எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 18, 2026

daily worship - Ambal

தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா 
மனந்தரும் தெய்வ வடிவும் தருநெஞ்சில் வஞ்சம் இல்லா
 இனந்தரு நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
 கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே.1

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மை எல்லாம் காளி தெய்வலீலை அன்றோ 
பூதம் ஐந்தும் ஆனாய் - காளி பொறிகளைந்தும் ஆனாய் 
போதமாகி நின்றாய் - காளி பொறியை விஞ்சி நின்றாய் 
இன்பமாகி விட்டாய் காளி என்னுளே புகுந்தாய்
 பின்பு நின்னை யல்லால் - காளி பிறிது நானும் உண்டோ 
அன்பளித்து விட்டாய் : காளி ஆண்மை தந்து விட்டாய்
 துன்பம் நீக்கி விட்டாய் - காளி தொல்லை போக்கிவிட்டாய் - 2

வாழ்வுமானவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! 3

தெற்கில் விழி நோக்கும் தென்புலத்தார் அருள் நோக்கும்
கற்கடத் தலத் துறையாள் கலிநோய்கள் கரைத்தாங்கே
வற்கடமாய் வருதுயர்கள் வல்வினைகள் வாவினைகள்
பொற்சங்குச் சக்கரத்தால் போக்கியருள் வாளடியாள். 4

உய்வு அடைய வந்தென்னை, உணர்வின் மூல மாகவே
தொய்வு இல்லா மல் வாழ்வில், துணையாய் நின்று காக்கவே
பைய பைய விளிக்கின்றோம், பார்வையால் எம்மைக் காக்கவே
உய்ய வந்த அம்மாவே! உணர்வாய் என்னுள் இருந்திடவே
ஐய! இவரும் என்னென்று, யாரும் என்னை ஏசிடாமல்
பைய பைய உயர்வடைய, பணிவோம் எங்கள் அம்மாவே!
மெய்யாய் இருக்கும் அன்னையே, பொய்யாய் நாங்கள் போகிடாமல்
உய்ய உய்ய வாழ்வளிப்பாய் உண்ணாமுலைத் தாயே! 5

(கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காக்கும் 'உய்யவந்தாள்'
ஸ்ரீஅகஸ்திய கிரந்தத்தின் 'உய்யவந்த அம்மன் துதி”)

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள்
வாழி வாழியே! 6




No comments:

Post a Comment