எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 21, 2022

மிருகசீரிஷ நட்சத்திரம்

 

மிருகசீரிஷம்

இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


மலைஅருவி எனப் புகழ் சிதறும் மிருகசீரிஷ

 அருள் பூண்டு மனைவி துயர் நெருங்காது

 அருள்புரியும் இரட்டை கணபதி பாதக் காப்பே!



நட்சத்திர சகாயத்  திருவாக்கியத் திரட்டு

மந்திர நிவாசினி சந்திர பத்தினி

ம்ருகசீரிஷ தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்திய மகரிஷி 

அருளிய திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

வேதம் ஆனாய் பேரொளியே வெற்றி

 அருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே! போற்றி!!


மிருகசீரிஷம் தானம் - மோர் சாதம், போண்டா

கைகளில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்!

மிருகசீரிஷம் தலம் எண்கண்

 ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் (இத்திருத்தலம்

 தஞ்சாவூர் -கொரடாச்சேரி -திருவாரூர்

 மார்க்கத்தில் கொரடாச்சேரியில் இருந்து

 சுமார் 13கி.மீ தொலைவில் உள்ளது.

மிருகசீரிஷம் அதிதேவதை - சந்திரன்

No comments:

Post a Comment