எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, August 10, 2026

jeevnadi

 வடலூரில் தர்மச்சாலையில் உள்ள தீர்த்தம் இராமலிங்க வள்ளலார் செய்த ரசவாத தீர்த்தம்தானா* ?

உண்மைதானப்பா. அதே தருணம் அஃதொப்ப தீர்த்தத்தைப் பருகுவதோடு இறைவனின் திருமேனி அபிஷேகத்திற்கு வைத்துக்கொள்வதும் சிறப்பு.

பிரார்த்தனைகள் பற்றி!

முதல் நிலையிலே சுயநல பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எப்படியாவது அவன் அங்கு பிரார்த்தனை செய்தால் போதும் என்று. காலம் செல்ல,செல்ல, பிறருக்காக பிரார்த்தனை செய்யும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை உச்சரிக்க பிடிக்கவில்லை என்றாலும் இறை குறித்த சம்பவங்களையும், எந்தெந்த கால கட்டத்தில் இறை நமக்கே அருளியிருக்கிறார் என்பதை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதும் வழிபாடுகளுள் ஒன்று.

ஒரு நற்செயலை எண்ணத்தில் விதை போடுவதும் அது குறித்த சிந்தனையோடு வாழ்வதும்கூட ஒருவகையில் ஒரு நல்ல செயலை செய்ததற்கு சமம்தான் என்பதால் எந்தவொரு நல்ல செயலையும் உண்மையான ஆர்வத்தோடு அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு முயற்சி எடுத்து அந்த முயற்சி முடியாமல் போனாலும் அதை செய்ததற்கு உண்டான பலன் இறைவனருளால் ஒரு மனிதனுக்குக் கிட்டும் என்பதால் நல்லதை எப்பொழுதும் எண்ணிக்கொண்டே இருப்பதும், நல்ல காரியங்களை செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதும் அதுவும் ஒருவகையான பிரார்த்தனைதான், தவம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

-sri agasthiar

No comments:

Post a Comment