் அகங் காரத்தைப் பேதித்து பூரணத்தில் மனத்தில் ஐக்கியஞ் செய்து, சஞ்சித வினைகளை மாரணம் செய்வதாகும்.

அஷ்டாங்க யோகமாவன: காமமாகிய இச்சையைத் தோன்றாமற்செய்து, தக்க ஆசனத்திருந்து, நாமரூபத்தை நாடும் மனத்தை இருதயாம்பரத்திலிருத்தி, புறவிடயங்களை நீக்கி, விகற்பமில்லாமல் தத்சொரூபத்தை நாடி, வெளி ஒலிதானே தானாய் ஒத்து நிருவிகற்பமாகுதலாம்!


No comments:

Post a Comment