எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 26, 2018

மீனாய் பிறக்கும் விதிவுடையேன் ஆவேனே !

“வேதமாதவன் செய்த சேவையைப் பற்றிக் கொஞ்சம் கேளுங்கள்.., இது ராமாயண காலத்தில் நிகழ்ந்த  அனுபூதி!  

அனுமாருடைய சேவை அணியில் இருந்த பையனே வேதமாதவன்., அக்காலத்தில் பள்ளிகள் கிடையாது. 5வயதில் சத்குருவின் பாடசாலையில் பிள்ளைகளை விட்டு விட்டு, 12 வயதில் பிள்ளைகளை வந்து கூட்டிச் செல்வார்கள். இவ்வகையில் குருகுலவாசமாக, அனுமாரின் குருகுலவாச சாலைக்கு வந்தவனே வேதமாதவன். ஆஞ்சநேயரின் ஆன்மீக சேவைப் படையில் இருந்த வேதமாதவன், பூத்தொடுத்தல், ஆலயத்தைச் சுத்தம் செய்தல் போன்று சிறு சிறு சேவைகளைச் செய்து வந்தான். சிறுவயதில் இருந்தே அனுமாரிடம் பக்தியும், அபிமானமும் கொண்டிருந்தான். எப்போதும் ‘ராம நாமம்‘ ஜபித்தவாறு ராமாநாம ஸ்மரணையில் இருப்பவரே அனுமார் என்று, கேள்விப்பட்டான். அவரைப் போலவே எந்நேரமும் ராமநாமம் ஓதுதல் வேண்டும் என்று உறுதி பூண்டு எப்போதும், பணிகளின் இடையேயும் கூட ராமநாமம் ஓதி வந்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு எந்த மந்திரத்திலும் நாட்டம் ஏற்படவில்லை! வேறு மந்திரங்களை ஓதும் போதும் மன ஓடையினுள் ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்கும் மனோசக்தியையும் சிறு வயதிலேயே பெற்றான்.

“ஹே மாதவா!“ என்றால் திரும்பிப் பார்க்க மாட்டான்., “வேதமாதவன்“ என்று முழுப் பெயரையும் கூப்பிட்டால்தான் திரும்பிப் பார்ப்பான். இப்படியாக “வேதமாதவன்“ ,அனுமாருடைய சேவகத் துறையில் இருந்து கொண்டு, பலருக்கு பல்வகையான உதவிகளை அசராது ஆற்றி வந்தான்., ஒரு நாள்...

நல்ல மழையில் ஒரு பக்க்திக் குழுவினரைக் கடலுக்குள் இருந்த திட்டைக்குத் தர்ப்பணப் பூஜைக்காக அழைத்துச் சென்றான். திரும்பி வருகையில் நல்ல மழை பெய்து, படகினுள் நீர் பெருகியது., எப்படியோ ஒரு வழியாய்ச் சமாளித்து அவர்களுடன் கரை வந்து சேர்ந்தான்., மறுநாள் காலை, வேதமாதவன் கடற்கரைக்குச் சென்ற போது அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் படகில் நீர் நிரம்பிய நிலையில் கஷ்டப்பட்டுக் கரை சேர்ந்த வேதமாதவன். கடற்கரையில் படகை விட்டு விட்டு வந்தானல்லவா? படகில் இருந்த நீர் சிறிது சிறிதாக வடிந்து, அதில் சிக்கிய ஒரு மீன், படகில் நீர் முழுதும் வற்றியமையால் , வெளிச் செல்ல வேறு வழி இல்லாமையால், இறந்து கிடந்தது போலப் படகினுள் கிடந்தது., “தன் கவனக் குறைவால் தான்“ இது நிகழ்ந்தது என்று வேதனையுற்ற வேதமாதவன் மிகவும் வருத்தமுற்றான். இந்த மீனை மீண்டும் நீரில் விட்டு விட்டால், பிற பெரிய மீன்கள், நண்டுகள் இதனைக் கடித்து தின்று விடும். அப்படியே படகிலோ, தரையிலோ விட்டாலோ, பறவைகளும் கொத்திக் கொத்தி அவைகட்கு உணவாகக் கொண்டு விடும். தன்னுடைய கவனக் குறைவால் இறந்த அந்த மீனுக்கு ஏதேனும் செய்து, அது நற்கதி அடைய வேண்டும் என்று விரும்பினான். எனவே, மீனுக்கான காருண்யத் தர்ப்பணம் செய்ய விழைந்தான். ஆனால் எப்படிச் செய்வது? இதற்கு “அனுமார்தான் நல்வழி காட்ட முடியும்! என்று அவன் எண்ணினான். அவன் அனுமார் சேவையில் இருந்தானே தவிர, ஒரு நாள் கூட அவரை அருகில் இருந்து தரிசித்தது கிடையாது..

மீனின் நற்கதிக்காக, மிகுந்த வெறியுடன், வெகு வேகமாக, வேதமாதவன் “ராம்,ராம் என்று ஓதலானான். படகில் கிடந்த மீனைக் கையில் எடுத்த சிறுவன், அதனைக் கண்டு வேதனையில் துடித்து மென்மேலும் தன்னை மறந்த நிலையில், “ராம்ராம் என்றவாறு உரக்கவும் ஜபிக்கலானான். என்ன ஆச்சரியம்! அவன் ராமநாமம் ஜபிக்க ஜபிக்க, அந்த மீனுக்கு ஜீவத் துடிப்பு வரத் தொடங்கி, அதன் உடல் சற்றே அசையலாயிற்று. ஆனால் அவன் ராம் நாமத்தை ஓதுவதை நிறுத்தி விட்டாலோ அந்த மீன் மறுபடியும் அசைவற்று முன்பு போலவே கிடக்கும். எனவே, அவன் மிகவும் பக்தி சிரத்தையுடன் ராம நாமம் ஓதியவாறே அதற்கு உயிர்த்துடிப்பு வந்தவுடன், நீரில் விட்டு விட்டால் அது பிழைத்துச் சென்று விடும் என்று எண்ணினான் ஆனால் அவன் கையில் இருந்து கொண்டு அவன் ராமநாமம் ஜபிக்கும் போது மட்டுமே, அது உயிர்த்துடிப்புடன் நன்கு அசையும், சிறிது நேரம் ராம ஜபத்தை நிறுத்தி விட்டாலோ, மீண்டும் அதன்  உடல் அசைவற்றதாகி விடும். அதனைச் சிறிது தண்ணீரில் விட்டுப் பார்த்து, “ராம்ராம் என நீருக்குள்ளும் ஓதிப்பார்த்தான். ஆனாலும் அவன் கையில் இருந்தால் தான், அந்த மீனுக்கு உயிர்த்துடிப்பு வந்ததே தவிர, அவனை விட்டு அகன்றால், அது அசைவற்றே கிடந்தது. இப்போது வேதமாதவனால் என்ன செய்ய முடியும்? அந்த மீனுக்கு ஜீவன் இருக்க வேண்டுமானால் , தன் கையிலோ , இடுப்பில் துணியிலோ வைத்துக் கொண்டு இருந்தால் தான் அவனால் அதற்கு ஜீவசக்தி அளிக்க முடியும் என்றாகி விட்டதே! எனவே, எவரும் அறியா வண்ணம் ,அந்த மீனைத் தன் இடுப்பு முடிச்சில் வைத்துக் கொண்டு, “ராமராம என்று ஓதி, ஓதியே பிற பணிகளைத் தொடர்ந்தான்.,

மீண்டும் என்ன ஆச்சரியம், அந்த மீனிடம் இருந்து எவ்விதமான நாற்றமும்  வரவில்லை! மாறாக, நல்ல சந்தன நறுமணம் ஏற்பட்டு, அந்த இடமே கமகமவென்று மணத்தது. அவ்வப்போது வேதமாதவன் மீனைத் திறந்து பார்த்துக் கொள்வான். அந்த மீனுக்கு ஜீவசக்தி அளிப்பதற்காகவே அவன் இராப்பகலாக உறங்காது, ஓயாது, ராமநாமம் ஜபிக்க ஜபிக்க.... இவ்வாறாகப் பல நாட்கள் கடந்தன,


·    தக்க உணவு, ஓய்வு உறக்கம் இல்லாமையால் அவன் உடலும் பலத்த பாதிப்புக்கு ஆளாகியது. இவனுடைய அதீத நிலையையும், குன்றி வரும் ஆரோக்யத்தையும் கவனித்தவர்கள்., அவனிடமிருந்து அபூர்வமான சந்தன மணம் எழுவதையும், அடிக்கடி இடுப்பில் மீனைப் பார்ப்பதையுமாக.., இருப்பதைக் கண்டு அனுமாரிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.. 


அவரோ நிகழ்ந்ததை எல்லாம் தீர்க தரிசனமாக உணர்ந்தறிந்து. “அந்த மீனுக்கு தன் ராமநாம ஜபப் பலன்களை எல்லாம் வேதமாதவன் அர்ப்பணித்து வருகின்றான். அந்த மீனுக்கு ராமதரிசனம் கிட்டிட வேண்டும்,., இதன் மூலம் தான் இந்த அனுபூதிக்கு ஒரு முடிவு கிட்டும்! என்று உறுதியாக உரைத்து விட்டார்., அனைவரும் வேதமாதவனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். வேதமாதவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த மீனுக்கு ராமதரிசனம் கிட்டும், வரை தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அவன் கவலைப்படவில்லை. அந்த மீனுக்கு “எவ்வாறு ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவது என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. எனினும், சீதாப் பிராட்டி தந்த துளசி மணி மாலையை அணிந்து, அதன் மணிகளைச் சுவைத்து ராமநாமச் சுவையைச் பகுத்துரைத்த அனுமார், தன் நெஞ்சைத் திறந்து காட்டி “ராமதரிசனம் பொலிவதை உணர்த்தியதை நினைத்துக் கொண்டான். எனவே, அனுமாரின் ஹிருதய தரிசனம் மூலம், இந்த மீனுக்கு உரிய ராம தரிசனத்தைப் பெற்றுத் தர முடியும் என அவன் உறுதியாக நம்பினான். அவன் மிகவும் தைரியமாக அனுமாரின் அருகில் சென்று, எதையும் கேட்காமல் அவரருகே சென்று நின்றான், அவன் வருகையின் காரணத்தைத் தீர்க தரிசனமாக உணர்ந்த அனுமாரும், 

“வேதமாதவா! ராம தரிசனத்தை நீ பெற்றால்,  உன் கண்கள் பார்வையை இழந்து விடும்! உனக்கு இன்னமும் நேத்ர சக்திகள் நன்கு விருத்தியாக வேண்டும். நீ பார்வையை இழப்பதை நானும் விரும்பவில்லை. இந்த மீனோ உன் கையில் இருந்தால் தான் ஜீவசக்தியுடன் இருக்கும்! இப்போது என்ன செய்வது என்பதை நீயே சொல் பார்க்கலாம்! என்றார்.

வேதமாதவன் சற்றும் யோசிக்காமல், “பிரபோ! அடியேன் பார்வை இழப்பதைப் பற்றிச் சற்றும் வருத்தம் இல்லை! அடியேனுடைய பிழையால் இந்த மீனுக்கு ஏற்பட்ட கதியில் இருந்து எப்படியாவது அது மீண்டு நற்கதியை அடைய வேண்டும். அடியேன் கண்களை நன்றாக இறுக்கி மூடிக் கொள்கிறேன்! இந்த மீனுக்காவது ராமதரிசனத்தைப் பெற்றுக் கொடுங்கள்! என்று பக்திப் பெருக்கால் உரைத்தான். “ராம் ராம் என்று பெருங்குரலில் ஓதியவாறே அவன் கண்களை நன்கு இறுக்கி மூடிக் கொண்டது மட்டும் அல்லாமல், கண்களைச் சுற்றித் துணியையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு விட்டான்., வீணதாரியாகக் காட்சி தந்த ஆஞ்சநேயர், உடனே வீணையை எடுத்து மீட்டி, நாதஜோதியின் மூலம் அந்த மீனுக்குத் தன் நெஞ்சில் நிறைந்த ராம தரிசனத்தைப்,பெற்றுத் தர..., அது ஜோதி வடிவாய் வானில் மறைந்து முக்தி நிலையைத் தழுவியது, .ஆஞ்சநேயர் வேதமாதவனைத் தழுவி, அவனுடைய தியாகத்தை மிகவும் மெச்சிப் போற்றினார்., வீணையைத் தாங்கியவராய் ஸ்ரீஆஞ்சநேயத் தரிசனம் தந்தார்.,,

“இவ்வாறு, அப்பழுக்கற்ற ராம பக்தியைப் பூண்டதினால், ராம தரிசனம் தானாகவே முக்திக்கும்,! ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே! என அருளினார்.,, இப்போது வேதமாதவனுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டு விட்டது! “ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே என உரைத்து விட்டாரே! ராம தரிசனத்தை விடப் பெரியதா முக்தி நிலை?

அனுமன் திகைத்துப் போனார்! “ராமநாமத்திற்கே, ராமதரிசனத்தையும் முக்தியையும் பெற்றுத் தரவேண்டிய கடமை உண்டே! ராம தரிசனத்தை விட முக்தி நிலை பெரிது என்பது போலன்றோ நாம் உரைத்து விட்டோம்! என அவரும் மலைத்துப் போனார்.., எனவே அவர் வேதமாதவனிடம், “ராமநாமமே உனக்குக் கலியுலகில் ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவதாக! என்று வரமளித்தார்.., ஸ்ரீராமரும் திரேதா யுகத்தில் அயோத்யாவில், சரயு நதியினுள், நேரே உள் இறங்கித் தன் அவதார நிறைவைப் பூர்த்தி செய்தார் அல்லவா! அப்போது மீன் வடிவில் அனைவருக்கும் காட்சி தந்தார்.., 

கலியுகத்தில்  ஆஞ்சநேயர் வாக்காக, தியாகராஜ சுவாமிகள் தான் பூஜித்த ஸ்ரீராமர் பரிவாரச் சிலைகளை ஆற்றிலே தூக்கிப் போட்டு மீண்டும் பெற்ற அனுபூதியை அறிவீர்கள் அல்லவா!  இவ்வாறாக அச்சிலைகளில் “ஸ்ரீராமரின் மச்சவாத்சல்ய ஸ்பரிசம் கிட்டிய பிறகே,, தியாகராஜ சுவாமிகளுக்கு ஸ்ரீராமரின் திவ்ய தரிசனம் கிட்டியது. மேலும் 96கோடி முறை ராமநாமம் ஓதி சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீராமதரிசனம் பெற்ற அனுபூதி நினைவுக்கு வருகிறதா! எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் , பிள்ளைகளே ராம், ராம் என எப்போதும் ஓது வாருங்கள்!!

ஸ்ரீஅகஸ்திய விஜயம் --- 2005 "ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்!"

மீன் வளர்ப்பு என்பது குடும்பத்தில், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் அறப் பணியே. மீன் வளர்ப்பதற்கு முன் அவற்றின் தெய்வீகத் தன்மைகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். மிகவும் சுத்தமான ஒரு ஜீவன் என்று சொன்னால் மீனைச் சொல்லலாம். உப்பு நீரிலேயே இருந்தாலும் அதன் உடம்பில் உப்பு சேர்வதில்லை. அதன் தெய்வீகத் தன்மை பற்றியே சிவபெருமானும் செம்படவனாக வந்தார், அன்ன பராசக்தியும் மீனாட்சியாக மதுரையில் தோன்றினாள். பெருமாளும் மச்ச அவதாரம் கொண்டு பூவுலகைக் காத்தருளினார்.


பல மகான்களும் மீன்களின் நல்வாழ்விற்காக அருந்தொண்டாற்றி வந்துள்ளனர். காசி ராஜனின் மகள் உருபதி என்பவள் மீன் குலத்தின் நன்மைக்காக அரும் பெரும் பூஜைகள் செய்தவள். மீன்கள் முக்தி பெற வேண்டும், தண்ணீருக்குள் கண் சிமிட்டாமல் காட்சி பெற வேண்டும், கடல் வளம் பெருக வேண்டும். அது மட்டுமல்ல உலகம் உய்வடைய உத்தம மகனைப் பெற வேண்டும் என்று இவ்வாறு பல உத்தம பிரார்த்தனைகளுடன் வாழ்ந்த உருபதியே மச்சகந்தி என்னும் பெயருடன் கங்கையில் படகோட்டியாய் வந்தாள். அப்போது பராசர மகரிஷி அப்படகில் ஏறி வரவே அவர் மூலம் புனித கங்கையின் சாட்சியாக மச்சகந்தி வியாச மகரிஷியைக் குழந்தையாகப் பெற்றாள். பராசரரும், மச்சகந்தியும் கால நேரம் எதையும் செய்யும், எத்தகைய தெய்வீகப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என்ற இறை நியதிக்கு கருவியாய்ச் செயல்பட்டவர்களே. பராசரர் புதல்வரான வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் காமத்தை முறைப்படுத்தும் காமசூத்திரங்களையும் உலகிற்கு அளித்துள்ளார்.

மீன் கண்களையுடைய மீனாட்சியாய் மதுரையை ஆட்சி செய்த பராசக்தியின் வல்லமை நீங்கள் அறிந்ததே. கண்களாலேயே ஆட்சி செய்தவள் மீனாட்சி. இன்றைக்கும் உண்மையான ஆளுமைத் திறன் உள்ளவர்கள் தங்கள் பார்வையாலேயே அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள் மீனாட்சி தேவியின் மகிமை அறியாது ஒருமுறை மதுரை மீது படை எடுத்து வந்தபோது அம்மை போர்க்களம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த போர் யானைகளின் உயரம் குறைந்தது 200 அடி இருக்கும். அப்படி 200, 300 அடி உயரம் கொண்ட போர் யானைகள் எல்லாம் குதிரை மேல் பாய்ந்து வரும் தேவியைப் பார்த்தவுடன் தரையில் மண்டி இட்டு வணங்கின. பராசக்தியைப் பார்த்த மன்னர்கள் எல்லாம் தங்கள் தேரிலிருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கினர். கண்களால் அனைத்துப் பகைவர்களையும் வென்று வெற்றி வாகை சூடினாள் மீனாட்சி.


மீன்களில் சாத்வீக குணமுள்ள மீன்களையே வளர்க்க வேண்டும். கோல்ட், ஏஞ்சல், மூன் லைட் போன்ற பெயருள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறப்பு. பைட்டர் போன்ற பெயருள்ள மீன் வகைகளைத் தவிர்க்கவும். திருமாலின் திருமார்பில் லட்சுமி உறைவதால் திருமால் அவதாரமான மீனிலும் லட்சுமி கடாட்சம் பெருகி மீன் வளர்ப்போரின் வறுமை நீங்க ஏதுவாகிறது. மீன் தொட்டியில் மீன்கள் நன்கு வெளியில் தெரியுமாறு பச்சை, ஆரஞ்ச், மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம். இரண்டு, மூன்று மின் மோட்டர்களை வைத்து மீன் தொட்டியில் எப்போதும் காற்று சுழற்சி இருக்குமாறு மின் விசிறி வசதி செய்யவும். 24 மணி நேரமும் மீன்களுக்கு ஆக்ஸிஜன் காற்றோட்டம் நிறைந்திருப்பது முக்கியம். மீன் தொட்டிக்குள் சிவலிங்கம், நந்தி, கோயில் கோபுரங்கள், மான், மயில், தவளை, ஆமை போன்ற கடவுள் நினைவுகளை ஏற்படுத்தும் பொம்மைகளை வைத்திருத்தல் நலம். -- from book - இறைவனை அடைய உதவும் சூரிய நமஸ்காரங்களும் ,அதன் யோகாசனங்களும். & more on கண்களை பாதுகாப்பது எப்படி பாகம் -1!!

A Good right path & thought you decide  and stand on it and travel …… you  can attain … more than you  dreamed …  https://www.youtube.com/watch?v=G2xFJUSLEv8&t=3shttps://www.youtube.com/watch?v=p1PID91sEW8&t=28s
--------------------------------------------------------------

ஓம் ஸ்ரீகுருவே சரணம்


2 comments:

  1. ஓம் ஸ்ரீசத்குருவே சரணம்
    அருமையான தகவல்கள்.
    ஸ்ரீலஸ்ரீ வாத்தியார்ஸ்ரீராம லட்சுமணரின் தரிசனத்தை மச்ச ரூபத்தில் (கொடுத்து வைத்த) சில பழைய அடியார்களுக்கு காண்பித்துள்ளார்.

    ReplyDelete