எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, July 10, 2026

Ramanujar - 6

 *ராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பின் நித்ய கைங்கரியங்கள் தொடர்ந்து நடத்திவர ராமானுஜ மடம் ஒன்றை உருவாக்கினார். பிறகு அங்கிருந்து மதுரை சென்று கூடலழகரை வணங்கி வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த புலவர்களுடன் வாதிட்டு வென்றார். அதன்பின் திருமோகூர், திருதங்கால் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை சேவித்து திருவில்லிபுத்தூர் சென்றடைந்தார். திருவில்லிபுத்தூர் கோயிலுக்குள் புகும்போது ஆண்டாள் நாச்சியார் தன் நேர்த்திக் கடனை திருமாலிருஞ்சோலையில் தன் சார்பாக நிறைவேற்றியதால் தாமே நேரில் வந்து ஸ்ரீராமானுஜரை ‘வாரும் என் அண்ணனே’ என்று தன் மூத்த சகோதரராக விளித்ததாக கூறப்படுகிறது. அங்கு ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் தாய்வீட்டு சீதனம் சமர்ப்பித்து வாழ்த்தி வணங்கினார்.


**ராமானுஜரின் இளைய தாயார் தீப்திபதியின் மகன் கோவிந்தன். இவருடைய செயல்கள் யாவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானதாகத் தோன்றும். ஆனால், அவை பக்தியின் உத்தம இலக்கணங்கள்!

ஒருமுறை கோவிந்தன், தனது இடது கையில் பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு வலது கையினால் அதன் வாயினுள் தோண்டித் துருவிக் கொண்டிருப்பதை ராமானுஜர் கண்டார். வலியினாலும், வேதனையினாலும் அந்தப் பாம்பு துடிதுடித்தது. கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தப் பாம்பு, கோவிந்தனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடியது. கோவிந்தா, அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்ததால் நீ தப்பித்தாய், அந்தப் பரிதாபமான ஜீவனை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கி விட்டாய் என்று கடிந்து கொண்டார் ராமானுஜர்.

அண்ணா, அந்தப் பாம்பு எதையோ விழுங்கிய போது அதன் அடித்தொண்டையில் ஒரு முள் மாட்டிக் கொண்டு துடிதுடிக்கக் கண்டேன். அதன் வேதனையைக் கண்டுதான் இவ்வாறு செய்தேன் என்றார் கோவிந்தன். ஸ்ரீராமானுஜர் பெரிய திருமலை நம்பியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, குருவுக்குப் படுக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் கோவிந்தன். குருவின் படுக்கையில் கோவிந்தன் படுத்து எழுவதை ராமானுஜர் கண்டு கோபம் கொண்டு, என்ன ஒரு அபச்சார காரியம் செய்துவிட்டாய் கோவிந்தா? குருவின் படுக்கையில் படுத்து எழுந்தால் நரகம் நிச்சயம் என்பது தெரியாதா? என்று கடிந்து கொண்டார். குருவின் படுக்கை அவருக்கு சுகமாக உள்ளதா என்பதை சோதிக்கவே இப்படிப் படுத்து எழுந்தேன் அண்ணா. இச்செயல் அவரது சுகத்தை நிச்சயப்படுத்துமானால், அதற்காக நான் நரகத்தில் நித்திய வாசம் செய்யவும் தயார் என்றார் கோவிந்தன்! தனது சகோதரன் கோவிந்தனின் எளிமையையும், பணிவையும் உணர்ந்த ராமானுஜர், அவனைத் தவறாக எடை போட்டதற்கு வருந்தினர்.

***ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த  தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு  சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ர ங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத்  தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில்  கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.

ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க... ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு ராமானுஜர்  அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்!  ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன? எனக் கேட்டார். உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்? என்றார். சாமி, கிரு ஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே... அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க ÷ வண்டும்! என்றான். அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார் ரங்கநாதர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்க லே எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்கப் பார்த்துக்குவீங்க சாமி என்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம்  நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார். உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப் பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்.

திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!! - 6

pdf credit :- gopalavallidasar

text credit :- dinamalar

No comments:

Post a Comment