எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, August 10, 2026

upanishad

 ஒரு மந்திரத்தை 5,00,000 முறை உச்சரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கும் சித்தர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமாவாசை அன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 50,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்.

சூரிய கிரகணத்தன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 2,00,000 முறை உச்சரித்ததற்குச் சமம். அதுவே அன்று ஞாயிற்றுக் கிழமையும், பூச நட்சத்திரமும் கூடி இருந்தால் 2,50,000 லட்சம் முறை உச்சரிப்பதற்குச் சமம். அன்று ஜெபிப்பவர் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் 2,60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம். அதுவே சூரிய கிரகணம் நடை பெறும் போது உத்ராயணமாக இருந்து, ஞாயிற்றுக் கிழமையாகவும் இருந்து, ஜெபிப்பவரின் ஜன்மநட்சத்திரமாகவும் இருந்தால் 108 முறை உச்சரித்தாலே 5,00,000 முறை உச்சரித்தற்குச் சமம்.


உபநிஷத முனிவர் சொல்கிறார் :-,

"எங்கள் லட்சியப் பயணத்தினின்றும் நாங்கள் வழுவாதிருக்க அருள்க..." நீங்கள் இறுதிப் பரம்பொருளை காணாத வரையில், வேறெதையும் காண முடியாது. 'நாங்கள் வழிதவறி விடக்கூடாது' என்று கடவுளிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டேயிருங்கள்.

‘நாங்கள் எங்களையே உன்னிடம் பரிபூரண பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்" தியானம் என்பது முயற்சி, வழிபாடு என்பது சரணாகதி. உங்களுடைய செயல், வழிபாடு கடவுளிடம் உங்களை ஆட்படுத்திக் கொள்வது!! *உங்களுக்காக அவர் எதை செய்யவிரும்பினாலும், நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது அர்ப்பணிப்பு, அது பக்தி. ஆனால் பக்தி, தியானத்திற்குப் பிறகே வருகிறது. உங்களால் முடிந்தவற்றை நீங்கள் செய்து முடித்த பிறகுதான். வழிபாடு துவங்குகிறது. அப்பொழுது உங்களது வழிபாடு

உண்மையான வலுவைப் பெறுகிறது.

"நான் என்ன செய்ய முடியும்? என்னால் இயன்றதனைத்தையும் செய்துவிட்டேன்!

நான் பெற்றது இதுதான் - மாபெரும் ஒளி, மாபெரும் ஆசிகள், பேரானந்தம் - ஆனால் இவை பரம்பொருளின் முற்றிலுமான வெளிப்பகுதி மட்டுமே என்பதைத்தான் நான் இன்னமும் உணர்கிறேன்.

இறைவா.. இப்பொழுது நீ மட்டுமே உதவி செய்ய முடியும்." உன்னால் இயன்றதனைத்தையும், நீ செய்து முடித்த பிறகுதான், நீ உதவி கேட்க முடியும். அதற்கு முன்பாக அல்ல. தியானத்திற்கு பிறகு தான் வழிபாடு வருகிறது.

"நினைந்திடுக, ஓ! மனமே; செய்து முடித்தவற்றை நினைந்திடுக." -இதில் மற்றவர்களால் உங்களுக்கு என்ன செய்யப்பட்டது! என்பது முதல் அர்த்தம்:

உங்களுக்கு, நீங்களே செய்து கொண்டது என்ன? என்பது இரண்டாவது அர்த்தம்.

மற்றவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; உங்களுக்கு நீங்களே அதிகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்களும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் ஒப்புக்க கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் ஒருபோதும் எதிர்த்துப் புரட்சி செய்யவில்லை, எல்லாவகையான மூட நம்பிக்கைகளுக்கும் அடிபணிந்துள்ளீர்கள்!

No comments:

Post a Comment