2. காஞ்சிபுரம் - பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்
வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
3. காஞ்சிபுரம் – புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில்
வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
4. காஞ்சிபுரம் - சாந்தாலீஸ்வரர் திருக்கோயில்
புண்ணியகோடீஸ்வரர் கோயிலிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
5. காஞ்சிபுரம் – மணிகண்டீசுவரர் திருக்கோயில்
சாந்தாலீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
6. காஞ்சிபுரம் – முத்தீஸ்வரர் திருக்கோயில்
மணிகண்டீசுவரர் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
7. காஞ்சிபுரம் – வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்
முத்தீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
8. காஞ்சிபுரம் - கச்சபேஸ்வரர் திருக்கோயில்
வழக்கறுத்தீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
II. காஞ்சிபுரம் to திருப்பனங்காடு
1. திருமாகறல் - திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
காஞ்சீபுரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.
2. குரங்கணில்முட்டம் - வாலீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருமாகறத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
3. அய்யங்கார் குளம் - ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில்
குரங்கணில்முட்டத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
4. திருப்பனங்காடு - தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
அய்யங்கார் குளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
III. காஞ்சிபுரம் to பஞ்சுப்பேட்டை
1. திருக்காலிமேடு - சத்தியநாதசுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது
2. பிள்ளையார்பாளையம் (திருக்கச்சி மேற்றளி) - திருமேற்றளிநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்காலி மேட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
3. பிள்ளையார்பாளையம் (கச்சி அநேகதங்காபதம்) -
அநேகதங்கா பதேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருமேற்றளிநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
4. பிள்ளையார்பாளையம் – கைலாசநாதர் திருக்கோயில்
அநேகதங்கா பதேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
5. காஞ்சிபுரம் – ஜ்வரஹரேசுவரர் திருக்கோயில்
ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் உள்ளது.
கைலாசநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
6. காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஜ்வரஹரேசுவரர் கோயிலிருந்து 600 மீ தொலைவில் உள்ளது.
7. பஞ்சுப்பேட்டை (ஓணகாந்தன்தளி) - ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
அரக்கோணம் பேருந்து சாலையில் உள்ளது.
ஏகாம்பரநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
IV. காஞ்சிபுரம் to கோவிந்தவாடி
1. தாமல் - வராஹீஸ்வரர் திருக்கோயில்
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர்
செல்லும் வழியில் 75 கி.மீ., தொலைவில், இடது பக்கம் மெயின்
ரோட்டிலிருந்து மிக அருகில் உள்ளது., காஞ்சிபுரம், பேருந்து
நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 15 கி.மீ தூரத்திலும்
உள்ளது.
2. திருப்புட்குழி - விஜயராகவப்பெருமாள் திருக்கோயில்
(திவ்ய தேசம்)
தாமலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
3. கூரம் - ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயில்
திருப்புட்குழியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
4. கூரம் - வித்ய வனித பல்லவ பரமேஸ்வரர் திருக்கோயில்
ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயிலிருந்து 150 மீ தொலைவில்
உள்ளது.
5. திருமாற்பேறு - மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
கூரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
6. கோவிந்தவாடி - தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
திருமாற்பேறிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது
https://www.facebook.com/ancienttemplesintamilnadu

இராஜராஜசோழன் அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் உள்ள தூணில், நடராஜர் சிற்பம் - கைகளில் உடுக்கை, தீயகலுக்குப் பதிலாக சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளதாக அமைந்துள்ளது.
திருவல்லம் பரசுராமர் ஆலயம் - "தட்சிண கயை' -
புண்ணிய சேத்திரம்
>> பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டுள்ளது . ஐயனை தரிசிக்க கண் கோடி வேண்டும் . பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன. பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை.
>> பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர். பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' ன்னும் அழைக்கப்படுகிறது.
>> இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.

>> கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
>> இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர்.
>> முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்’ என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.
இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை ..

>> ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார். பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
திருவல்லம் பெயர்க் காரணம் :
>> திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன..

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவல்லம் திருத்தலம்.
சகல பாவ தோச- சாப தோச பரிகார நிவர்த்தி ஸ்தலம்- நான்கு முக பிரம்ம துர்க்கை - பழனி (பழனிமலையைச் சுற்றிலும் நான்கு புறத்திலும் எல்லை தெய்வமாய் துர்க்கை கோவில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும்.) ஆனால் மருத்துவ நகர் பைப்பாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த நான்கு முக பிரம்ம துர்க்கையை பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை..
>> இந்த அன்னை நான்கு முகத்தோடும், சிவபெருமானை வலக்காலில் மிதித்தும் இடக்காலை மடக்கி , கைகளில் பாசம்- அங்குசம்- தாமரை ஏந்தி அபய கரம் கொண்டு கலியுகத்தில் மக்களின் சகல தோசத்தையும் நிவர்த்திக்கும் அன்னையாக அருள்பாலிக்கிறாள்.. நான்கு தலையுடன் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை மாற்ற கூடியவளாகவும் , குரு தோசத்தை நிவர்த்திப்பவளாகவும் அன்னை விளங்குகிறாள்...
>> அமைவிடம்: பழனி கிரிவீதிப்பாதையில் இருந்து கோடைகானல் கோடைக்கானல் செல்லும் பாதை அருகே உள்ளது மருத்துவ நகர் . இந்த மருத்துவ நகருக்கு அருகில் தான் பிரம்ம துர்க்கை கோவில் உள்ளது..
ஒருமுறை சென்று வாருங்கள்.. அன்னையின் அருளினை அள்ளி பருகுங்கள்... https://www.facebook.com/rammy.sithargal
No comments:
Post a Comment