☸ திருச்சி
நாகநாத சுவாமி
கோவில் ☸
🌀
நாக சதுர்த்தி
/நாக பஞ்சமி
3⃣🌀_- வாத்தியார் அருளுரைகளில் சில
🐍நாக தேவதைகள்
வசிக்கும் திருத்தலங்களில்
திருச்சி நாகநாத
சுவாமி சிவாலயமும்
ஒன்றாகும். 🐍இங்கு பிரகார
மண்டபத்தில் உள்ள தூண்களில் விதவிதமான நாக
வடிவங்களைக் காணலாம். 🐍நாக தோஷம் தீர வேண்டி,
இத்திருக்கோயிலின் ஒவ்வொரு தூணையும்
சுத்தப்படுத்தி மஞ்சள் தடவி குங்குமமிட்டு, தூணின்
கீழ் நாககோலம்
அல்லது ஏதேனும்
தெரிந்த கோலமிட்டுப்
பசுநெய் தீபமேற்றி
வழிபடுதல் வேண்டும்.
🐍இன்றைக்கும் பல
நாகதேவதைகள் சதுர்த்தசி திதியன்று மலைக்கோட்டையைச் சுற்றி
சூட்சும, ஸ்தூல
ரூபங்களில் கிரிவலம் வருகின்றன. 🐍அனைத்தையும் ஆற்ற வல்ல
நாக தேவதைகளே
இறைவனின் திருவடியை
நாடி மலைக்கோட்டையைக்
கிரிவலம் வருகின்றனவெனில் மனிதர்களாகிய
நாம் எம்மாத்திரம்?
🐍
ஸ்ரீ சாரமா
முனிவரின் சற்குருவே
ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி!
🐍ஸ்ரீஅஸ்தீக சித்தரின்
வழித் தோன்றல்!
🐍ஸ்ரீசசபிந்து மஹரிஷியே
நாக ரூபத்தில்
தினமும் ஸ்ரீநாகநாத
சுவாமிக்கு நித்ய பூஜை செய்கின்றார். 🐍இக்கோயிலில் உறையும்
அனைத்து நாக
தேவதா மூர்த்திகளுக்கும்
இவரே அதிபதியாவார்.
🐍இக்கோயிலுக்கும்
நாக லோகத்திற்கும்
நெருங்கிய தொடர்புண்டு.
🐍இத்திருத்தலத்
திருக்குளத்தின் மூலம் நாக லோகத்திற்கான வழிகள்
உண்டு.
🐍சூட்சும ரூபத்தில்
நாக லோகம்
செல்வோர் கூட
ஸ்ரீசசபிந்து மஹரிஷியைத் தொழுது இக்கோயில் மூலமாகவே
நாகலோகத்தை அடையமுடியும். 🐍ஸ்ரீநாகநாத சுவாமிக்கு எதிரில்,
மண்டபத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு வலப்புறம், கொடிக்கம்பம்
அருகில் உள்ள
முதல் தூணின்
கீழ்ப்புறம் ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி காட்சியளிக்கின்றார்.
🐍நாக
தோஷங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சித்தபுருஷரே ஸ்ரீசசபிந்து
மஹரிஷி ஆவார்.
🐍நாக சதுர்த்தி/நாக பஞ்சமியன்று
ஸ்ரீசசபிந்து மகரிஷிக்கு எண்ணெய்க் காப்பிட்டு, அபிஷேகம்
செய்து பருத்திப்
பஞ்சில் மஞ்சள்
தடவி, மாலையாகத்
திரித்து இந்தப்
பஞ்சபூத சக்தி
மாலையைச் சாற்றி
வழிபட்டு ஏழைகளுக்குப்
பால்பாயசம் அளித்திட எவ்வித நாகதோஷங்களுக்கும் இது சிறந்த பரிகாரமாக அமைகின்றது.
☸ஸ்ரீ
தம்பிக்கலையான் சித்த சுவாமியை நம்பி அவர்
பெயர் சொல்லி
இருட்டில் நடந்தால்
பாம்புகள் துன்பம்
தராது☸
🌀
நாக சதுர்த்தி
/நாக பஞ்சமி
4⃣
_- வாத்தியார் அருளுரைகளில் சில
🐍ஸ்ரீ தம்பிக்கலையான்
சித்த சுவாமி
சென்னை திருவான்மியூர்
ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள
108 சிவலிங்கங்களில் ஸ்ரீதுர்கைக்கு நேரில்
இரண்டாவது லிங்கத்தில்
ஐக்யமடைந்து இன்றைக்கும் அருள்பாலிக்கின்றார்.
🐍கோமா
நிலையில் உள்ளோர்க்காக
இந்த லிங்கத்திற்கு
அபிஷேக ஆராதனைகள்
செய்து பாதாம்
பருப்பு கலந்த
இனிப்பு /பாயசம்
தானம் செய்திட
குணமடையும். நல்வழி பிறக்கும்
☸வருடத்திற்கு
ஒரு முறையே
வரும் இந்த
நாகசதுர்த்தி, பஞ்சமி திதி மிகவும் விசேஷமானதாகும்☸
🌀
நாக சதுர்த்தி
/நாக பஞ்சமி
5⃣🌀
_- வாத்தியார் அருளுரைகளில் சில
🐍நாக சதுர்த்தி
அல்லது நாக
பஞ்சமி அன்று
காலையில் சூரியோதய
காலத்தில் நாகபுற்றுக்குப்
பால் வார்த்து,
பருத்திப் பஞ்சினில்
மஞ்சள் தடவி
இப்பஞ்சு மாலையை
நாகப்புற்றிற்குச் சார்த்த வேண்டும்.
🐍இதனால் சகலவித
நாக தோஷங்களும்
நிவர்த்தி பெறும்.
🐍பாம்பினால்
கடிக்கப்படுவது,
பாம்பு தன்மேல் விழுதல்,
பாம்பினை
மிதித்தல்,
நாகப்பாம்பினை அடித்து வதைத்துத் துன்புறுத்தல்
போன்றவற்றினால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தியாக இந்த
நாக பஞ்சமி
நாளில் சாத்தான்
என்கிற நட்சத்திர
தேவதையை வேண்டி
“
ஸ்ரீசாம தந்த
நாக ஸ்வரூபாயை
நம : “
சாம
தந்த நாகமே
போற்றி”
என்று
வணங்கி நாகப்புற்றிற்கு,
குறிப்பாக வேப்ப
மரத்தடியில் உள்ள புற்றிற்குப் பால் வார்த்தல்
சிறப்பானதாகும்.
🐍இந்த உத்திர
நட்சத்திரத்தில் எழுந்தருளும் நாகதேவதைக்குச்
சாமதந்தன் என்று
பெயர். 🐍இந்நாளில் நாகராஜன்,
நாகலட்சுமி, நாகப்பன் போன்ற நாகப் பெயர்களை
உடையோர் கண்டிப்பாக
நாகப் புற்றிற்குப்
பால் வார்க்க
வேண்டும்.
🐍இப்பெயரை உடைய
ஏழைகளுக்குத் தேவையான உணவு, உடையினை வழங்குதலால்
திருமணத் தடைக்கான
நாக தோஷங்கள்
தீரும்.
☸நாகத்திற்குரிய
தலங்கள் ☸
🌀
நாக சதுர்த்தி
/நாக பஞ்சமி
6⃣🌀 _- வாத்தியார்
அருளுரைகளில் சில
🐍பூலோகத்தில் குறித்த
சிலதலங்களில் நாக தேவதைகள் வாசம் செய்து
தினந்தோறும், அத்தலத்திற்குரிய தெய்வமூர்த்திக்கு
வழிபாடு செய்து
வருகின்றன.
🐍நாகர்கோவில், 🐍மருதமலை ஸ்ரீபாம்பாட்டி
சித்தர் ஜீவசமாதி,
🐍திருச்சி
ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில், 🐍தேவகோட்டை – திருவாடானை அருகிலுள்ள
ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில்,
🐍திருநாகேஸ்வரம் இராகு தலம்,
🐍கர்நாடகத்திலுள்ள
சுப்பிரமண்யம் போன்ற இறைத் தலங்களிலுள்ள நாகப்புற்றினை
வழிபடுவது அபரிமிதமான
பலன்களைத் தரும்.🐍 இத்தலங்களில் நாகபஞ்சமியினைக் கொண்டாடுவதால்
ஏற்படும் பலன்களை
விண்டுரைக்க இயலாது.
🐍அற்புதமான தெய்வீக
சக்தியைப் பெற்றுத்
தருவதோடு நாக
கன்னிகைகள், நாக தேவதைகளின் தரிசனத்தையும் பெற்றுத்
தரும்.
☸சென்னை
- திரிசூலத்தில் நாகத்தையே பூணூலாகத் தரித்த விநாயக மூர்த்தி அருள்கின்றார் ☸ 🌀 நாக சதுர்த்தி
/நாக பஞ்சமி
7⃣ _- வாத்தியார் அருளுரைகளில் சில
🐍நாகத்தைப் பிடித்த
நிலையில், நாகாபரணம் அணிந்த நிலையில், நாகத்தைக் குடையாகக் கொண்ட
நிலையில், நாகத்தையே பூணூலாகத் தரித்த நிலையில் அருளும் விநாயக மூர்த்திகள் யாவரும் அமிர்த விநாயக மூர்த்திகளே!
🐍செவ்வாய்க்கிழமை பிருத்வி சக்திகளைக் கொண்டமையால், பூமியிடியில் வாழும் நாகங்களுக்கு
செவ்வாய் சிறப்புடைய நாளாகின்றது.
🐍செவ்வாயன்று வரும்
அங்காரகச் சதுர்த்தியில்
சில வகை
நாகங்கள் நான்கு
தலைகளுடன் பிள்ளையாரைப்
பூஜிக்கின்றன. 🐍இதன் பலாபலன்கள்
பிள்ளையார் சந்நதியின் கோமுக சக்திகளாக வெளிப்படும்.
🐍எனவே அங்காரக
சதுர்த்தி அன்று
விரதமிருந்து விநாயகர் சந்நதியில் அபிஷேகப் பூஜைகளை
ஆற்றி, கோமுகத்
தீர்த்தத்தை அருந்தி, விரத நிறைவு கொள்வது
விசேஷமானது.
🐍மேலும் புற்று
வகை மூர்த்திகளை
வழிபடுதல் நாகேஸ்வர
தரிசனப் பலன்களைத்
தரும். 🐍இதனால் மனதில்
எழுந்த, எழும்
விஷத்தனமான எண்ணங்கள் மாறுபடத் தக்க ஜபவழிமுறைகள் தக்க பெரியோர்கள் மூலம்
கிட்டும்
No comments:
Post a Comment