எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, December 2, 2022

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் -4 !

 

அந்தந்த தெய்வங்களுக்குரிய நாமாவளியை அல்லது தெரிந்த மந்திரத்தை உள்ளன்போடு உருவேற்ற, உருவேற்ற எதை எண்ணி மனிதன் உருவேற்றுகிறானோ, சிந்தனையில் அந்தப் பகுதி ஜொலிக்கத் துவங்கும். அது அவனுக்குள் இன்னும் மெருகேறத் துவங்கும். இன்னும் ஒருவகையில் கூறப்போனால் அது அவனுக்குள்ளேயே இருக்கிறது. அது எங்கே ? என்பதை அவனுக்கு இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.

இறைவனே தூது சென்றாலும் துரியோதனன் திருந்தினானா ? என்றால் இல்லை. இதுதான் மாயையிலும் மிகசிறந்த மாயை. எனவே இறைவனருளால் நல்போதனைகளை நாங்கள் செய்துகொண்டே இருப்போம். அதனை கேட்டு தெளிவடைய வேண்டிய ஆத்மாக்கள் இந்த ஜெனனத்தில் எத்தனையோ ? அஃது மட்டுமே தெளிவடையும். ஏனையவைகள் கேட்டாலும் அதனை செயல்படுத்த முடியாமல் சராசரியாக வாழ்ந்துவிட்டுத்தான் போகும்.

கூறியவற்றை சரியாகப் புரிந்துகொண்டு அதனைப் பின்பற்றினால் நல்ல நிலைமையை இந்நேரமே ஒவ்வொரு மனிதனும் அடைந்திருப்பான். ஒன்று, குதர்க்கமாகப் புரிந்துகொள்வது. அல்லது இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று விட்டுவிடுவது அல்லது சிலவற்றை ஏற்றுக்கொள்வது, பலவற்றை நிராகரிப்பது அல்லது மூடத்தனமாக புரிந்துகொள்வது, தேவையற்ற குழப்பத்தில் தன்னை ஆழ்த்திக்கொள்வது அல்லது நாங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் குயுக்தியாகப் புரிந்துகொண்டு அதற்கு பொருள் கொள்வது, விதண்டாவாதம் செய்வது என்ற நிலையில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அல்லது அவரவர் விதி விதிக்கிறது. இதற்கு இறையோ, யாங்களோ யாதுசெய்ய இயலும் ? வழிமுறைகளை தெளிவாகக் காட்டியருள்வது இறைவனின் அருளாகும். அந்த வழிமுறைகளை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். தேவையற்ற அச்சம், குழப்பம், குற்ற உணர்ச்சி அதே சமயம் தேவையற்ற அகங்காரம், மூடத்தனமான வாதம். இவற்றை மனிதன் முதலில் விட்டுவிட்டு பணிந்து பவ்யமாக எதனை புரிந்துகொள்ளவேண்டும் ? எப்படி புரிந்துகொள்ளவேண்டும் ? என்பதை மீண்டும், மீண்டும் எமது வாக்கைக் கேட்டு அதனை சரியாக உள்வாங்கினால் புரியும். ஆனால் வேண்டுமென்றோ அல்லது விதி தன்னுடைய பிடியில் வைத்திருப்பதனாலோ தவறாகவே பலரும் எமது வாக்கை புரிந்துகொள்ளும் நிலை இருக்கிறது. இதற்கும் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

பைரவரின் அவதார நோக்கமே பாவ கர்மாவைக் குறைப்பதுதான். குறிப்பாக அறிந்தும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்ய நேரிடுகிறது என்று வருந்தக் கூடியவர்கள், ஒரு குடும்பத்திலே அகால மரணங்கள் அடிக்கடி நேரிடுகிறது என வருந்தக்கூடிய மனிதர்கள் கட்டாயம் அன்றாடம் குறைந்தபட்சம் ஐந்து, ஐந்து முக நெய் தீபங்களாக பைரவர் முன்னால் ஏற்றி, மானசீகமாக பைரவரின் அஷ்டோத்திரத்தையோ, சஹஸ்ர நாமத்தையோ, பைரவர் அஷ்டகத்தையோ அல்லது அவன் அறிந்த மந்திரத்தையோ துதித்து வந்தால் கட்டாயம் இந்த தோஷம் நீங்கும். இது பக்தி வழி.

அதற்காக பைரவரை வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் ஒரு பைரவரின் வாகனம் வால் ஆட்டிக்கொண்டே வந்தால் ‘ அந்தப் பக்கம் போ, வராதே ‘ என்று விரட்டினால் ஏற்றிய தீபம், வேண்டிய பிரார்த்தனை – அத்தனையும் வீணாகிவிடும். எனவே உயிரினங்களையும் போற்ற வேண்டும், பைரவரையும் வணங்க வேண்டும். பல இடங்களிலே பைரவ வாகனத்தை வளர்த்துவிட்டு, தொல்லையாக இருக்கிறது என்று எங்காவது கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமே இல்லை என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொல்லை என்று தெரியுமல்லவா ? எதற்கு அதனை வளர்க்க வேண்டும் ? எதற்கு அதனோடு போராட வேண்டும் ? அதைப்போல ஒரு மனிதனுக்கு பூர்வீக தோஷங்கள், கர்மங்கள், முன்னோர்கள் செய்த கடுமையான பாவங்கள், சாபங்கள் இருக்கிறதென்றால் கட்டாயம் அவன் வாழ்க்கையிலே பைரவர் வழிபாட்டை எல்லாவகையிலும் சிறப்பாக செய்ய வேண்டும்

ஒரு மனிதன் விதி எப்படியிருக்கும் ? அந்த விதியின் வழியாக ஒரு மனிதனுக்கு என்னவிதமான கஷ்டங்கள் வரும் ? அல்லது லாபங்கள் வரும் ? என்று யாராலும் கணித்து கூற இயலாது. உதாரணமாக விதி ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக துன்பங்கள் பலவற்றைத் தரலாம். அப்படித் தரும்பொழுது ஒரு மனிதன் வேறுவழியில்லாமல் ஒரு மனிதன் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அறுவை சிகிச்சையால் ஒருவன் உயிர் பிழைத்துக்கொண்டாலும் அதுவும் ஒரு வேதனைதான். அதைப்போல சிறு, சிறு விபத்துக்களால் வீட்டிலே சிலகாலம் ஓய்வெடுக்கும்படி ஏற்பட்டால் அதுவும் ஒரு வேதனைதான். எனவே விதி இவ்வாறெல்லாம் உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது கண்கூடான ஒன்று. ஆனால் அதற்கு முன்பாக தாமாகவே முன்வந்து இறைவனின் பெயரை எண்ணி உடலை வருத்திக்கொண்டால் விதி வழியாக இயல்பாக உடல் வருத்தப்படவேண்டிய நிகழ்வு நடக்காது என்பதின் சூட்சுமமே இது. இதனால்தான் வாகன வசதி இருந்தும் நடந்து தொலைதூர ஸ்தலங்களுக்கு செல்வது. அஃதொப்ப பாதரட்சை இல்லாமல் கல்லிலும், முள்ளிலும் நடந்து செல்வது. இவற்றால் உடலுக்கு ஏற்படும் வருத்தங்கள், வேதனைகள் எல்லாம் இறைவனுக்காக என்று எண்ணும்பொழுது மனம் ஏற்றுக்கொள்கிறது. அஃதோடு உடல் அனுபவிக்க வேண்டிய துன்பங்களும் இறை சார்ந்து நிகழ்ந்துவிடுவதால் வேறு வியாதிகள் மூலமாகவோ, விபத்துக்கள் மூலமாகவோ துன்பத்தை நுகர விடாமல் செய்துவிடுகிறது. இப்படி செய்த பிறகும் உடல் மூலம் ஒருவனுக்கு துன்பம் வருகிறதென்றால் இன்னமும் பாவ கர்மா பாக்கி இருக்கிறது என்பதே பொருளாகும்.

எப்பொழுதுமே தன் வீடு, தன் பெண்டு, தன் மக்கள் என்று சுயநலத்தோடு வாழ்கிறான். பொது நல எண்ணமும், நோக்கமும் வளர, வளர, தன்னுடைய உழைப்பு தனக்கு மட்டும்தான் சொந்தமாக வேண்டும் என்ற குறுகிய சுபாவம் சென்று, ஏதோ விதிவசத்தால் பலருக்கு இங்கே உழைக்க வாய்ப்பில்லை. உழைக்க எண்ணினாலும் அந்த உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. தன்னை சுற்றி எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவனருளால் தான் நன்றாக இருக்கிறோம். தாம் அரவணைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் வந்தால்தான் இறைவனின் கருணை மேலும் பெருகும். பஞ்ச பூதங்களும் சமன் அடையும்.


No comments:

Post a Comment