எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 13, 2013

ஆவணி பூசம்

போகர்  ஏழாயிரம் 


என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் 
எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்

பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை 
சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்

துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் 
பிறந்ததொரு நேர்மையப்பா

சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் 
முதற்பூசங் கால்தானொன்றே

                                         பாடல் எண் - 5941.


ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் 
வடிவேலர் பிறந்தாரென்று

குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் 
குவலயத்தில் சொல்லொண்ணாது

தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் 
செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்

பன்றிபெருச் சாளியின்மேல் சாரியேகும் பண்பான 
விநாயகருக்கு தம்பியாமே

                                                  பாடல் எண் -5942.


தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி 
வடிவேலர் சித்துதன்னை

வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி 
வடிவேல ரென்றேசொல்வார்

கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான 
கோடிபொருள் ஈவாரப்பா

தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான 
வடிவேலர் தண்மைபாரே
                                                        பாடல் எண் -5943.


போகர் பெருமான் சுட்சுமும்மாக எப்படி வேண்டுமாயின் கூறியிருக்கலாம் .., நேரடி பொருள் கொண்டால் அவை பல விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் ., பல குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் .., அன்று ஒர் மகா விசேஷ தினம் என்றவாறாக எடுத்துக் கொள்ளுதல் நலம் ..,  ஒரு கூடுதல் குறிப்பு ஒவ்வொரு பூச நட்சத்திரதையும் முடிந்த  பூஜை வழிபாட்டுடன் முருகப் பெருமானை வழிபடுதல் பரிபுரன அருளை பெற்றுத் தரும் .. முருகப் பெருமானின் அருள் பெற்றால் .. அகத்தியர் ., போகர் முதல் சர்வ கோடி சித்தர்களின் அருள் கட்டாயம் வார்க்க பெரும் ..
                           ( இந்த வருடம் செப்டம்பர் 2ஆம் தேதி ஆவணி பூசம் )


புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச் 
சத்தியும் நீ ! சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச் 
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியும் நீ ! அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
                                                         -- அகத்தியர் 


இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம் 

3 comments:

  1. PLEASE CHANGE THE BACK GROUND COLOUR, IT IS VERY HARD TO READ.AND IT IS IRRITATING THE EYES................................

    ReplyDelete