எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 28, 2020

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் - 2


சிசு ஹத்தி பற்றி ஒரு கேள்விக்கு அகத்தியர்
 அளித்த விடை

சிசு ஹத்தி என்று மனித குழந்தையை மட்டும் நீ கூறுகிறாய்.கொடுமையான சிசு ஹத்தி  என்று எத்தனயோ இருக்கிறது தெரியுமா ?.

மிக மிக இளம் தளிராக இருக்கின்ற, பசுமை மாறாமல் இருக்கின்ற ஒரு சிறு இலையை கிள்ளினால்  
ஆயிரத்து எட்டு சிசுவை கொன்றதற்கு சமம் தெரியுமா ?
ஒரே ஒரு மலர் மொட்டை
 ஒருவன் கொய்தால் அது பத்தாயிரத்து  எட்டு பிறந்த குழந்தையை கொள்வதற்கு சமம்.  

இப்படியானால் பார்த்துகொள் ஒரு மனிதன் எத்தனை வகையான 
சிசு ஹத்தி பாவத்தை சுமந்து கொண்டு செல்கிறான். 
இதனையும் மீறி மனிதன்  ஜீவித்து இருக்கிறான் என்றால் 
இறைவனின் பெரும் கருணையால் தான். 
 எனவே  குழந்தைபூமிக்கு வந்த பிறகு கொன்றால் தான் பாவம், கருவிலே 
கொன்றால் பாவம் இல்லை என்று எண்ணிகொண்டிருக்கிறான்.  எந்த 
நிலையிலும் அது பிரம்ம ஹத்தி தோஷமாக உருவெடுத்து மனிதனை 
வாட்டி கொண்டுதான் இருக்கும்.  எனவே விழிப்புணர்வோடு இருந்து 
இதிலிருந்து மனிதன் தன்னை, ன் குடும்பத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

அறியாமல் செய்திருந்தால் எத்தனை ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்க முடியுமோ ஆதரித்து இந்த தோஷத்தைநீக்கி கொள்ள வேண்டும்.  
எத்தனை பசுவோடு கன்றுகளை தானம் அளித்து 
இந்த தோஷத்தை குறைத்து 
கொள்ள வேண்டுமோ, குறைத்து கொள்ள வேண்டும்.  எந்த அளவிற்கு   சிவாலயங்களில் நெய் தீபம் ஏற்றி குறைத்து கொள்ளவேண்டுமோ,
 குறைத்து கொள்ள வேண்டும்வாய்ப்பு உள்ளவர்கள் 
சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும், வாழ்க்கைக்கு பிறகும், நிரந்தரமாக பூஜிப்பதற்கு ஒரு 
ஏற்பாட்டை செய்ய வேண்டும்.  இகுதப்பசெய்வதோடு ஆயிரமாயிரம் 
விருட்சங்களை தானம் செய்வதும் அதனை நட்டு பராமரித்து நிழல் தரும் விருட்சங்களாக மாற்றுவதும் என்று ஒரு தொண்டை செய்தால் இந்த ஹத்தி தோஷம் நீங்கி விடும்மனிதன் செய்யும் சிறு தவறுக்குக் கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும்பொழுது, ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காகப் பெருகுமா ?


இறைவன் அருளால், தெரியாமல் பாவம் செய்தாலும், தெரிந்து செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மைகளைத் தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படிக் கூறுவதாகக் கொண்டால் மனிதன் என்ன செய்வான் ? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களைத்தான் செய்யத் துவங்குவான். இன்னொன்று, புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதைப் பொறுத்ததுதான், அளவைப் பொறுத்ததல்ல. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்துவிட்டு உள்ளத்திலே வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே ? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும் ? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா ? இவன் இல்லாமல் ஒழிந்துபோகக் கூடாதா ? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும் ? ‘ என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமார ஒரு சிறு தனத்தைத் தந்தாலும் அது மலைபோன்ற புண்ணியமாகப் பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில், தக்க சூழலில், தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவி, மிகப்பெரிய உதவியாகும். இதைதான் வள்ளுவன் காலத்தினால் செய்த உதவி என்று கூறியிருக்கிறான். இஃதொப்ப உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட, செய்கின்ற உள்ளத்தைப் பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும், மனதையும், வாழ்வியல் சூழலையும் பொருத்ததாகும். 

No comments:

Post a Comment