எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, March 25, 2017

வாமாச்சாரம்.....,


••• பலரும்... சில உபாசனை முறைகளில்... மீன் , மது , மாமிசத்தை வைத்து பூஜை.. செய்ய வேண்டும். எனக் கூறுகின்றனர்... எந்த சித்தர்களும்.. எக்காலத்திலும்..., எந்த உபாசனாமார்கத்திளும்.. கூறிப்பிடுவதலில்லை..
••• உதாரணமாக.. சித்தர் பாடல்களை.. படித்தால்.. அவர்களின்.. நிகண்டு.., மறைப்புசூத்திரத்தை... படித்தால். தான். விளங்கும்.. இல்லையேல்.. அண்டகோழி என்பதை.. கோழி முட்டை.. என்று.. புரிந்து கொண்டு. ஒலப்பி கொழப்பி.. கடைசியில்... ஆப்பாயில்.. ஆம்பளேட் தான்.. சாப்பிட வேண்டும்..,
••• மேலும் வாமச்சார பூஜை.. என்பது.., இந்த யுகத்திற்க்கான.. நியதியல்ல. என்பதையும் புரிந்து.. கொள்ள வேண்டும்..., அதைபோல். எந்த சித்தரும்.. பெண் போகத்தில்.. ஆழந்தவர்.. கிடையாது...., அவர்கள்.. கூறும் பெண் தத்துவம் வேறு...,.

••• “உடலில் உள்ள பாண்டவ சக்திகளையும்.. கௌவர சக்திகளையும். உண்ர்விப்பதே.. மஹாபாரத காவியமாகும்... உள்ளுள்..ஒளிர்வதே ஒப்பற்ற காவியமாகிறது....” -- என்பதையும் உணர்தல் வேண்டும்.. இதை.. விடுத்து.. நம் புராணங்களையும்.. இதிகாசங்களையும்... இவர்களுக்கு இத்தனை.. மனைவிகள்.. இத்தனைகண்வர்கள்..               என நாமே அறியாமையால் நகைப்புக்குறியதாக.. ஆக்க கூடாது...., “

என்றைக்கு உங்கள்.. நிழல் உங்களுக்கு உங்கள்.. குருவாக.. தெரிகிறதோ... அன்றைக்குத் தான் குரு உங்களை.. நிழல் போல்.. தொடர்ந்து காக்கிறார்... கண்காணிக்கிறார்... என்பது புனலாகும்...., நீங்களும்.. குருபக்தியில்.. மெய்குரு பாதையில் செல்கறீர்கள்.. என்பது பொருள்... கண்ணாற காண வேண்டும்..

•••.ITS THE FIRST SPIRITUAL QUALIFICATION TEST* அப்பறம்.. தான்... குருவுஞ் சீடனும் கூடிக் கலந்து 
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிழைப் பொய்யென றுணர்ந்து
மவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னினணயடி யிருத்தி மனத்தே….

••• எனும் நக்கீரர் விநாயகர் திருஅகவல்.. கூற்று.. மெய்பிக்கும்...,••• அது வரை... பாசககயிறு.. அறுபடாது....

••• மிக முக்கியமாக உபாசனை செய்பவர்கள்... சுவாமிக்கு... தேவயற்றவனற்றை,,,,,,,,.. படைத்து..., தோசங்களை தேடிக் கொள்ள வேண்டாம்.. என்பதற்காக.. கீழ்காணும்.. விஷியத்தை... பகிர்ந்து..கொள்கிறேன்...

••• ஆத்மாவும் அம்பிகையும் இனைவது மைதுனம்...,

இந்தத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல்.. வாமாசார வழிபாட்டில்.. மதுவையும்..., மீனையும் ..., மாமிசத்தையும் .., மைதுனத்தையும்.. கொண்டு... வழிபட்டு... வந்திருக்கிறார்கள்.., இதனால்.. வாமாசார முறைக்கே கெட்ட பெயர் ஏற்ப்பட்டது...,

••• மாத்யா , மாம்ஸா , மச்சா , முத்ரா , மைதுனா என்ற இவை ஐந்தும் “ம” காரத்தில் ஆரம்பிப்பதால் பஞ்ச மகரம் எனக் கூறப்படும் .. ஆகமசாரம் என்ற நூலில் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

••• மாத்யா என்ற போதை தரும் பானம் [ சாதாரண *கள் அல்லது மது* அல்ல ] பிரும்மரந்திரம் என்ற ஆதாரத்திலிருந்து கிடைக்கும் “அமிர்தம்” மாம்சம் நாக்கையும் அதன் உதவி கொண்டு பேசும் பேச்சையும் குறிப்பிடுகிறது ..,

••• மச்சம் அசைந்து கொண்டே இருக்கும் .. [ மீன்கள் ஒரு நிமிஷம் சும்மா இருக்காது ]..., இடை பிங்கலை... நாடிகளை இது குறிக்கிறது..., சகஸ்ரார பத்மத்தில் தூண்டப்படும்... அறிவை முத்திரை... குறிக்கிறது...

••• மைதுனத்தின் இரகசியம்... பொருளாவது...:

செந்நிறமான “ர” என்ற எழுத்து... குண்டத்தில் இருக்கிறது..., “ம” என்ற எழுத்து விந்துவில் உருவத்தில்.. யோனியில் இருக்கிறது .. அகர உருவில் ஹம்சத்தில்..உட்கார்ந்திருக்கும் மகரம் ரகரத்தோடு சேருகிறது...,

••• இதனால்.. சாதகன் பேரின்பத்திற்கு அடிப்படையான பிரும்ம ஞானத்தை அடைகிறாள்., சாதகனுக்கு இப்போது.. “ஆத்மா ராமா” என்ற பெயர்..., அவள் ஆத்மா , சகஸ்ராரத்தில் இருந்து கொண்டு.. இன்பத்தை அனுபவிக்கும்...,
••• ஆவரண பூஜையின் மாத்யா என்பது .. அம்ருதமான விசேஷோர்க்யம்..., மாம்சம். எனப்து இஞ்சித் துண்டு..., வாயினால் சொல்லும்.. மந்திரத்திற்க்கு இது சூசகப் பொருள்.., உயிரான ஆவியிலிருந்து கிளம்பும் ஒளி உடலின் (நாக்கு) உறுப்பால் .. வெளிப்பட்டு பொருளான இஞ்சி மூலம் அர்ச்சிக்கப்படுகிறது ....

••• ஆதாவது.. உடல் .., பொருள்.., ஆவி மூன்றையும் பூஜையில் ஈடுபடுவதாக .. அர்த்தம்..--- ஸ்ரீவித்யா தேவி நவாவரண பூஜை.... ஆசிரியர் நஜன்.

---------------------------------------------------------------------------------.
••• மேலும்… அமுரிக்கான பரிபாஷை
•••பார்த்திபனே அகாரமடா விந்து விந்து
பதிவான விந்துவடா சாரமாகும்
சாற்றியதோர் சாரமது அப்பு அப்பு
சங்கையில்லை அப்பதுவுந் தண்ணீர் தண்ணீர்
போற்றியே தேகந் தண்ணீர் வெண் சாரையாகும்
தெவிட்டாத சாரையடா அமுரிதானே

•••அமுரிக்கு பேர் மாத்திரம் சொல்லக் கேளு
            அப்பனே சந்திர புஷ்கரணி என்றும்
              கரகமதில் ஊசிநீர் ரோம நீ ரென்றும்
           கண்மணியே சொல்வார்கள் அநந்த நாமம்....

••• ***பூசை நெறி யறியாமல்*** ஆண்பெண் இரண்டும்
பொல்லாத மாய்கை வலை தன்னில் சென்று
ஆசைகொண்டு மோகமதில் அறிவு கெட்டு
அங்கமென்ற சங்கதியை யறியாமற்றான்
பாசமென்ற பல ருசியால் மாண்டார் கோடி
ஓசையென்ற சத்தம் உதித் தடங்கும் வீட்டை
உத்தமனே மனக் கண்ணால் நித்தம் பாரே.. •••

•••நூல் : அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
-------------------------------------------------------------------
அகத்தியெம்பிரான் கூறியது.. போல்.. “ பூசை நெறி.. “ அறிந்து.. பூஜை செய்யுங்கள்.. அன்பர்களே.....
-- 
ஸ்ரீ அகஸ்திய விஜயம் தான் குரு காட்டும் பாதை 

2 comments:

  1. Please give your contact no I have to speak with you my email Phasis3@yahoo.com

    ReplyDelete
  2. சிவசிவ அருமை பணிந்த வணக்கம் 🙏

    ReplyDelete