எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 18, 2026

daily worship - Murugan


அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் 
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் 
தோன்றும் முருகாவென் றோதுவார் முன். 1

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 2

"நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே." 3

"உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய், கதியாய் விதியாய்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!" 4

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்! 5

நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேநி றைந்த ...... குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த ...... மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் ...... மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே. 6

அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. 7

 ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. 8

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
இடத்தினில் அடக்கம் ஐயா. 9
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
மருகச ரவண முருகனே 

No comments:

Post a Comment