எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, September 12, 2025

ஸ்வதா, ஸ்வாஹா

 தேவர்களுக்கு ஆஹூதி செலுத்துகையில் "ஸ்வாஹா" என்றும் பித்ருகளுக்கு சிரார்த்தம் முதலியவற்றில் "ஸ்வதா" என்றும் கூறவேண்டும்.

சப்தசதியில் பிருமம்மா அம்பிகையை துதிக்கையில்,
த்வம் ஸ்வதா த்வம் ஸ்வதா த்வம்ஹி
வஷட் காரா: ஸ்வராத்மிகா
என்று குறிப்பிடுகிறார்.

பிரும்மனுக்கு அம்பிகைதானே தாய். ஆகவே "ஸ்வதா" என்றும் கூறினார்.
..... எங்கும் பிரளயம் ஆனதால் வேள்வி செய்ய வசதி இல்லை. எனவே மானஸீகமாக ஸ்வாஹா என்ற சொல்லாலே பிரும்மா யாகம் செய்து விடுகிறார்.

ஸ்வ ஆஹ என்பதே ஸ்வாஹா ஆயிற்று. ஸ்வ ஆஹ என்றால் தானே பேசிய பேச்சு என்று பொருள். அதாவது பராசக்தி தனக்குத்தானே தத்துக்கொண்ட சப்த விளக்கமே இப் பரபஞ்சமாக விரிந்தது. பிரபஞ்ச சிருஷ்டியே ஒரு வேள்விதான். ஸ்வதா என்றால் தன்னியல்பாக ஏற்பட்டது என்று அர்த்தம். தத்துவ ரீதியில் இப்பிரபஞ்ச வாழ்வனைத்துமே பராசக்தி தனக்குத்தானே ஸ்வயமாகத் தத்துக்கொண்ட ஸ்வதாதான்.

முதலில் பிரும்மா மனதையே படைத்தார். ஆதலின் மனதும் யக்ஞமும் பிரும்மாவையே தமக்கு அதிஷ்டான தேவதை களாகக் கொண்டன. மனதினால் யாக தேவதைகளை நன்கு தியானம் செய்து கர்மா செய்ய வேண்டும். இரண்டையும் பிரிக்கக்கூடாது. மனதை வேறு இடத்தில் வைத்துக்கொண்டு எந்த கர்மாவையும் செய்யக்கூடாது.

வைஸ்வாநரன் :-

ஸுஷும்னா நாடிக்குள்ளே ஒரு பெரிய அக்நி இருக்கிறது. அதுநாம் உண்ணும் உணவை முதலில் உட்கொண்டு பிறகு அதைப் பிரித்து அந்தந்த ஸத்துடன் சேர்க்கிறது. எல்லாவற் றையும் ஜீரணம் செய்கின்ற அந்த அக்நி தான் ஜீரணமாவதில்லை.
அது சாதாரண தீயில்லை. ஈஸ்வரன், "வைஸ்வாநரனாக இருந்து ப்ராணிகளின் உடலை அண்டி வசிக்கிறேன் உண்ணும் போது "ப்ராணாய ஸ்வாஹா" என்று என்னை நாடி எனக்கு முன்னே ஹோமம் செய்கிறார்கள் அந்த ஆகாரம் மண்ணாகவும். ஜலமாகவும், அக்நி வடிவமாகவும் இருக்கிறது. அதை நான் பக்குவம் செய்து ஸ்தூலமான மண் அம்சமான ஆகாரத்தை மலத்துடன் சேர்க்கிறேன். மத்யமானதை மாமிஸாகவும் ஸூக்ஷ்மமானதை மனதாகவும் செய்கிறேன்" என்பது பகவான் பகவத்கீதையிலும் உபநிஷத்திலும் கூறுகிறார். அதனால்தான் நாம் உண்ணும்போது பயபக்தியுடன் உண்ண வேண்டும். இறைவன் வைஸ்வாநரன் என்ற அக்னியாக இருக்கிறார்.

நஜனின் தேவி புவனேஸ்வரி - நூல்

எளிய இயற்கை வைத்தியம்

தாது என்பது விந்து
தாது பலப்பட
ஓரிதழ் தாமரை இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாது பலவீனம் தீரும்
அம்மான் பச்சரிசி இலையை தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வர தாது பலப்படும்
அம்மான் பச்சரிசியை கீழாநெல்லியுடன் சமன் கலந்து காலை மதியம் இரு வேலையும் எருமை தயிரில் உண்ண தாது இழப்பு தீரும்
கருவேலம் பிசின் நெய்யில் வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட தாது பலப்படும்
ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தாது வளர்ச்சி அடையும்
துளசி விதை சூரணம் ஐந்து அரிசி எடை தாம்பூலத்துடன் சேர்த்துக்கொள்ள தாது கட்டும்
வறுத்த திப்பிலி பொடி அரை கிராம் தேனில் காலை மாலை கொடுத்து வர தாது இழப்பு தீரும்
கோரைக்கிழங்கு சூரணம் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொள்ள தாது விருத்தி உண்டாகும்
தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது பலம் மிகும்
பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் சேர்த்து நெய்யில் கொடுக்க தாது இழப்பு தீரும்
தாலிக் கீரையை பருப்புடன் சமைத்து நெய் சேர்த்து உண்டு வர விந்து இழப்பு நீங்கி தாது பலப்படும் உடல் குளிரும்
விடத்தேர் பிசினை உலர்த்தி பொடித்து மூன்று கிராம் சிறிது கல்கண்டு பொடியுடன் பாலில் கலந்து சாப்பிட தாது பலம் மிகும்
பிராயன் பாலில் தேவையான அளவு வறுத்த கடலை மாவு பிசைந்து பட்டாணி அளவு மாத்திரை ஆக்கி காலை மாலை இரண்டு மாத்திரை சாப்பிட்டு வர தாது பலம் மிகும்.
குமரி என்னை காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுக்க தாது இழப்பு தீரும் காரம் புளி நீக்க உணவு கொள்க
கானா வாலை சமூகம் தூதுவேளை பூ முருங்கைப்பூ ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ள தாது பலப்படும்
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண தாது விருத்தி அடையும்
காரை பழத்தினை காலை மாலை உண்டுவர உள் வெப்பமகன்று தாது பலப்படும்
நீர்முள்ளி விதை சூரணம் 40 கிராம் நெருஞ்சில் விதை 20 கிராம் வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டராக காய்ச்சி பனங்கல்கண்டு கலந்து காலை மாலை 100 மில்லி அளவாக ஒரு வாரம் கொள்ள தாது பலம் உண்டாகும்.

Thursday, September 11, 2025

காஞ்சி

 காமாக்ஷி தத்துவம்

'காம' என்னும் 51 அக்ஷரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாக்ஷி. 'கா' என்றால் ஒன்று. 'ம' என்றால் ஐந்து. 'க்ஷி' என்றால் ஆறு, அதாவது ஐந்து திரு நாமங்களையும் சக்தி பேதம் மூன்று, சிவ பேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள்.

மற்றும் 'கா' என்றால் சரஸ்வதி. 'மா' என்றால் மகேஸ்வரி. 'க்ஷி' என்றால் லக்ஷ்மி. அக்ஷி என்றால் கண்.

அக்ஷியை தன் பெயருடன் உள்ள அம்பிகைகள் காமாக்ஷியைத் தவிர்த்து

மீனாக்ஷி (மீனைப் போன்ற கண்ணையுடையவள்)
விசாலாக்ஷி (விசாலமான கண்களையுடைவள்)
நீலாயதாக்ஷி (நீலோத்பல மலர் போன்ற கண் கலையுடையவள்)
பங்கஜாக்ஷி (தாமரைப் போன்ற கண்களை உடையவள்)
முதலியவர்கள். இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள் காமாக்ஷி.

அம்பிகையின் கடைக்கண் கடாக்ஷம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த அம்பிகைகளின் பெயர்கள் எல்லாம் (அக்ஷி) கண்கள் சம்பந்தமாகவே இருக்கின்றன போலும்.

காஞ்சியில் 5000 சக்தி ஆலயங்கள் இருந்ததாக காஞ்சிபுராணம் கூறுகிறது.
காமாட்சி ஆலயமுள்ள காமகோட்டத்திற்கு ஸ்ரீபுரம், பத்மநாயகம், ஜீவன்முக்திபுரம், காமகோடி என்ற பெயர்கள் உண்டு. வசிஷ்டரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்ட "சிந்தாமணி" என்ற தந்திர நூலில் பஞ்சபூத பிடங்களில் ஒன்றான ஆகாச பீடமே இக்காமக் கோட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது.

இங்கு 108 சிவாலயங்களும் 18 விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. பாடல்பெற்ற பதிகளில் புகழ் பெற்றது காஞ்சி மாநகரம் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய திருத்தலத்தில் அருள் பாலிக்கும் எண்ணற்ற திருச் சன்னிதிகளை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியவர்கள் பாக்யசாலிகள். இயலாதவர்கள் இந்த எழுபத்தி ஒரு சன்னிதிகளை நினைவிற்கொண்டு அருள் பெறலாம் அல்லவா அந்த புனித சன்னிதிகளின் பெயர்கள்: