எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, February 27, 2017

காலகம் , போலகம் ,..

முருகன் என்றாலே பழநி என்று கூறுமளவுக்கு மிக முக்கியமான தலம்.
அருள்மிகு முத்துவேலாயுதசாமி திருக்கோயில்
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம்
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ
முருகனுக்கு 3 முகமும் 6 கரங்கள் மட்டுமே உள்ள தலம்
அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில்
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம்
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ.

----------------------------ponni malai -- from palani 10km bhogar statue-----------------------------

நாஞ்சில் நாட்டின் முகமே கிராமம் தான். அங்கே தெரிசனங்கோப்பு ஒரு சிறிய கிராமம். வயல்களும் தென்னைமரங்களும் அதிகம் அங்கே உண்டு. ஊரில் வடக்காறு, தெக்காறு என்று ஒரே ஆறினை இரண்டு பெயர் சொல்லிக் குறிப்பிடுவார்கள். நான்கு ரதவீதி உண்டு. கீழ ரத வீதியில் ராகேஸ்வரர்-உலகநாயகிஅம்மன் கோவில் இருக்கிறது.
-- -------------------------------------------------------------------------------------------------------

திருவைகல்-வைகல் நாதேஸ்வரர்  -- திருவாடுதுறையிலிருந்து 13 கிலோ மீட்டர்

-----------------------------------------------------------------------------------------------------------------
       தலம் என்பது ஓர் ஊர் அல்லது இடத்தின் பெயரைக் குறிக்கும் ஓர் தமிழ்ச் சொல். இத்தலத்தை சிவத்தலம், விஷ்ணுத்தலம், சுப்ரமணியத்தலம் என்றும் மூன்று பிரிவாக தமிழ் நாட்டினர் கூறுவர். திருநாதகிரி திருமலையில் பாலசுப்ரமணியசுவாமி குன்று தோறும் ஆடல் புரியும் குமரவேளாக சிறப்பான முறையில் கோயில் கொண்டருளுகின்றனன். தெய்வத்திருமலை என்பதற்கு தெய்வம் விளங்கும் அழகு மிக்க மலை என்பது பொருள். சங்கநிதி, பதுமநிதி எனப்படும் இரண்டு சக்தி வாய்ந்த பூதகணங்களால் இத்திருக்குன்றம் பல யுகங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பதிணென் சித்தர்களில் தலைவரான அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில் திருநாதகிரியின் குகைக்கோயில் முக்கியமானது. திருப்புகழை இயற்றிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். மேலும் சித்தர்மலை, தெய்வமலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, ப்ரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி என்றும் பெயர்கள் பெற்று அவைகள் தமிழ் நூல்களுள்ளும் இடம்பெற்றுள்ளன. 

                      இத்திருத்தலம் தமிழ்நாட்டில் ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் சிவகிரி தாலுக்காவில் இராயகிரி கிராமத்தின் அருகில் கூடலூரில் அமைந்துள்ளது. 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெல்லிப்பழை துர்க்கை அம்மன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாமாகுடி மாமாங்ககுடி ஆத்தூர் மாயவரம் அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில்
ஆனந்ததாண்டவபுரம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனந்ததாண்டவபுரம். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருமால்மாகுடி, லட்சுமிபுரம் என்று இத்தலத்தின் பெயர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாமாகுடி என்று வழங்குகின்றது. இத்திருக்கோயில் சோழர் கால கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. திருநாவுக்கரசர் வைப்புத் தலமாகப் போற்றிப் பாடியுள்ளார். திருவலம்புரநாதர் வலம்புரமாலையில் இத்தலம் பாடப்பட்டுள்ளது. திருமால், லெட்சுமி, இந்திரனால் பூஜிக்கப்பட்டத் திருத்தலமாகும். 

ஆக்கூர் முக்கூட்டு ரோட்டின் அருகே வரும் சிறு கிராமம் பூந்தாழை. இங்கிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு. மயிலாடுதுறை- பொறையார்/தரங்கம்பாடி சாலையில் பயணித்தால், ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இறங்கி மாமாகுடி செல்ல லாம். ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. திருக்கடையூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு. பூம்புகாரில் இருந்து 8 கி.மீ. தொலைவு. எங்கிருந்து புறப்பட்டாலும் ஆக்கூர் முக்கூட்டு ரோட்டுக்கு வந்து விடுவது நல்லது. அங்கிருந்து ஆட்டோ மூலம் ஆலயத்தைச் சென்றடையலாம்.


அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில்
மாமாகுடி, மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்
ஆக்கூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 171 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆத்தூர் மயிலாடுதுறை வட்டம், ஆத்தூர் சிவாலயம் மகா கும்பாபிஷேகம் (விபரம் : 09884126417)

மந்தாரம் - mandAramஅ 6-70-6 மந்தாரம் மாயூரத்திற்கு அருகில் உள்ளது. தற்போதூ ஆத்தூர் என்றும், ஆற்றூர் என் றும் வழங்குகிறது.
(தேனி வடிவில் சித்தர்கள் வழிபாடு)

யமக துதி 
----------------------------------------------------------------------
நன்னிலத்துப் பெருங்கோயில்!கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்.

விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலமாதலின் மதுவனம் என்றும் பெயர் பெற்றது.அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும் படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்' என்றும் அம்மன் "மதுவன நாயகி' என்றும் இத்தலம் "மதுவனம்' என்றும் அழைக்கப்பட்டது.

இங்குள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நலன்களையும் பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள் மோட்சம் அடைவர் என்றும் கூறப்படுகிறது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள்.மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம், பிருகத்புரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.இக்கோயில் கோச்செங்கட் சோழனின் மாடக்கோயிலாகும்.கோயிலுள் பிரமன் வழிபட்ட மகாதேவலிங்கமும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் லிங்கமும் உள்ளது.
Location: on the rt mayilaaduthurai- thiruvaaroor! thirukkonndeeswararm ppt (3kms east), nannilam perumaal temple and naaraayana swamigal (guru and shishya's ) jeeva samaathi are near to this temple! 

மாங்குடி சிவாலயம் கொல்லுமாங்குகுடி  அருகில்  மாங்குடி மயிலாடுதுறை கோயில் 

அருள்மிகு சர்வலோகநாத சாமி, ஐயனார் கோயில்
மாங்குடி,நாகப்பட்டிணம்
----------------------------------------------------------------------------------------------------------

கடலூர் அருகே சின்ன நரிமேடு கிராமத்தில் உள்ளது மிகவும் தொன்மையான அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்.இக்கோவில் கடலூரில் இருந்து திருமானிக்குழி வழியாக பண்ரூட்டி செல்லும் வழி தடத்தில் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர் - 631 203, திருவள்ளூர் மாவட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
பூ விழுங்கி விநாயகர் - அருகே காலகம்  சியாத்தமங்கை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
போலகம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்
திருப்புகலுர்க்கு வடகிழக்கே 2 கி.மீ
திருமலைராயனாற்றின் தென்கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.

அருள்மிகு கைலாசநாதசுவாமி மற்றும் ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் போலகம்,நன்னிலம்,திருவாரூர்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பித்ரு தேவ காயத்ரி மந்திரம்
ஒம் பித்ரு ப்ரசன்ன பூம்யாய வித்மஹே 
ஜெயசஷிராஸ் நாமாய தீமஹி 
தந்நோ பித்ரு மூர்த்தி ப்ரசோதயாத்
-----------------------------------------------------------------------------------------------------------------------
திருஇடைச்சுரம் , செங்கல்பட்டிலிருந்து 15 கீ.மீ  வசிஷ்டர் - அருந்ததி  தம்பதியர் தினமும் வழிபடும் புனித விருட்சம் --
திருவாரூர், மன்னார்குடியை அடுத்த பாமணி கிராமத்தில் நாகநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள புற்று மண் லிங்கத்திற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் எந்தவித கவசமும் அணிவிக்கப்படாமல் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தோன்றிய அளவிலேயே இந்த சுயம்புலிங்கம் இன்றும், சிறிதளவும் கரையாமல் காட்சியளிப்பது ஓர் ஆன்மிக அதிசயம். பல கோயில்களில் மண்ணாலான சுயம்பு லிங்கங் களுக்குப் புனுகு சட்டம் சாத்தப்பட்டுத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெங்கலூரு அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது .,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்
இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்


திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலி,ல் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு
இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாராம் இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் காக்கும் கடவுள் வீஷ்னுவும் சிவனைப்பூஜித்த இடம் ஒன்று உண்டு அதுவே தலைச்சங்காடு . இங்கு திருமால் சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப்பெற்றார் ,இதனால் ஈசன் சங்கு வடிவில் மூலவராக அருள் புரிகிறார் பெயரும் சங்காரேண்யஸ்வரர் .
தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?
ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்களைப் பார்த்திருக்கிறோமா? இது போன்ற அமைப்பை வேலூர் அருகில் இருக்கும் சேண்பாக்கம் என்ற இடத்தில் பார்க்கலாம். இவை வேண்டுமென்று உளியால் செதுக்கி வைத்த சிலைகள் அல்ல. இவைகள் தானாகவே தோன்றியவை.

பதினொன்று சுயம்பு பிள்ளையார்களை முதலில் பார்த்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். ஒரு தடவை ஸ்ரீஆதிசங்கரர் விரிஞ்சிபுரத்தை நோக்கி, ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்துக்கொண்டிருந்தார். சேண்பாக்கத்திற்கு அருகில் தான் விரிஞ்சிபுரம் உள்ளது.


http://temple.dinamalar.com/New.php?id=48

http://temple.dinamalar.com/New.php?id=47

http://vathavaithiyathirkuathi.blogspot.in/2013/07/34448.html

---------------------------------

நம: சிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்விநே:
துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே
என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பகோணம் அருகில்--திருநாகேஸ்வரம்- -தேப்பெருமாநல்லூர் – மீண்டும் பிறவாத நிலையை அருளும் தலம்.

வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில்
மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

------------------------------------------------------------------------------------

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல்  காய்ந்த கருவேல முர்க்களே...,
-------------------------------------------------------------------------------------------------------------------

தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். தென்காசியில் இருந்து தெற்குமேடு செல்லும் பஸ்களில் சென்றால் கோயிலில் இறங்கலாம். திருநெல்வேலியில் இருந்து 78 கி.மீ., குற்றாலத்தில் இருந்து 18 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ.,ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது.




பொதுவாக சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்கியிருக்கும். ஆனால், வேலூர் அருகிலுள்ள திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் சிவனின் எதிரில் உள்ள நந்தி சிவனை நோக்காமல், வாசலை நோக்கி திரும்பி இருப்பது அதிசயம். சனகர் சமாதி: வில்வநாதீஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் என்பர். சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகேதனி மடம் உள்ளது. கஞ்சன்மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க, வில்வநாதீஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.இருப்பிடம் : வேலூரிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ.,

11 தலை 22 கைகளுடன் கூடிய முருகனைப் பார்க்க வேண்டுமா! ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வாருங்கள்

ஒரே நாளில் காளஹஸ்தி, சிதம்பரம் உள்ளிட்ட பஞ்சபூத தலங்களைத் தரிசிப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி  கோயிலைச் சுற்றியுள்ள தென்னக பஞ்சபூத தலங்களை ஒரேநாளில் தரிசித்து விடலாம். தேவதானம் கோயிலுக்கு குழந்தை பாக்கியம்  இல்லாதவர்கள் வந்தால், இங்கு பிரசாதமாகத் தரப்படும் நாகலிங்கப்பூ பிரசாதமாக  மட்டுமின்றி மருந்தாகவும்  இருக்கிறது. ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன் கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். மாத சிவராத்திரிகளில் இந்த கோயில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.: மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரோட்டில்ராஜபாளையத்தைக் கடந்ததும், 15வது கி.மீ., தூரத்தில் தேவதானம் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் இருந்து மேற்கே இரண்டு கி .மீ., தூரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் செல்லும் ரோட்டில் சென்றால் கோயிலை அடையலாம். விழா காலங்களில் ஆட்டோ, வேன்கள் இயஙகும். மற்றநாட்களில் நடந்தே செல்ல வேண்டும்.  ராஜபாளையத்தில் இருந்து கார்களில் வரலாம்.

 சிவன் "விஜயநாதர்' என்று பெயர் பெற்றார். ஊருக்கு திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.ஆயுள் விருத்தி வழிபாடு: எமனை சிவன் சம்ஹாரம் செய்தது பற்றி, நாவுக்கரசர்  இத்தலத்தில் பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்திக்காக, இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 30 கி.மீ., தொலைவிலுள்ள திருவைகாவூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., ஆட்டோவில் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ் வசதி குறைவு.திறக்கும் நேரம்: காலை 9- 10 மணி. மற்ற நேரங்களில் அர்ச்சகரை தொடர்பு கொண்டு சென்றால் சுவாமி தரிசனம் செய்யலாம்.
போன்: 94435 86453, 93443 30834.

இருப்பிடம்: விழுப்புரத்திலிருந்து 38 கி.மீ. தூரத்திலுள்ள செஞ்சி சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள செல்லப்பிராட்டி கூட்ரோட்டிற்கு ஆரணி பஸ்சில் செல்ல வேண்டும். கூட்ரோடு ஸ்டாப்பிலிருந்து அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சக்தி பீடங்கள்: இக்கோயிலை சுற்றி எட்டு திசையிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன.  வடக்கே காஞ்சிபுரம் காமாட்சி, வட கிழக்கே மயிலாப்பூர் கோலவிழி அம்மன், கிழக்கில் கடும்பாடி அம்மன், தென்கிழக்கே திருவக்கரை வக்கிரகாளி, தெற்கே சமயபுரம் மாரியம்மன். தென்மேற்கே செஞ்சி கமலக்கன்னி, மேற்கே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, வடமேற்கே படவேடு ரேணுகா பரமேஸ்வரி அருள்பாலிக்க, நடுநாயகமாக செல்வ லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.கோயில் அமைப்பு: ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் ஆகியவை சோழர் கால கட்டட அமைப்பை ஒத்துள்ளது. பிரகாரத்தில் சிவ சக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர். உள் மண்டபத்தில் மகா கணபதி, சுப்ரமணியர் சன்னதிகள் உள்ளன.

தல சிறப்பு: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். தஞ்சாவூர்  பிரகதீஸ்வரர் கோயில் விமானம் போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தக்கோயிலுக்குள் செல்ல முடியும் என்ற ஐதீகம் நீண்ட காலமாக இருக்கிறது.
திருவிழா: மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.
திறக்கும் நேரம்: காலை 5- 12, மாலை 4- 9 மணி.
இருப்பிடம்: திருவாரூர் நகரின் நடுவில் உள்ள தியாகராஜர் கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது.

 கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார் தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அநியாயம்
செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை "ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர். அம்பாள் "அகிலாண்டேஸ்வரி' என்ற திருநாமத்துடன் அருளுகிறாள்.
சூல அர்த்தநாரீஸ்வரர்: சக்தியுடன் சிவன் ஒன்று சேர்ந்துள்ள அம்சமே அர்த்தநாரீஸ்வரர். இத்தலத்தில் சக்திக்குரிய சூலத்திலும் சிவன் அமர்ந்துள்ளது விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி என்னும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார். தாயை விட்டு பிரிந்துள்ள
பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னை நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்: அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இரண்டும் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்துள்ளது. பிரதோஷ காலத்தில் இவர்களை வணங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும். சிவனுக்கு பின் புறம் கிருஷ்ணர் மகாலட்சுமி யுடன் இருக்கிறார். பிரகாரத்தில் நின்ற நிலையில் நவக்கிரகங்கள், சுப்பிரமணியர், பஞ்சலிங்கங்கள், பைரவர், சூரியன், நாயன்மார்கள் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம்,  மகாசிவராத்திரி, சனிப்பெயர்ச்சி.
இருப்பிடம்:  சேலத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 40 கி.மீ., தூரத்தில் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளது. ஆத்தூரில் இருந்து டவுன்பஸ்கள் செல்கின்றன.
நடை திறப்பு: காலை 6 - 9 , மாலை 4 - 8 மணி.
--

இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் இருக்கிறது.

முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை நடக்கும் தலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலாகும். கந்தசஷ்டியை ஒட்டி இங்கு சென்று வாருங்கள்.

ஐந்தலை பொதிகை

வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.
இத்திருகோயிலில் உத்திராயண காலத்தில் பங்குனி 23-ந் முதல் 29-ந் தேதி வரை (ஏப்ரல் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை) ஒரு வார காலம் காலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பானதொரு அதிசய நிகழ்வாக நடைபெறுகிறது.
முதலில் சிவலிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக சிவலிங்கத்தின் மையப்பகுதியை அடைகிறது. பின்னர் கீழே இறங்கி மறைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு விண்ணம்பள்ளி செல்கின்ற அரசு பஸ்சில் சென்று விண்ணம்பள்ளியில்இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இந்த அதிசய நிகழ்வை காணலாம்

------------------------------------------------------------------------------------------------------------------
மதங்கீச்வர பெருமான் , காஞ்சிபுரம்(பேருந்து நிலையம் அருகில் )மிகப்பெரிய சோடச லிங்கமாக அருள்புரிகிறார்.இத்திருகோயில் தொல்பொருள் இலாகா வசம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------
                                      பூமியில் கண்ட சொர்க்க லோகம் - பொதிகை மலை 
         (ஏக பொதிகை, ஐந்தலை பொதிகை, நாக பொதிகை)


1.கேட்டவரம்பாளையம்2. பால் வார்த்து வென்றான் 3. வாழக் குழி  . 4.வீர பயங்கரம்
5. கண்ணாமூச்சி 6. வட்ட முத்தம்பட்டி 7. கரையேறவிட்ட குப்பம் 8. எழுத்தாணிவயல்
9. நல்லமரம் 10. திருமதி குன்னம் 11. திருமாணிக்கம் 12. எப்போதும் வென்றான்
13. குதிரை மொழி 14. கானாது கண்டான் 
15. கொழுக்கட்டை குடி 16. நாயகனைப் பிரியாள்      17. அக்கரை கொடிவேர்18. மூவிருந்தாளி19. பிச்சைத்தலைவன்பட்டி20. தலையில்லாப் பெரும்பாக்கம்21. கண் கொடுத்த வனிதம்  22. அரிய கோஷ்டி23. சேலை24. உலகம்25. எருமை வெட்டிபாளையம்

 All these villages has got lot of historic secrets...!!! தெய்வத் தமிழ் திருநாட்டின் ஒவ்வொரு ஊருக்கான பெயர்களும்… அருந்தெய்வத்துவ அதிமஹா உன்னத சிறப்பை பெற்று விளங்குகின்றன..

----------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார். “நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்” என்று அறிவித்தார். பின்…

” பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!”

- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர். பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
யுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வேத விளம்பீசன் ). கள்ள குறிச்சி தாலூகா விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பூர் உள்ளது..,
-- -------------------------------------------------------------------------------------------------------------------------

சிவலிங்க திருமேனி, வெளி பிரகாரம் , திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருகோயில் , விழுப்புரம் மாவட்டம் — https://www.facebook.com/durga.lakshmi.98?fref=photo


வியாசரின் மகனான சுகப்பிரும்ம ரிஷி பூஜித்த சிவ லிங்கங்கள் மிகக் குறைவு. அவற்றில் இரண்டு லிங்கங்கள், தமிழகத்தில் உள்ள இரண்டு திருத் தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு திருத்தலம் சேலத்திலும், மற்றொன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள களத்தூரிலும் உள்ளது.

சேலம் மாநகரில் உள்ள திருக்கோயில் மிகப் புகழோடு விளங்குகிறது. அங்கே, ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசுகவனேஸ்வரர். களத்தூரில் குடிகொண்ட ஈசனின் திருநாமம் ஸ்ரீசுகநாதேஸ்வரர்.கருவறையில், ஸ்ரீசுகநாதேஸ்வரரின் லிங்கத் திருமேனி கொள்ளை அழகு! பாணம் உயர்ந்தும், வட்ட வடிவ ஆவுடையாராகவும் காணப்படும் திருமேனியைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆவலூரில் இருந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. சென்றால் களத்தூரை அடையலாம்.பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் கோயிலுக்கு அருகில் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. எனவே, உங்கள் ஊரில் இருந்தே அவற்றை வாங்கிச் செல்வது உத்தமம்.

அமிர்தாம்பிகை உடனாய கைலாசநாதர் ஆலயம்

கௌதம மகரிஷி பூசித்த இறைவன் கைலாசநாதர் சுமார் 5 அடிஉயர லிங்க திருமேநியராக கருவறையில்

கம்பீரமாக காட்சியளிக்கிறார்.இங்கு மஹா விஷ்ணு கெளதமருக்கு காட்சி கொடுத்தால் 'விஷ்ணுபுரம்' என பெயர் பெற்றது.தேவார பாடல் பெற்ற 'திரு வீழி மிழலை " வெகு அருகில் உள்ள தலம் இது.மற்றொரு சிவாலயமும் இங்கு உண்டு.விஷ்ணுபுரம் குடந்தை---பூந்தோட்டம் சாலையில் எரவாஞ்சேரி அடுத்து உள்ளதுஅன்பர்களே திருவீழிமிழலை செல்பவர்கள் தவறாமல் கண்டு வணங்குங்கள்.கைலாசநாதரின் அருள்பெறுங்கள் .காண்பதற்கு அரிய சிவாலயம் இது



தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மனைவியும், தன்னை

தாய்க்கு தாயாக வளர்த்த தன சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன், நம் தமிழன்,கட்டிய கோயில் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது!


இது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்ககூடியது அல்ல.அதுவும் கோயில் நகரமாம் குடந்தை நகரின் மையப்பகுதியில் பட்டீஸ்வரம் அருகில் சோழன் மாளிகை எனப்படும் இடத்தில் தான் இந்த பள்ளிப்படை ஆலயம் உள்ளது.இங்கு தான் ராஜராஜ சோழன் தன வாழ்நாளில்கடைசி நாட்களை கழித்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.தற்போது இந்த ஆலயத்தை ராமசாமி கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்.


சிதிலமடைந்த ஆலயம் செப்பனிடப்படுள்ளது என்றாலும் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் வருகை இன்மையால். வயதான் பெரியவர் ஒருவர் ஆலயத்தை கவனித்து வருவதாக கேள்வி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

புஷ்டி நரசிம்மர் திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

தேவம்பாடி வலசு தர்ப்பண கிராமம்


கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம்அறியப்படாத பழமையான கோயிலான சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்தஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டுமூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்தூண்கள்பராமரிப்பின்றி கடும் மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் இவற்றில் இருந்து தெய்வாதீனமாக நிற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.
ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில்3வது கி.மீட்டரில் பெரியதொரு ஆலமரத்தின் எதிரே கருவேல மரங்களால் மறைக்கப்பட்ட நிலையில்அவ்வழியே கடந்து செல்வோருக்கு புலப்படாத நிலையில் உள்ளது சின்னக்கோயில் என அழைக்கப்படும்ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். "சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.


கோயிலின் சிறப்பு: தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறார்.சன்னதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற சக்கரத்திற்கு பதிலாக சங்கும் இடமாறி உள்ளது. சிலையை சுற்றிலும் பார்டர் போல்பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினைகுணப்படுத்துவதாக நம்பப்படுகிறது என்றார்.



ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில்

300 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் தை மாதத்தில் தொடங்கி பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனை ரெகுநாதபட்டர் ஒருகால பூஜை செய்து பராமரித்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி எனும் ஊரின் வடக்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது வெங்கட்டாம்பேட்டை.  


சூரனை வீழ்த்திவிட்டு, அந்த உக்கிரம் தணியாமல் கடும் கோபத்துடன் இருந்தாராம் முருகக் கடவுள், தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, முருகப்பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் காட்டியபடி எதிரே நின்றாராம் விநாயகர். அதைக் கண்டு சிரித்ததில் கந்தனின் கடும் கோபம் முழுவதும் காணாமல் போனது என்றொரு கதை உண்டு. எனவே இங்கு ஆறுமுக விநாயகராக அருட்காட்சி தருகிறார். சிறிய ஆலயம்தான் என்றாலும் ஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கிற ஆலயம் இது. ஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல ஞானங்களையும் யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில் நீராடிவிட்டு, சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பையும் பலனையும் தரும். ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, ஜீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால், வியாபாரம் விருத்தியாகும். கல்வியில் மேன்மை பெறலாம். மூலவர் ஆறுமுக விநாயகர், தவிர சுந்தர விநாயகரும், ஆண்டித் திருக்கோலத்தில் முருகப்பெருமானும், காசிவிஸ்வநாதர் மற்றும் காளியம்மனும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி, தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. இங்கே புலிப்பாணி சித்தரும் போகரும் காட்சி தருகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சக்ரம் (சுயம்பு ) !!!!
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஸ்ரீசக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஸ்ரீசக்கரம் என்றே தெரியும். UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.,

-------------------------------------------------------------------------

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

ஸ்ரீ அகஸ்திய விஜயம் தான் குரு காட்டும் பாதை 

பொன்னான தீணீருமேனீஸ்வரர்


பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரரின் அற்புத தோற்றம்...குடிசையிலே கொலுவிருந்தாலும் குன்றாத பேரழகு பெருமான் இவர்..இவர் இப்படி காட்சியளிப்பது சிவராத்திரி நன்னாளில் 

திருக்கடையூர் அருகில் உள்ளது இத்தலம்.இப்பெருமான் வெகு விரைவில் கோயிலில் குடிபுகவேண்டும் என்பதே ஆன்மீக அன்பர்களின் விருப்பமாக உள்ளது .ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடையமஹாதேவர் திருக்கோவில், கேசாவரம். அரக்கோணம் தாலுகா.

முதலாம் குலோத்துங்க சோழன் அரசி ஏழுலகமுடையாள் நேரடிஆணைக்கிணங்க கட்டப்பட்டது.காலம் (கி.பி. 1070 - 1120இத்திருகோயில் ஒரு நூற்றாண்டாய் சமய மற்றும் சமூக விரோதிகளால் சிதைத்து சேதப்படுத்தப்பட்டு விட்டது .
தற்சமயம் இக்கோவில் பூஜை மற்றும் புனர்நிர்மாணப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் சேவா டிரஸ்ட் என்ற பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன. தற்சமயம் அடியார்கள் பொருளுதவியுடன் நந்தி பிரதிஷ்டை, மேற்கூரை அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
தக்கோலம் தலத்திலிருந்து 1 1/2 கி.மீ மற்றும் திருவாலங்காடு, திருமால்பூர், கூவம், இளமையின்கோட்டூர், கடம்பத்தூர் போன்ற எண்ணிலடங்கா சிவதலங்களை சுற்றுவட்டாரங்களில் கொண்டுள்ளது. அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 8 கி.மி தொலைவில் உள்ளது.
திருப்பணிக்கான சேவையில் தங்களை இணைக்க விரும்பிடும் ஆன்மீக அன்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய கைபேசி எண்கள்- 8148996154, 9840384201, 9578537949, 9976978492, 8122274612, என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
-- 

கும்பகோணம்-அணைக்கரை சாலையில் பந்தநல்லூர் பிரியும் சாலையில் இரண்டு கிமி சென்றால் குறிச்சி என்ற பெரிய கிராமம் வரும் அதில் வங்கி கட்டிடத்தினை ஒட்டிய சிறு சந்து வழியே சென்றால் உள்ளது சிவன் கோயில் . இறைவன் அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூரிலும் கடம்பூரிலும் வாழ்வாங்கு வாழும் இறைவன் இங்கு பாழடைந்த கோயிலில் , பூசை அவ்வப்போது நடக்குமாம்,அபிஷேகம்? மிக பெரிய பால் பண்ணை அதிபர் வீடு இதன் சந்திற்கு எதிரில் உள்ளது ஆயிரம் பேருக்குமேல் வசிக்கும் இந்த ஊர் இறைவன் துணை சன்னதிகளில் வெறும் மாடம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

அருள்மிகு பொன்னான தீணீருமேனீஸ்வரர் திருக்கோயில்
உரத்தூர்,இலால்குடி, திருச்சி மாவட்டம்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கல்லுமடை எனும் கிராமத்தில் அமைந்துள்ள திருநாகேசுவரமுடையார் சிவன் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில்  சிவலிங்கத்திலிருந்து இரண்டு ஒளிக்கீற்றுகள் பாய்வதைக் காணலாம். இங்குள்ள அம்மன் சிலை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தானாகவே நிறம் மாறுகிறது.  பச்சை, ஊதா, மஞ்சள் நிறங்களில் மறி மாறி காட்சி அளிக்கிறது. இந்த ஆலயம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.


நகரத்தாரின் குலதெய்வ கோயில்களான ஒன்பதில் ஒன்று, மாத்தூர். காரைக்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்திலுள்ளது. இங்குள்ள கோயிலின் தலவிருட்சம்  மகிழ மரமாகும். இது பல நூறு ஆண்டுகள் பழமையானது. இன்றும் வளமாக உள்ளது. இம்மரம் என்றும் ஒரே மாதிரி வளமாலும், வளர்ச்சி குன்றாமலும்  இருக்கிறது. இதில் தோன்றும் பூக்கள் காய்ப்பதில்லை. இத்தல விருட்சத்தின் ஆலயத்தின் உள்பிராகாரத்திலேயே ஆனந்தமுனீஸ்வரர் பீடம் அமைக்கப்பட்டு  வழிபடப்படுகிறார். பொதுவாக ஆலய வளாகத்திற்குள் பிராகாரங்களுக்கு வெளியே தனித்திருக்கும் முனீஸ்வரன் இங்கே கோயிலுக்குள்ளேயே பீடம்  கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தஞ்சை-கும்பகோணம் சாலையிலுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலில் ராம பக்த காரியசித்தி ஆஞ்சநேயர், வடக்கு நோக்கி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு நம் பிரார்த்தனையை மனதில் நினைத்து கோயிலில் தரும் மட்டைத்தேங்காயைத் துணியில் மூடி சந்நதியில் கட்டி விடுவர். பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம், ஆராதனைகள் செய்வர். அப்படி அபிஷேகம் செய்யும் போது ஆஞ்சநேயரின் முகம் படிப்படியாக சிவப்பு நிறத்திற்கு மாறுவதையும், திருமுகத்தில் ஓடும் நரம்புகளையும் காணலாம்.

கண்ணமங்கலம் சந்தைமேடு பகுதியில் ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 64 அடி உயரம் உள்ளது. உலகிலேயே உயர்ந்த சிவ லிங்கத்தை கொண்ட தலமாக இக்கோயில் விளங்குகிறது. இந்த கோயில் 8 மாடிகளை கொண்டு உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிவ லிங்கத்தின் உச்சி வரைக்கும் சென்று தரிசிக்கும் வசதி உள்ளது. இக்கோயில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மெயின் சாலையில் அமைந்துள்ளது. சாலையில் செல்லும்போதே சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். இந்த கோயிலால் இப்பகுதியே தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது.

திருநெல்வேலியில் குற்றாலம் சாலையில் அமைந்துள்ள தொண்டை நாயனார் ஆலயத்தில் சனீஸ்வரர் வலது கையில் கிளியுடன் அருள்பாலிக்கின்றார். காக்கை  வாகனரான சனி பகவான் கையில் கிளியை ஏந்தியிருப்பது அதிசயம்தானே! 

திருச்சி-லால்குடி சாலையில், லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் பூவாளூரில் அமைந்துள்ளது, திருமூலநாத சுவாமி ஆலயம். இங்கே மேற்குப் பிராகாரத்தில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார் தண்டாயுதபாணி. தன்னை நாடும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் இந்த தண்டாயுதபாணியின் முகத்தில் பிரதிபலிக்கும் அமைதியும் சாந்தமும் நம்மை சிலிர்க்க வைக்கும்!

திருச்சி மத்திய பேருந்து நிலையம்-கே.கே. நகர் சாலையில், 4 கி.மீ. தொலைவில் அய்யப்ப நகரில் அமைந்துள்ளது அழகான முருகன் ஆலயம். வள்ளி-தெய்வானையுடன் அருள் புரியும் இந்த முருகப்பெருமானை ஆதவன் கந்தசஷ்டி திருவிழாவின்போது ஆறு நாட்கள் தன் பொற்கதிர்களால் ஆராதிப்பதைக் காண கண் கோடி வேண்டும். அந்த ஆறு நாட்களும் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

திண்டுக்கல் திருமலைக்கேணி கீழ் பழனி முருகன் கோயிலில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி நளினமாக தண்டாயுதபாணியாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த கோயிலில் முருகப்பெருமான் பாலகன் என்பதால் அவருக்கு அருகில் வள்ளி-தெய்வானை கிடையாது. மேலும் கோயிலில் தனிச் சந்நதியிலும் இவர்களை காண முடியாது. முருகன் சந்நதிக்கு இருபுறமும் தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இந்த தீர்த்தங்களின் வடிவில் வள்ளி-தெய்வானை அருள் புரிவதாக நம்பப்படுகிறது. இங்கு வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது கந்தன்குடி. கும்பகோணம் - காரைக்கால்; மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில். வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம். அதன் மேல் விதானத்தில் அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகே தெய்வானைக்கு தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் கைகளில் கிளியோடு, தவம் முடித்த அருட்களை பொலிய, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்து அருள்கிறாள், தெய்வானை. 


சிறியதாக இருந்தாலும் நின்று பார்க்க வைக்கும் தெய்வீக வசீகரம் பொலியும் திருச்சந்நதி. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும் அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தேவசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். சொந்த ஊருக்கு வரும் தலைமகனை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். 



சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும், அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறையை நெருங்கும்போது ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இதற்கா இவ்வளவு பயந்தோம் என்ற ஆன்ம பலம் சேர, நாள்பட்ட துயரங்கள் எல்லாம் தூசாகப் பறந்து போகின்றன. வள்ளியும், தெய்வானையும் கந்தனின் ஆட்கொள்ளும் அதிசயத்துக்கு அந்தரங்க சாட்சியாகக் காட்சி தருகிறார்கள்.  இந்த கந்தவேளை அருணகிரிநாதர் பரவசமாகப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள ஊர் தெற்கு கருங்குளம். இங்கு  ‘பூ’  சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர பெருவிழாவில் ஆண்களே தயாரித்து ஆண்டவனுக்குப் படைக்கும் கொழுக்கட்டை வழிபாடு பிரபலம். இந்த ஆலயத்தில் அதிசய மரம் ஒன்று உள்ளது. பங்குனி உத்திர நாளை ஒட்டி சில நாட்கள் மட்டுமே இந்த மரம் பூத்துக் குலுங்கும். இந்த பூ மரத்தின் நிழலில் தான் இங்குள்ள சாஸ்தா அருள்பாலிக்கிறார். இந்த மரத்தின் மலர்களைச் சேகரித்து தேங்காய் எண்ணெயில் போட்டால் அது சிவப்பு நிறமுடைய மணமிக்க எண்ணெயாக மாறும். இந்த எண்ணெய், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து. அத்துடன் அதனை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக கருகருவென வளருமாம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திருச்சி, பழையாறைக்கு அருகே 'பஞ்சவன்மாதேவீசுவரம்' என்றொரு கோவில் உள்ளது. முதலாம் இராஜேந்திரன் தன் தாய் பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பிய 'பள்ளிப்படை கோவில்' இது. தாய் ஒருத்திக்காக கட்டப்பட்ட ஒரே கோவில் தமிழகத்தில் இது மட்டும்தான்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது அருள்மிகு குஞ்சாயம்மன் ஆலயம். கருவறையில் குஞ்சாயம்மன் மற்றும் கண்ணடச்சி  அம்மன் என இரு அம்மன்கள் திருவருள்பாலிக்கின்றனர். ஆடி மாதம் இங்கு நடைபெறும் ஆகாய பூஜை மிகவும் விசித்திரமானது. ஆடி 18ம் தேதி பொங்கல்  வைத்து, ஆடு, பன்றி,  கோழி இவைகளின் ரத்தத்தை எடுத்துக் கலந்து மண் சட்டியில் வைத்து மாசி கருப்பு எனும் கருப்பண்ண சாமிக்கு ஆகாய பூஜை  நடத்தப்படும். பூஜை செய்யும் பூசாரியை சங்கிலியால் கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். பூசாரி அருள் வந்து ஆடும் போது அந்த மண்சட்டி காணாமல் போய்விடும்.  மறுநாள் அந்த மண் சட்டியை தேடிப் போக ஏதாவது ஒரு மரத்தடியில் இருக்கும் அந்த மண் சட்டியிலிருந்த உணவு காணாமல் போயிருக்கும். அந்த மண்  சட்டியை இக்குலத்தில் பிறந்து வெளியில் திருமணமாகிச் சென்ற பெண்கள் சூடம் ஏற்றி வணங்கி விட்டு வருவர். அந்த சமயத்தில் ஆண் வாரிசு யாரும் உடன்  செல்லமாட்டார்கள். 

திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பனமங்கலம் என்ற கிராமம். இங்கு வடிவாம்பிகா சமேதவாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தல ஈசன் அருள்பாலிக்கும் பாணலிங்கத்தின் உய ரம் 11 அடி 3 அங்குலம். அதில் இரண்டரை அடி உயரம் ஆவுடையார் மீதும் மீதமுள்ள பகுதி ஆவுடையாரின் உள்ளேயும், ஆவுடையாருக்கு அடி யிலும் பதிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருமேனியில் பட்டை பட்டையான பதிவுகள் காணப்படுகின்றன. உளிபடாத லிங்கத் திருமேனி இது. 

சென்னை கச்சாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கூர்மாசனம் (ஆமை), அஷ்ட நாகாசனம் (8 நாகங்கள்), சிம்மாசனம் (சிங்கம்), யுகாசனம் (காலங்கள்), கமல - விமலாசனம் (தாமரை மலர் குவிந்தும், விரிந்தும்) என 5 இருக்கைகளில் அமர்ந்து காட்சி தருகிறார். சிவபெருமான், அனைத்து ஆலயங்களிலும் லிங்க உருவமாக தரிசனம் தருகிறார். ஆனால், இத்திருக்கோயிலில்தான் மூல லிங்கத்தின் பின்புறம் ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக, மனோன்மணி தாயாருடன் காட்சி 
தருகிறார்.

கும்பகோணம் - மயிலாடுதுறை அருகே உள்ளது நன்னிலம். இங்குள்ள ' திருகொண்டீஸ்வரர்' ஆலயத்தில் உள்ள லிங்கம் பிளவுபட்டு இருக்கும். இவ்வாலத்திலுள்ள ஜுர தேவருக்கு  தீராத ஜுரம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசி, மிளகு ரசம் வைத்து சுவாமி நைவேத்தியம் செய்து சாப்பிட்டால் தீராத  ஜுரம் விலகும் என்பது ஐதீகம்.

எத்தனையோ பெருமாள் கோவில்களுக்கு சென்றிருப்பீர்கள், அங்கெல்லாம் அமர்ந்த நிலை பெருமாள், பள்ளி கொண்ட பெருமாள், நின்ற நிலை பெருமாளையே பார்த்திருப்பீர்கள் ஆனால், எட்டு கைகளுடன், அவற்றில் ஆயுதங்கள் தரித்து கம்பீரமாய் புன்னகை தவழும் முகத்துடன் நிற்கும் பெருமாளை பார்த்திருப்பீர்கள? அப்படிப்பட்ட பெருமாளை காஞ்சிபுரம் 'அஷ்டபுஜகரம் பெருமாள் கோவி'லில் காணலாம்.

புதுகோட்டைக்கு அருகில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற ஊரில் உள்ள ' பைரவர் கோவிலில் பைரவரின் உருவம் பத்து அடிக்கு மேல் உயரமுள்ளது. பைரவருக்கு ஏணி மீது ஏறியே தினமும் அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு வெள்ளிக் கிழமை சந்தனக் காப்பும், வடை மாலையும் சாத்துகின்றனர். 
திருநெல்வேலி மாவட்டத்தில் 'பராஞ்சேரி' என்ற ஊரில் உள்ள 'துர்க்கை கோவி'லில் துர்க்கை அம்மன் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். பள்ளிகொண்ட துர்க்கை சிலையை வேறு எங்கும் காண முடியாது.

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூர் கிராமத்தில் அன்னபூரணி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிவில் பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கோரக்கர் சித்தர் வந்து தங்கி பூஜைகள் செய்து வந்தார். பின்னர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்ததாக கோரக்கர் சித்தர் எழுதிய தனிநூல் தெரிவிக்கிறது. கோயில் வளாகத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தனி சன்னதி உள்ளது. இந்த ச+-ன்னதியில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பவுர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்தது.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள 'பிள்ளைபாளையம்' என்னுமிடத்தில் உள்ள புறாக்கோவிலுள்ள சிவலிங்கம் எங்குள்ளது தெரியுமா? நட்டுநடு வயலில்  சேறறுக்குள்ளே உள்ளது. இந்த சிவனுக்கு 'வன்மீக நாதர்' என்று பெயர்.
'செம்பாக்கம்' 'ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோவி'லின் தலவிருட்சம் 'நாவல் மரம்.' சூரியன், சந்திரன், புதன் முதலான ஒன்பது கிரகங்களும் இங்கு வழிபட்டது இக்கோவிலின் தனிச் சிறப்பு.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 'மங்கலம்' எனும் கிராமத்தில் உள்ளது அரவாண்டியம்மன் கோவில். இங்கு வேறு எந்த புத்தர் சிலையிலும்  காணப்படாத அழகிய மீசையுடன் கூடிய தியானக் கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையை காணலாம். உள்ளூர் மக்கள் இப்புத்தர் சிலையை 'செட்டியார் சாமி' என அழைத்து வழிபடுகிறார்கள்.

எந்த ஓர் ஆலயத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள்தான் இருக்கும். ஆனால் தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆய்க்குடி எனும் கிராமத்தில் உள்ள 'ஸ்ரீ பாலசுப்ரமண்யர் ஆலய'த்தில் ஐந்து தலவிருட்சங்கள் உள்ளன. அவை அரசு, வேம்பு, மா, மாதுளை, கறிவேப்பிலை.
காஞ்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் அருகிலுள்ள 'சோமங்கல சோமநாதர் கோவில்.' இங்குள்ள நடராஜர் எங்குமில்லாத சதுர தாண்டவ கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலும் கோவிலைச் சுற்றி வேலி போன்று 12 எல்லைக் கோவில்களுடன் சரியான சதுர அமைப்பில் சதுர்வேதியாக அமைந்துள்ளது. எங்குமே காண இயலாததாகும். இதனாலேயே இக்கோவில் ' சதுர்வேதி ' என்றும் ' சதுர தாண்டவ ஆலயம் ' என்றும் கூறப்படுகிறது.   இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.
சென்னையிலுள்ள 'திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில்'தான் உலகின் முதல் கோவில் என்பது ஐதீகம். இங்கே ஒரு பாதம் மட்டுமே இருக்கும்  'ஏகபாத மூர்த்தி சிலை' உள்ளது. வேறு எந்தக் கோவிலிலும் இப்படி இல்லை. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் 'அத்தி மரம்'.

ஜெயங்கொண்டான் அருகில் உள்ள வைரவனீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சி தந்தவர். இராவணனிடம்  குட்டுப் பெற்ற விநாயகர் திருக்கோகர்ணம் கோயிலில் உள்ளார். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் அருணகிரிநாதர் வழிபட்ட விநாயகர் இருக்கிறார். பாபநாசம் அருகில் உள்ள திருக்கருவாய்க் கரைப்புத்தூரில் இருக்கும் விநாயகர் கும்ப கர்ணனை தண்டித்தவர்.


எத்தனை விநாயகர்கள்!

நவரத்தினம்        - மாணிக்க விநாயகர், இரத்தின விநாயகர்.

நவகிரகம்        - சூரிய விநாயகர், சந்திர விநாயகர்.

அஷ்டலட்சுமி        - தனலட்சுமி விநாயகர், தான்யலட்சுமி விநாயகர்.
வண்ணம்        - வெள்ளை விநாயகர், மஞ்சள் விநாயகர்.
தெய்வம்        - விஷ்ணு விநாயகர், பிரம்ம விநாயகர்.
மலர்கள்        - செண்பக விநாயகர், பாதிரி விநாயகர்.
திக்குகள்        - இந்திர விநாயகர், குபேர விநாயகர்.
பருவங்கள்        - பால விநாயகர், விருத்த விநாயகர்.
பஞ்ச பூதங்கள்    -      பஞ்ச பூத விநாயகர், பிருத்வி விநாயகர்.
ஊர்         வலஞ்சுழி விநாயகர், மயூரேச விநாயகர்.


டிரான்ஸ்ஃபர் விநாயகர்
திருப்பூரிலிருந்து கோவை செல்லும் வழியில் உள்ள விநாயகரிடம் பணி இடம் மாறுதல் கேட்டு வேண்டி, அது கிடைப் பதால் அவரை 'டிரான்ஸ்ஃபர்  விநாயகர்' என்கிறார்கள்.



                                                                                                       மரத்தடி விநாயகர்கள்


ஆத்தி மரத்தடி விநாயகர்     - சங்கரன்கோவில் 

இலந்தையடி விநாயகர்     - கீழ்வேளூர் 

புளியமரத்தடி விநாயகர்     - சென்னிமலை
ஒண்டிமரத்தடி விநாயகர்     - சென்னை-திருவான்மியூர்
ஆலடி விநாயகர்         - துடிசை
வன்னிமரத்தடி விநாயகர்     - புத்தூர்
மந்தார மரத்தடி விநாயகர்     - ஆற்றூர்
மாவடி விநாயகர்         - மயிலாடுதுறை
தாலமூல(பனை மரத்தடி) 
விநாயகர்          திருக்கச்சூர்


பதினொரு விநாயகர்கள்


திருவள்ளூர் அருகில் உள்ள திருப்பாச்சூரில் உள்ள வாகீசுவரர் கோயிலில் மூலவருக்கு முன்னால் விநாயகர் திருச்சபை உள்ளது. இச்சபையில்  வலம்புரி விநாயகர் நடுநாயகமாக வீற்றிருக்க, பத்து விநாயகர்கள் இவருக்கு இடது புறத்திலும், முன்னரும் வீற்றருள்கின்றனர். பதினொரு  விநாயகர்களும் வீற்றருளும் இந்த இடம் ‘விநாயகர் சபை’

-- 
ஸ்ரீ அகஸ்திய விஜயம் தான் குரு காட்டும் பாதை